Thiruppugal 368 Aruvamidaiyena
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
அருவ மிடையென வருபவர் துவரிதழ்
அமுது பருகியு முருகியு ம்ருகமத
அளக மலையவு மணிதுகி லகலவு – மதிபார
அசல முலைபுள கிதமெழ அமளியில்
அமளி படஅந வரதமு மவசமொ
டணையு மழகிய கலவியு மலமல – முலகோரைத்
தருவை நிகரிடு புலமையு மலமல
முருவு மிளமையு மலமலம் விபரித
சமய கலைகளு மலமல மலமரும் – வினைவாழ்வுஞ்
சலில லிபியன சனனமு மலமல
மினியு னடியரொ டொருவழி படஇரு
தமர பரிபுர சரணமு மவுனமு – மருள்வாயே
உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
யிருகு தையுமுடி தமனிய தநுவுட
னுருளை யிருசுடர் வலவனு மயனென – மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை யடியிட
நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்
உடைய வொருவரு மிருவரு மருள்பெற – வொருகோடி
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
சடச டெனவெடி படுவன புகைவன
திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு -முனிவார்தஞ்
சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய
பெரும அருணையி லெழுநிலை திகழ்வன
சிகரி மிசையொரு கலபியி லுலவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
அருவம் இடை என வருபவர் துவர் இதழ்
அமுது பருகியும் உருகியும் ம்ருகமத
அளகம் அலையவும் அணி துகில் அகலவும் – அதிபார
அசகம் முலை புளகிதம் எழ அமளியில்
அமளி பட அநவரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம் அலம் – உலகோரைத்
தருவை நிகரிடு புலமையும் அலம் அலம்
உருவும் இளமையும் அலம் அலம் விபரித
சமய கலைகளும் அலம் அலம் அலமரும் – வினை வாழ்வும்
சலிய லிபி அ(ன்)ன சனனம் அலம் அலம்
இனி உன் அடியரொடு ஒரு வழிபட இரு
தமர பரிபுர சரணமு(ம்) மவுனமும் – அருள்வாயே
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி
இருகு உதையும் முடி தமனிய தநு உடன்
உருளை இரு சுடர் வலவனும் அயன் என – மறை பூணும்
உறுதிபடு சுர ரதமிசை அடி இட
நெறு நெறு என முறிதலு(ம்) நிலை பெறு தவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற – ஒரு கோடி
தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு
சடசட என வெடி படுவன புகைவன
திகு திகு என எரிவன அனல் நகையொடு – முனிவார் தம்
சிறுவ வனசரர் சிறுமியொடு உருகிய
பெரும அருணையில் எழு நிலை திகழ்வன
சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய – பெருமாளே.
English
aruva midaiyena varupavar thuvarithazh
amuthu parukiyu murukiyu mrukamatha
aLaka malaiyavu maNithuki lakalavu – mathipAra
asala mulaipuLa kithamezha amaLiyil
amaLi padAna varathamu mavasamo
daNaiyu mazhakiya kalaviyu malamala – mulakOraith
tharuvai nikaridu pulamaiyu malamala
muruvu miLamaiyu malamalam viparitha
samaya kalaikaLu malamala malamarum – vinaivAzhvum
salila lipiyana sananamu malamala
miniyu nadiyaro doruvazhi padairu
thamara paripura saraNamu mavunamu – maruLvAyE
uruvu kariyathor kaNaikodu paNipathi
yiruku thaiyumudi thamaniya thanuvuda
nuruLai yirusudar valavanu mayanena – maRaipUNum
uRuthi padusura rathamisai yadiyida
neRune RenamuRi thalunilai peRuthavam
udaiya voruvaru miruvaru maruLpeRa – vorukOdi
theruvu nakariyu nisisarar mudiyodu
sadasa denavedi paduvana pukaivana
thikuthi kenaeri vanAnal nakaikodu -munivArtham
siRuva vanasarar siRumiyo durukiya
peruma aruNaiyi lezhunilai thikazhvana
sikari misaiyoru kalapiyi lulaviya – perumALE.
English Easy Version
aruvam idai ena varupavar thuvar ithazh
amuthu parukiyum urukiyum mrukamatha
aLakam alaiyavum aNi thukil akalavum – athipAra
asakam mulai puLakitham ezha amaLiyil
amaLi pada anavarathamum avasamodu
aNaiyum azhakiya kalaviyum alam alam – ulakOraith
tharuvai nikaridu pulamaiyum alam alam
uruvum iLamaiyum alam alam viparitha
samaya kalaikaLum alama alam alamarum – vinai vAzhvum
saliya lipi a(n)na sananam alam alam
ini un adiyarodu oru vazhipada iru
thamara paripura saraNamu(m) mavunamum – aruLvAyE
uruvu kariyathu or kaNai kodu paNi pathi
iruku uthaiyum mudi thamaniya thanu udan
uruLai iru sudar valavanum ayan ena – maRai pUNum
uRuthipadu sura rathamisai adi ida
neRu neRu ena muRithalu(m) nilai peRu thavam
udaiya oruvarum iruvarum aruLpeRa – oru kOdi
theruvu nakariyum nisisarar mudiyodu
sadasada ena vedi paduvana pukaivana
thiku thiku ena erivana anal nakaiyodu – munivAr tham
siRuva vanasarar siRumiyodu urukiya
peruma aruNaiyil ezhu nilai thikazhvana
sikari misai oru kalapiyil ulaviya – perumALE.