Thiruppugal 357 Alamvaiththa
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன – தனதான
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
னாக மக்கலை கற்றச மர்த்திக
ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் – தெருவூடே
ஆர வட்டமு லைக்குவி லைப்பண
மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ – ருடன்மாலாய்
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு
மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி – யதனாலே
மேதி னிக்குள பத்தனெ னப்பல
பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
வீடு கட்டியி ருக்குமெ னக்குநி – னருள்தாராய்
பீலி மிக்கம யிற்றுர கத்தினி
லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
பீற லுற்றவு யுத்தக ளத்திடை – மடியாத
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு – குடனாட
ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள்
வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை – யருள்வோனே
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன – தனதான
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன்
ஆகமக் கலை கற்ற சமர்த்திகள்
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் – தெருவூடே
ஆர வட்ட முலைக்கு விலைப் பணம்
ஆயிரக்கலம் ஒட்டி அளப்பினும்
ஆசை அப்பொருள் ஒக்க நடிப்பவர் – உடன் மாலாய்
மேல் இளைப்பும் முசிப்பும் அவத்தையுமாய்
எடுத்த குலைப்பொடு பித்தமும்
மேல் கொளத் தலை இட்ட விதிப்படி – அதனாலே
மேதினிக்குள் அபத்தன் எனப் பல
பாடு பட்டு புழு கொள் மலக் குகை
வீடு கட்டி இருக்கும் எனக்கு நின் – அருள் தாராய்
பீலி மிக்க மயில் துரகத்தினில்
ஏறி முட்ட வளைத்து வகுத்து உடல்
பீறல் உற்றவு யுத்த களத்திடை – மடியாத
பேர் அரக்கர் எதிர்த்தவர் அத்தனை
பேரை உக்ர களப் பலி இட்டு உயர்
பேய் கை கொட்டி நடிப்ப மணிக் – கழுகுடன் ஆட
ஏலம் வைத்த புயத்தில் அணைத்து அருள்
வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்கும் மனத்தில் நினைப்பவை – அருள்வோனே
ஏழிசைத் தமிழில் பயனுற்ற வெண்
நாவல் உற்று அடியில் பயில் உத்தம
ஈசன் முக் கண் நிருத்தன் அளித்து அருள் – பெருமாளே.
English
Alam vaiththavi zhicchikaL siththasa
nAka makkalai katRasa marththika
LArma naththaiyu meththiva Laippavar – theruvUdE
Ara vattamu laikkuvi laippaNa
mAyi rakkala mottiya Lappinu
mAsai yapporu Lokkana dippava – rudanmAlAy
mEli Laippumu sippuma vaththaiyu
mAye duththaku laippodu piththamu
mElko Laththalai yittavi thippadi – yathanAlE
mEthi nikkuLa paththane nappala
pAdu pattupu zhukkoLma lakkukai
veedu kattiyi rukkume nakkuni – naruLthArAy
peeli mikkama yitRura kaththini
lERi muttava Laiththuva kuththudal
peeRa lutRavu yuththaka Laththidai – madiyAtha
pEra rakkare thirththava raththanai
pErai yukraka Lappali yittuyar
pEykai kottina dippama Nikkazhu – kudanAda
Elam vaiththapu yaththila NaiththaruL
vEle duththasa marththaiyu raippavar
Eva rukkuma naththilni naippavai – yaruLvOnE
Ezhi saiththami zhiRpaya nutRave
NAva lutRadi yiRpayi luththama
eesan mukkaNi ruththana LiththaruL – perumALE.
English Easy Version
Alam vaiththa vizhicchikaL siththasan
Akamak kalai katRa samarththikaL
Ar manaththaiyum eththi vaLaippavar – theruvUdE
Ara vatta mulaikku vilaip paNam
Ayirakkalam otti aLappinum
Asai apporuL okka nadippavar – udan mAlAy
mEl iLaippum musippum avaththaiyu
mAy eduththa kulaippodu piththamum
mEl koLath thalai itta vithippadi – athanAlE
mEthinikkuL apaththan enap pala
pAdu pattu puzhu koL malak kukai
veedu katti irukkum enakku nin – aruL thArAy
peeli mikka mayil thurakaththinil
ERi mutta vaLaiththu vakuththu udal
peeRal utRavu yuththa kaLaththidai – madiyAtha
pEr arakkar ethirththavar aththanai
pErai ukra kaLap pali ittu uyar
pEy kai kotti nadippa maNik – kazhukudan Ada
Elam vaiththa puyaththil aNaiththu aruL
vEleduththa samarththai uraippavar
Evarukkum manaththil ninaippavai – aruLvOnE
Ezhisaith thamizhil payanutRa veN
nAval utRu adiyil payil uththama
eesan muk kaN niruththan aLiththu aruL – perumALE.