திருப்புகழ் 365 பரிமளம் மிக உள (திருவானைக்கா)

Thiruppugal 365 Parimalammigaula

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன – தனதான

பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு – முகில்போலே

பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டி யேவிய
பணிவிடை களிலிறு மாந்த கூளனை – நெறிபேணா

விரகனை யசடனை வீம்பு பேசிய
விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
வெகுளியை யறிவது போங்க பாடனை – மலமாறா

வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது – மொருநாளே

கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநக – ருறைபேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
கரிவன முறையகி லாண்ட நாயகி – யருள்பாலா

முரணிய சமரினில் மூண்ட ராவண
னிடியென அலறிமு னேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன் – மருகோனே

முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன – தனதான

பரிமளம் மிக உள சாந்து மா(ன்) மத(ம்)
முருகு அவிழ் வகை மலர் சேர்ந்து கூடிய
பல வரி அளி துயில் கூர்ந்து வானுறு – முகில்போல

பரவிய இருள் செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலர் அடி வேண்டி ஏவிய
பணி விடைகளில் இறுமாந்த கூளனை – நெறி பேணா

விரகனை அசடனை வீம்பு பேசிய
விழலனை உறு கலை ஆய்ந்திடா முழு
வெகுளியை அறிவது போம் கபாடனை – மலம் மாறா

வினையனை உரை மொழி சோர்ந்த பாவியை
விளிவு உறு நரகு இடை வீழ்ந்த மோடனை
வினவி முன் அருள் செய்து பாங்கின் ஆள்வதும் – ஒரு நாளே

கருதலர் திரி புரம் மாண்டு நீறு எழ
மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி
கழல் அணி மலை மகள் காஞ்சி மா நகர் – உறை பேதை

களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடல் உடை உலகினை ஈன்ற தாய் உமை
கரி வனம் உறை அகிலாண்ட நாயகி – அருள் பாலா

முரணிய சமரினில் மூண்ட ராவணன்
இடி என அலறி முன் ஏங்கி வாய்விட
முடி பல திருகிய நீண்ட மாயவன் – மருகோனே

முதல் ஒரு குறமகள் நேர்ந்த நூல்இடை
இரு தன கிரி மிசை தோய்ந்த காமுக
முது பழ மறை மொழி ஆய்ந்த தேவர்கள் – பெருமாளே.

English

parimaLa mikavuLa sAnthu mAmatha
murukavizh vakaimalar sErnthu kUdiya
palavari yaLithuyil kUrnthu vAnuRu – mukilpOlE

paraviya iruLseRi kUnthal mAtharkaL
paripura malaradi vENdi yEviya
paNividai kaLiliRu mAntha kULanai – neRipENA

virakanai yasadanai veempu pEsiya
vizhalanai yuRukalai yAynthi dAmuzhu
vekuLiyai yaRivathu pOngka pAdanai – malamARA

vinaiyanai yuraimozhi sOrntha pAviyai
viLivuRu narakidai veezhntha mOdanai
vinavimu naruLseythu pAngi nALvathu – morunALE

karuthalar thiripura mANdu neeRezha
malaisilai yorukaiyil vAngu nAraNi
kazhalaNi malaimakaL kAnji mAnaka – ruRaipEthai

kaLimayil sivanudan vAzhntha mOkini
kadaludai yulakinai yeenRa thAyumai
karivana muRaiyaki lANda nAyaki – yaruLbAlA

muraNiya samarinil mUNda rAvaNan
idiyena alaRimu nEngi vAyvida
mudipala thirukiya neeNda mAyavan – marukOnE

muthaloru kuRamakaL nErntha nUlidai
yiruthana kirimisai thOyntha kAmuka
muthupazha maRaimozhi yAyntha thEvarkaL – perumALE.

English Easy Version

parimaLam mika uLa sAnthu mA(n) matha(m)
muruku avizh vakai malar sErnthu kUdiya
pala vari aLi thuyil kUrnthu vAnuRu – mukilpOla

paraviya iruL seRi kUnthal mAtharkaL
paripura malar adi vENdi Eviya
paNi vidaikaLil iRumAntha kULanai – neRi pENA

virakanai asadanai veempu pEsiya
vizhalanai uRu kalai AynthidA muzhu
vekuLiyai aRivathu pOm kapAdanai – malam mARA

vinaiyanai urai mozhi sOrntha pAviyai
viLivu uRu naraku idai veezhntha mOdanai
vinavi mun aruL seythu pAngin ALvathum – oru nALE

karuthalar thiripuram mANdu neeRu ezha
malai silai oru kaiyil vAngu nAraNi
kazhal aNi malai makaL kAnji mA nakar – uRai pEthai

kaLi mayil sivanudan vAzhntha mOkini
kadal udai ulakinai eenRa thAy umai
kari vanam uRai akilANda nAyaki – aruL pAlA

muraNiya samarinil mUNda rAvaNan
idi ena alaRi mun Engki vAyvida
mudi pala thirukiya neeNda mAyavan – marukOnE

muthal oru kuRamakaL nErntha nUlidai
iru thana kiri misai thOyntha kAmuka
muthu pazha maRai mozhi Ayntha thEvarkaL – perumALE.