Thiruppugal 371 Magaramerikadal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
மகர மெறிகடல் விழியினு மொழியினு
மதுப முரல்குழல் வகையினு நகையினும்
வளமை யினுமுக நிலவினு மிலவினு – நிறமூசும்
மதுர இதழினு மிடையினு நடையினு
மகளிர் முகுளித முலையினு நிலையினும்
வனச பரிபுர மலரினு முலரினு – மவர்நாமம்
பகரு கினுமவர் பணிவிடை திரிகினு
முருகி நெறிமுறை தவறினு மவரொடு
பகடி யிடுகினு மமளியி லவர்தரு – மநுராகப்
பரவை படியினும் வசமழி யினுமுத
லருணை நகர்மிசை கருணையொ டருளிய
பரம வொருவச னமுமிரு சரணமு – மறவேனே
ககன சுரபதி வழிபட எழுகிரி
கடக கிரியொடு மிதிபட வடகுல
கனக கனகுவ டடியொடு முறிபட – முதுசூதங்
கதறு சுழிகட லிடைகிழி படமிகு
கலக நிசிசரர் பொடிபட நடவிய
கலப மதகத துரகத ந்ருபகிரி – மயில்வாழ்வே
தகன கரதல சிவசுத கணபதி
சகச சரவண பரிமள சததள
சயன வனசரர் கதிபெற முனிபெறு – புனமானின்
தரள முகபட நெறிபட நிமிர்வன
தருண புளகித ம்ருகமத தனகிரி
தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
மகரம் எறி கடல் விழியினு(ம்) மொழியினு(ம்)
மதுப(ம்) முரல் குழல் வகையினு(ம்) நகையினும்
வளமையினு(ம்) முக நிலவினும் இலவினு(ம்) – நிறம் மூசும்
மதுர இதழினும் இடையினு(ம்) நடையினு(ம்)
மகளிர் முகுளித முலையினு(ம்) நிலையினும்
வனச பரிபுர மலரினும் உலரினும் – அவர் நாமம்
பகருகினும் அவர் பணிவிடை திரிகினும்
உருகி நெறி முறை தவறினும் அவரோடு
பகடி இடுகினும் அமளியில் அவர் தரும் – அநுராகப்
பரவை படியினும் வசம் அழியினும் முதல்
அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
பரம ஒரு வசனமும் இரு சரணமும் – மறவேனே
ககன சுரபதி வழிபட எழு கிரி
கடக கிரியோடு மிதி பட வட குல
கனக கன குவடு அடியொடு முறிபட – முது சூதம்
கதறு சுழி கடல் இடை கிழி பட மிகு
கலக நிசிசரர் பொடிபட நடவிய
கலப மரகத துரகத ந்ருப கிரி – மயில் வாழ்வே
தகன கரதல சிவ சுத கணபதி
சகச சரவண பரிமள சத தள
சயன வனசரர் கதி பெற முனி பெறு – புன மானின்
தரள முகபட(ம்) நெறி பட நிமிர்வன
தருண புளகித ம்ருகமத தன கிரி
தழுவ மயல் கொடு தனி மடல் எழுதிய – பெருமாளே.
English
makara meRikadal vizhiyinu mozhiyinu
mathupa muralkuzhal vakaiyinu nakaiyinum
vaLamai yinumuka nilavinu milavinu – niRamUsum
mathura ithazhinu midaiyinu nadaiyinu
makaLir mukuLitha mulaiyinu nilaiyinum
vanasa paripura malarinu mularinu – mavarnAmam
pakaru kinumavar paNividai thirikinu
muruki neRimuRai thavaRinu mavarodu
pakadi yidukinu mamaLiyi lavartharu – manurAkap
paravai padiyinum vasamazhi yinumutha
laruNai nakarmisai karuNaiyo daruLiya
parama voruvasa namumiru charaNamu – maRavEnE
kakana surapathi vazhipada ezhukiri
kadaka kiriyodu mithipada vadakula
kanaka kanakuva dadiyodu muRipada – muthucUthang
kathaRu chuzhikada lidaikizhi padamiku
kalaka nisisarar podipada nadaviya
kalapa mathakatha thurakatha nrupakiri – mayilvAzhvE
thakana karathala sivasutha gaNapathi
sakasa saravaNa parimaLa sathathaLa
sayana vanasarar kathipeRa munipeRu – punamAnin
tharaLa mukapada neRipada nimirvana
tharuNa puLakitha mrukamatha thanakiri
thazhuva mayalkodu thanimada lezhuthiya – perumALE.
English Easy Version
makaram eRi kadal vizhiyinu(m) mozhiyinu(m)
mathupa(m) mural kuzhal vakaiyinu(m) nakaiyinum
vaLamaiyinu(m) muka nilavinum ilavinu(m) – niRam mUsum
mathura ithazhinum idaiyinu(m) nadaiyinu(m)
makaLir mukuLitha mulaiyinu(m) nilaiyinum
vanasa paripura malarinum ularinum – avar nAmam
pakarukinum avar paNividai thirikinum
uruki neRi muRai thavaRinum avarOdu
pakadi idukinum amaLiyil avar tharum – anurAkap
paravai padiyinum vasam azhiyinum muthal
aruNai nakar misai karuNaiyodu aruLiya
parama oru vasanamum iru saraNamum – maRavEnE
kakana surapathi vazhipada ezhu kiri
kadaka kiriyOdu mithi pada vada kula
kanaka kana kuvadu adiyodu muRipada – muthu cUtham
kathaRu chuzhi kadal idai kizhi pada miku
kalaka nisisarar podipada nadaviya
kalapa marakatha thurakatha nrupa kiri – mayil vAzhvE
thakana karathala siva sutha gaNapathi
sakasa saravaNa parimaLa satha thaLa
sayana vanasarar kathi peRa muni peRu – puna mAnin
tharaLa mukapada(m) neRi pada nimirvana
tharuNa puLakitha mrukamatha thana kiri
thazhuva mayal kodu thani madal ezhuthiya – perumALE.