திருப்புகழ் 358 உரைக் காரிகை (திருவானைக்கா)

Thiruppugal 358 Uraikkarigai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான – தந்ததான

உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
ருனக்கோ மடற்கோவை – யொன்றுபாட

உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
டுனைப்பா ரிலொப்பார்கள் – கண்டிலேன்யான்

குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே
குடிக்காண் முடிப்போடு – கொண்டுவாபொன்

குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
யெனக்கூ றிடர்ப்பாடின் – மங்குவேனோ

அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
அனற்கே புனற்கேவ – ரைந்தஏடிட்

டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
லறப்பாய் வயற்கீழ – மர்ந்தவேளே

திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
சிவத்யா னமுற்றோர்சி – லந்திநூல்செய்

திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
திருச்சால கச்சோதி – தம்பிரானே.

பதம் பிரித்தது

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான – தந்ததான

உரைக் காரிகைப் பால் எனக்கே முதல் பேர்
உனக்கோ மடல் கோவை – ஒன்று பாட

உழப்பாது இபக் கோடு எழுத்தாணியைத் தேடி
உனைப் பாரில் ஒப்பார்கள் – கண்டிலன் யான்

குரைக்கு ஆன வித்யா கவிப் பூபருக்கே
குடிக்காண் முடிப்போடு – கொண்டு வா பொன்

குலப் பூண் இரத்நாதி பொன் தூசு எடுப்பாய்
எனக் கூறி இடர்ப்பாடின் – மங்குவேனோ

அரைக்கு ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய்
அனற்கே புனற்கே – வரைந்த ஏடிட்டு

அறத்தாய் எனப் பேர் படைத்தாய் புனல் சேல்
அறப் பாய் வயல் கீழ் – அமர்ந்த வேளே

திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே
சிவ த்யானம் உற்றோர் – சிலந்தி நூல் செய்

திருக் காவணத்தே இருப்பார் அருள் கூர்
திருச் சாலகச் சோதி – தம்பிரானே.

English

uraikkA rikaippA lenakkE muthaRpE
runakkO madaRkOvai – yonRupAda

uzhappA thipakkO dezhuththA NiyaiththE
dunaippA riloppArkaL – kaNdilEnyAn

kuraikkA navithyA kavippU parukkE
kudikkAN mudippOdu – koNduvApon

kulappU NirathnA thipotRU seduppA
yenakkU RidarppAdin – manguvEnO

araikkA daisutRAr thamizhkkU daliRpOy
anaRkE punaRkEva – rainthaEdit

taRaththA yenappEr padaiththAy punaRsE
laRappAy vayaRkeezha – marnthavELE

thiraikkA virikkE karaikkA nakaththE
sivathyA namutROrsi – lanthinUlsey

thirukkA vaNaththE yiruppA rarutkUr
thiruchchA lakacchOthi – thambirAnE.

English Easy Version

uraik kArikaip pAl enakkE muthal pEr
unakkO madal kOvai – onRu pAda

uzhappAthu ipak kOdu ezhuththANiyaith thEdi
unaip pAril oppArkaL – kaNdilan yAn

kuraikku Ana vithyA kavip pUparukkE
kudikkAN mudippOdu – koNdu vA pon

kulap pUN irathnAthi pon thUsu eduppAy
enak kURi idarppAdin – manguvEnO

araikku Adai sutRAr thamizhk kUdalil pOy
anaRkE punaRkE varaintha – Edittu

aRaththAy enap pEr padaiththAy punal sEl
aRap pAy vayal keezh – amarntha vELE

thiraik kAvirikkE karaik kAnakaththE
siva thyAnam utROr silanthi – nUl sey

thiruk kAvaNaththE iruppAr aruL kUr
thiruc chAlakac chOthi – thambirAnE.