திருப்புகழ் 356 ஆரமணி வாரை (திருவானைக்கா)

Thiruppugal 356 Aramanivarai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் – தனதான

ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
டாடவர்கள் வாடத் – துறவோரை

ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
பாளித படீரத் – தனமானார்

காரளக நீழற் காதளவு மோடிக்
காதுமபி ராமக் – கயல்போலக்

காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
காலைமற வாமற் – புகல்வேனோ

பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
சாமளக லாபப் – பரியேறிப்

பாய்மதக போலத் தானொடிக லாமுற்
பாடிவரு மேழைச் – சிறியோனே

சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
காரஇள வேனற் – புனமேவுந்

தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
சோதிவளர் காவைப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் – தனதான

ஆரம் அணி வாரைப் பீறி அற மேலிட்டு
ஆடவர்கள் வாட – துறவோரை

ஆசை மடல் ஊர்வித்து ஆளும் அதி பாரப்
பாளித படீரத் – தன மானார்

கார் அளக(ம்) நீழல் காது அளவும் ஓடிக்
காதும் அபிராமக் – கயல் போலக்

காலன் உடல் போடத் தேடி வரு நாளில்
காலை மறவாமல் – புகல்வேனோ

பார் அடைய வாழ்வித்த ஆரபதி பாசச்
சாமள கலாபப் – பரி ஏறி

பாய் மத கபோலத்தானொடு இகலா(ம்) முன்
பாடி வரும் ஏழைச் – சிறியோனே

சூரர் புர சூறைக்கார சுரர் காவற்கார
இள ஏனல் – புன(ம்) மேவும்

தோகை திரு வேளைக்கார தமிழ் வேதச்
சோதி வளர் காவைப் – பெருமாளே.

English

AramaNi vAraip peeRiyaRa mElit
tAdavarkaL vAdath – thuRavOrai

Asaimada lUrvith thALumathi pArap
pALitha padeerath – thanamAnAr

kAraLaka neezhaR kAthaLavu mOdik
kAthumapi rAmak – kayalpOlak

kAlanudal pOdath thEdivaru nALiR
kAlaimaRa vAmaR – pukalvEnO

pAradaiya vAzhvith thArapathi pAsac
chAmaLaka lApap – pariyERip

pAymathaka pOlath thAnodika lAmuR
pAdivaru mEzhaic – chiRiyOnE

cUrarpura cURaik kArasurar kAvaR
kAraiLa vEnaR – punamEvun

thOkaithiru vELaik kArathamizh vEtha
sOthivaLar kAvaip – perumALE.

English Easy Version

Aram aNi vAraip peeRi aRa mElittu
AdavarkaL vAda – thuRavOrai

Asai madal Urviththu ALum athi pArap
pALitha padeerath – thana mAnAr

kAr aLaka(m) neezhal kAthu aLavum Odik
kAthum apirAmak – kayal pOlak

kAlan udal pOdath thEdi varu nALil
kAlai maRavAmal – pukalvEnO

pAr adaiya vAzhviththa Arapathi pAsac
chAmaLa kalApap – pari Eri

pAy matha kapOlaththAnodu ikalA(m) mun
pAdi varum Ezhaic – chiRiyOnE

cUrar pura cURaikkAra surar kAvaR
kAra iLa Enal – puna(m) mEvum

thOkai thiru vELaikkAra thamizh vEtha
sOthi vaLar kAvaip – perumALE.