Thiruppugal 367 Kumaragurubaragunadhara
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
குமர குருபர குணதர நிசிசர
திமிர தினகர சரவண பவகிரி
குமரி சுதபகி ரதிசுத சுரபதி – குலமானுங்
குறவர் சிறுமியு மருவிய திரள்புய
முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
கொடிய வினையனை யவலனை யசடனை – யதிமோகக்
கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
களவி னொடுபொரு ளளவள வருளிய
கலவி யளறிடை துவளுறும் வெளிறனை – யினிதாளக்
கருணை யடியரொ டருணையி லொருவிசை
சுருதி புடைதர வருமிரு பரிபுர
கமல மலரடி கனவிலு நனவிலு – மறவேனே
தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
சமுக முககண பணபணி பதிநெடு – வடமாகச்
சகல வுலகமு நிலைபெற நிறுவிய
கனக கிரிதிரி தரவெகு கரமலர்
தளர வினியதொ ரமுதினை யொருதனி – கடையாநின்
றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
அகில புவனமு மளவிடு குறியவன்
அளவு நெடியவ னளவிட அரியவன் – மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
அறிவை யறிவது பொருளென அருளிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
குமர குருபர குணதர நிசிசர
திமிர தினகர சரவணபவ கிரி
குமரி சுத பகிரதி சுத சுர பதி – குல மானும்
குறவர் சிறுமியும் மருவிய திரள் புய
முருக சரண் என உருகுதல் சிறிதும் இல்
கொடிய வினையனை அவலனை அசடனை – அதி மோகக்
கமரில் விழவிடு அழகு உடை அரிவையர்
களவினொடு பொருள் அளவளவு அருளிய
கலவி அளறிடை துவளுறும் வெளிறனை – இனிது ஆள
கருணை அடியரொடு அருணையில் ஒரு விசை
சுருதி புடை தர வரும் இரு பரிபுர
கமல மலர் அடி கனவிலும் நனவிலும் – மறவேனே
தமர மிகு திரை எறி வளை கடல் குடல்
மறுகி அலைபட விட நதி உமிழ்வன
சமுக முக கண பண பணி பதி நெடு – வடமாக
சகல உலகமு(ம்) நிலைபெற நிறுவிய
கனக கிரி திரிதர வெகு கர மலர்
தளர இனியதொர் அமுதினை ஒரு தனி – கடையா நின்று
அமரர் பசி கெட உதவிய க்ருபை முகில்
அகில புவனமும் அளவிடு குறியவன்
அளவு நெடியவன் அளவிட அரியவன் – மருகோனே
அரவு புனைதரு புநிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளி தர ஒளி திகழ்
அறிவை அறிவது பொருள் என அருளிய – பெருமாளே.
English
kumara gurupara guNathara nisisara
thimira thinakara saravaNa pavakiri
kumari suthapaki rathisutha surapathi – kulamAnum
kuRavar siRumiyu maruviya thiraLpuya
muruka saraNena vurukuthal siRithumil
kodiya vinaiyanai yavalanai yasadanai – yathimOkak
kamaril vizhavidu mazhakudai yarivaiyar
kaLavi noduporu LaLavaLa varuLiya
kalavi yaLaRidai thuvaLuRum veLiRanai – yinithALak
karuNai yadiyaro daruNaiyi loruvisai
suruthi pudaithara varumiru paripura
kamala malaradi kanavilu nanavilu – maRavEnE
thamara mikuthirai yeRivaLai kadalkudal
maRuki yalaipada vidanathi yumizhvana
samuka mukakaNa paNapaNi pathinedu – vadamAka
sakala vulakamu nilaipeRa niRuviya
kanaka kirithiri tharaveku karamalar
thaLara viniyatho ramuthinai yoruthani – kadaiyAnin
Ramarar pasikeda vuthaviya krupaimukil
akila puvanamu maLavidu kuRiyavan
aLavu nediyava naLavida ariyavan – marukOnE
aravu punaitharu punitharum vazhipada
mazhalai mozhikodu theLithara voLithikazh
aRivai yaRivathu poruLena aruLiya – perumALE.
English Easy Version
kumara gurupara guNathara nisisara
thimira thinakara saravaNapava kiri
kumari sutha pakirathi sutha sura pathi – kula mAnum
kuRavar siRumiyum maruviya thiraL puya
muruka saraN ena urukuthal siRithum il
kodiya vinaiyanai avalanai asadanai – athi mOkak
kamaril vizhavidu azhaku udai arivaiyar
kaLavinodu poruL aLavaLavu aruLiya
kalavi aLaRidai thuvaLuRum veLiRanai – inithu ALa
karuNai adiyarodu aruNaiyil oru visai
suruthi pudai thara varum iru paripura
kamala malar adi kanavilum nanavilum – maRavEnE
thamara miku thirai eRi vaLai kadal kudal
maRuki alaipada vida nathi umizhvana
samuka muka kaNa paNa paNi pathi nedu – vadamAka
sakala ulakamu(m) nilaipeRa niRuviya
kanaka kiri thirithara veku kara malar
thaLara iniyathor amuthinai oru thani – kadaiyA ninRu
amarar pasi keda uthaviya krupai mukil
akila puvanamum aLavidu kuRiyavan
aLavu nediyavan aLavida ariyavan – marukOnE
aravu punaitharu punitharum vazhipada
mazhalai mozhikodu theLi thara oLi thikazh
aRivai aRivathu poruL ena aruLiya – perumALE.