Thiruppugal 353 Anjanavelvizhiittu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன – தனதான
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
மிங்கித மாகந கைத்துருக்கவு
மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் – நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
மந்தர மாமுலை சற்றசைக்கவு
மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு – மிளைஞோர்கள்
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு – மெவரேனும்
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
நின்பத சேவைய நுக்ரகிப்பது – மொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாசக ரப்ரசித்தனொர்
கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம – கணராஜன்
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை – யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
பந்தச டானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய – பரிபாலா
துங்கக ஜாரணி யத்திலுத்தம
சம்புத டாகம டுத்ததக்ஷிண
சுந்தர மாறன்ம திட்புறத்துறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன – தனதான
அஞ்சன வேல் விழி இட்டு அழைக்கவும்
இங்கிதமாக நகைத்து உருக்கவும்
அம்புயல் நேர் குழலைக் குலைக்கவும் – நகரேகை
அங்கையின் மூலம் வெளிப்படுத்தவும்
மந்தர மாமுலை சற்று அசைக்கவும்
அம்பரம் வீணில் அவிழ்த்து உடுக்கவும் – இளைஞோர்கள்
நெஞ்சினில் ஆசை நெருப்பு எழுப்பவும்
வம்பு உரை கூறி வளைத்து இணக்கவும்
மன்று இடை ஆடி மருள் கொடுக்கவும் – எவரேனும்
நிந்தை செ(ய்)யாது பொருள் பறிக்கவும்
இங்கு வ(ல்)லார்கள் கையில் பிணிப்பு அற
நின் பத சேவை அநுக்ரகிப்பதும் – ஒரு நாளே
குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு
அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்
கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம – கணராஜன்
கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன்
எங்கள் விநாயகன் நக்கர் பெற்று அருள்
குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை – இளையோனே
துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த
சடானன துஷ்ட நிக்ரக தும்பிகள்
சூழ் அவையில் தமிழ் த்ரய – பரிபாலா
துங்க கஜாரணியத்தில் உத்தம
சம்பு தடாகம் அடுத்த தக்ஷிண
சுந்தர மாறன் மதில் புறத்து உறை – பெருமாளே.
English
anjana vElvizhi yittazhaikkavu
mingitha mAkana kaiththurukkavu
mampuyal nErkuzha laikkulaikkavum – nakarEkai
angaiyin mUlamve Lippaduththavu
manthara mAmulai satRasaikkavu
mamparam veeNila vizhththudukkavu – miLainjOrkaL
nenjini lAsaine ruppezhuppavum
vampurai kURiva LaiththiNakkavu
manRidai yAdima rutkodukkavu – mevarEnum
ninthaise yAthupo rutpaRikkavu
minguva lArkaLkai yiRpiNippaRa
ninpatha sEvaiya nugrakippathu – morunALE
kunjara mAmuka vikkinaprapu
angusa pAsaka raprasiththanor
kompanma kOtharan mukkaNvikrama – kaNarAjan
kumpidu vArvinai patRaRuppavan
engaLvi nAyaka nakkarpetRaruL
kunRaiya rUpaka kaRpakappiLai – yiLaiyOnE
thunjali lAthasa daksharappira
panthasa dAnana thushtanigraka
thumpikaL sUzhavai yitRamizhthraya – paripAlA
thungaka jAraNi yaththiluththama
samputha dAkama duththathakshiNa
sunthara mARanma thitpuRaththuRai – perumALE.
English Easy Version
anjana vEl vizhi ittu azhaikkavum
ingithamAka nakaiththu urukkavum
ampuyal nEr kuzhalaik kulaikkavum – nakarEkai
angaiyin mUlam veLippaduththavum
manthara mAmulai satRu asaikkavum
amparam veeNil avizhththu udukkavum – iLainjOrkaL
nenjinil Asai neruppu ezhuppavum
vampu urai kURi vaLaiththu iNakkavum
manRu idai Adi maruL kodukkavum – evarEnum
ninthai se(y)yAthu poruL paRikkavum
ingu va(l)lArkaL kaiyil piNippu aRa
nin patha sEvai anugrakippathum – oru nALE
kunjara mAmuka vikkina prapu
angusa pAsa kara prasiththan or
kompan makOtharan mukkaN vikrama – kaNarAjan
kumpiduvAr vinai patRu aRuppavan
engaL vinAyagan nakkar petRu aruL
kunRaiya rUpaka kaRpaka pi(L)Lai – iLaiyOnE
thunjal ilAtha sada aksharap
pirapantha sadAnana thushta nigraka
thumpikaL sUzh avaiyil thamizh thraya – paripAlA
thunga kajAraNiyaththil uththama
sampu thadAkam aduththa thakshiNa
sunthara mARan mathil puRaththu uRai – perumALE.