Thiruppugal 354 Ambulineerai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன – தனதான
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
ஐந்தலை நாகப் பூஷண – ரருள்பாலா
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
மங்கையி னானிற் பூசையு – மணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழ லோதித் தாழலி – லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில்
மங்கியெ யேழைப் பாவியெ – னழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி யாலப் போசனி – யபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொற் காரிகை – யருள்பாலா
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புய மாரப் பூரண – மருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திரு வானைக் காவுறை – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன – தனதான
அம்புலி நீரைச் சூடிய செம் சடை மீதில் தாவிய
ஐந்தலை நாகப் பூஷணர் – அருள்பாலா
அன்புடன் நாவில் பாவது சந்ததம் ஓதி பாதமும்
அங்கயினால் நின் பூசையும் – அணியாமல்
வம்பு அணி பாரம் பூண் முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டு உழல் ஓதித் தாழலில் – இரு காதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண் துகில் ஆடைச் சேர்வையில்
மங்கி எய் ஏழைப் பாவியேன் – அழிவேனோ
கொம்பு அனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி ஆலப் போசனி – அபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்று அது வார் பொன் காரிகை – அருள்பாலா
செம் பவளம் ஆயக் கூர் இதழ் மின் குற மானை பூண் முலை
திண் புயம் ஆரப் பூரணம் – அருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென் திரு வானைக்கா உறை – பெருமாளே.
English
ampuli neeraic chUdiya senjadai meethiR RAviya
ainthalai nAkap pUshaNa – raruLbAlA
anpuda nAviR pAvathu santhatha mOthip pAthamum
angaiyi nAniR pUsaiyu – maNiyAmal
vampaNi pArap pUNmulai vanjiyar mAyac chAyalil
vaNduzha lOthith thAzhali – lirukAthil
maNdiya neelap pArvaiyil veNthuki lAdaic chErvaiyil
mangiye yEzhaip pAviye – nazhivEnO
kompanai neelak kOmaLai ampuya mAlaip pUshaNi
kuNdali yAlap pOsani – yapirAmi
konjiya vAnac chAnavi sankari vEthap pArvathi
kunRathu vArpoR kArikai – yaruLbAlA
sempava LAyak kUrithazh minkuRa mAnaip pUNmulai
thiNpuya mArap pUraNa – maruLvOnE
senthamiz pANap pAvalar sangitha yAzhaip pAdiya
thenthiru vAnaik kAvuRai – perumALE.
English Easy Version
ampuli neeraic chUdiya sem sadai meethil thAviya
ainthalai nAkap pUshaNar – aruLbAlA
anpudan nAvil pAvathu pAthamum santhatham Othi padamum
angayinAl nin pUsaiyum – aNiyAmal
vampu aNi pAram pUN mulai vanjiyar mAyac chAyalil
vaNdu uzhal Othith thAzhalil – iru kAthil
maNdiya neelap pArvaiyil veN thukil Adaic chErvaiyil
mangi ey Ezhaip pAviyEn – azhivEnO
kompu anai neelak kOmaLai ampuya mAlaip pUshaNi
kuNdali Alap pOsani – apirAmi
konjiya vAnac chAnavi sankari vEthap pArvathi
kunRu athu vAr pon kArikai – aruLbAlA
sem pavaLam Ayak kUr ithazh min kuRa mAnai pUN mulai
thiN puyam Arap pUraNam – aruLvOnE
senthamizh pANap pAvalar sangitha yAzhaip pAdiya
then thiru vAnaikkA uRai – perumALE.