Thiruppugal 361 Kavippuvai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன – தனதான
காவிப் பூவை யேவை யிகல்கவன
நீலத் தால கால நிகர்வன
காதிப் போக மோக மருள்வன – இருதோடார்
காதிற் காதி மோதி யுழல்கண
மாயத் தார்கள் தேக பரிசன
காமக் ரோத லோப மதமிவை – சிதையாத
பாவிக் காயு வாயு வலம்வர
லாலிப் பார்கள் போத கருமவு
பாயத் தான ஞான நெறிதனை – யினிமேலன்
பாலெக் காக யோக ஜெபதப
நேசித் தார வார பரிபுர
பாதத் தாளு மாறு திருவுள – நினையாதோ
கூவிக் கோழி வாழி யெனமயி
லாலித் தால கால மெனவுயர்
கூளிச் சேனை வான மிசைதனில் – விளையாடக்
கோரத் தீர சூர னுடைவினை
பாறச் சீற லேன பதிதனை
கோலக் கால மாக அமர்செய்த – வடிவேலா
ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறு படவுய
ராலைச் சோலை மேலை வயலியி – லுறைவோனே
ஆசைத் தோகை மார்க ளிசையுட
னாடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக் காவில் மேவி யருளிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன – தனதான
காவிப் பூவை ஏவை இகல்வன
நீலத்து ஆலகால நிகர்வன
காதிப் போக மோகம் அருள்வன – இரு தோடார்
காதில் காதி மோதி உழல் க(ண்)ண
மாயத்தார்கள் தேக பரிசன
காம க்ரோத லோப மதம் இவை – சிதையாத
பாவிக்கு ஆயு வாயு வலம் வர
லாலிப்பார்கள் போத கரும
உபாயத்தான ஞான நெறி தனை – இனி மேல்
அன்பா (இ)லக்கு ஆ(க்)க யோக ஜெப தப
நேசித்து ஆரவார பரிபுரம்
பாதத்து ஆளுமாறு திரு உள(ம்) – நினையாதோ
கூவிக் கோழி வாழி என மயில்
ஆலித்து ஆலகாலம் என உயர்
கூளிச் சேனை வான மிசை தனில் – விளையாட
கோரத் தீர சூரனுடை வினை
பாற சீறல் ஏனபதி தனை
கோலக்காலமாக அமர் செய்த – வடிவேலா
ஆவிச் சேல்கள் பூகம் மடல் இள
பாளைத் தாறு கூறுபட உயர்
ஆலைச் சோலை மேலை வயலியில் – உறைவோனே
ஆசைத் தோகைமார்கள் இசை உடன்
ஆடிப் பாடி நாடி வரு திரு
ஆனைக் காவில் மேவி அருளிய – பெருமாளே.
English
kAvip pUvai yEvai yikalkavana
neelath thAla kAla nikarvana
kAthip pOka mOka maruLvana – iruthOdAr
kAthiR kAthi mOthi yuzhalkaNa
mAyath thArkaL thEka parisana
kAmak rOtha lOpa mathamivai – sithaiyAtha
pAvik kAyu vAyu valamvara
lAlip pArkaL pOtha karumavu
pAyath thAna njAna neRithanai – yinimElan
pAlek kAka yOka jepathapa
nEsith thAra vAra paripura
pAthath thALu mARu thiruvuLa – ninaiyAthO
kUvik kOzhi vAzhi yenamayi
lAlith thAla kAla menavuyar
kULic chEnai vAna misaithanil – viLaiyAdak
kOrath theera cUra nudaivinai
pARac cheeRa lEna pathithanai
kOlak kAla mAka amarseytha – vadivElA
Avic chElkaL pUka madaliLa
pALaith thARu kURu padavuya
rAlaic chOlai mElai vayaliyi – luRaivOnE
Asaith thOkai mArka Lisaiyuda
nAdip pAdi nAdi varuthiru
Anaik kAvil mEvi yaruLiya – perumALE.
English Easy Version
kAvip pUvai Evai ikalvana
neelaththu AlakAla nikarvana
kAthip pOka mOkam aruLvana – iru thOdAr
kAthil kAthi mOthi uzhal ka(N)Na
mAyaththArkaL thEka parisana
kAma krOtha lOpa matham ivai – sithaiyAtha
pAvikku Ayu vAyu valam vara
lAlippArkaL pOtha karuma up
AyaththAna njAna neRi thanai – ini mEl anpA
(i)lakku A(k)ka yOka jepa thapa
nEsiththu AravAra paripuram
pAthaththu ALumARu thiru uLa(m) – ninaiyAthO
kUvik kOzhi vAzhi ena mayil
Aliththu AlakAlam ena uyar
kULic chEnai vAna misai thanil – viLaiyAda
kOrath theera cUranudai vinai
pARa seeRal Enapathi thanai
kOlakkAlamAka amar seytha – vadivElA
Avic chElkaL pUkam madal iLa
pALaith thARu kURupada uyar
Alaic chOlai mElai vayaliyil – uRaivOnE
Asaith thOkaimArkaL isai udan
Adip pAdi nAdi varu thiru
Anaik kAvil mEvi aruLiya – perumALE.