திருப்புகழ் 372 முகிலை யிகல் (திருவருணை)

Thiruppugal 372 Mugilaiyigal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

முகிலை யிகல்பொரு முழுவிருள் குழலென
முதிய மதியது முகமென நுதலிணை
முரணர் வரிசிலை முடுகிடு கணைவிழி – யெனமூவா

முளரி தனின்முகு ளிதமலர் முலையென
முறுவல் தனையிரு குழைதனை மொழிதனை
மொழிய வரியதொர் தெரிவையர் வினையென – மொழிகூறிப்

பகலு மிரவினு மிகமன மருள்கொடு
பதியி லவர்வடி வுளதழ கெனவொரு
பழுது மறஅவர் பரிவுற இதமது – பகராதே

பகைகொ டெதிர்பொரு மசுரர்கள் துகைபட
விகட முடனடை பயில்மயில் மிசைவரு
பவனி தனையநு தினநினை யெனஅருள் – பகர்வாயே

புகல வரியது பொருளிது எனவொரு
புதுமை யிடஅரி யதுமுத லெனுமொரு
பொதுவை யிதுவென தவமுடை முநிவர்கள் – புடைசூழப்

புரமு மெரியெழ நகையது புரிபவர்
புனலும் வளர்மதி புனைசடை யினரவர்
புடவி வழிபட புதை பொருள் விரகொடு – புகல்வோனே

அகில கலைகளு மறநெறி முறைமையு
மகில மொழிதரு புலவரு முலகினி
லறிஞர் தவமுயல் பவர்களு மியலிசை – யதனாலே

அறுவர் முலையுணு மறுமுக னிவனென
அரிய நடமிடு மடியவ ரடிதொழ
அருணை நகர்தனி லழகுடன் மருவிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான

முகிலை இகல் பொரு முழு இருள் குழல் என
முதிய மதி அது முகம் என நுதல் இணை
முரணர் வரி சிலை முடுகிடு கணை விழி – என மூவா

முளரி தனின் முகுளித மலர் முலை என
முறுவல் தனை இரு குழைதனை மொழி தனை
மொழிய அரியது ஒர் தெரிவையர் வினை என – மொழி கூறி

பகலும் இரவினும் மிக மனம் மருள் கொடு
பதி இலர் அவர் வடிவுளது அழகு என ஒரு
பழுதும் அற அவர் பரிவு உற இதம் அது – பகராதே

பகை கொடு எதிர் பொரும் அசுரர்கள் துகை பட
விகடம் உடன் அடை பயில் மயில் மிசை வரு
பவனி தனை அநுதின(ம்) நினை என அருள் – பகர்வாயே

புகல அரியது பொருள் இது என ஒரு
புதுமை இட அரியது முதல் எனும் ஒரு
பொதுவை இது என தவம் உடை முநிவர்கள் – புடைசூழப்

புரமும் எரி எழு நகை அது புரிபவர்
புனலும் வளர் மதி புனை சடையினர்
அவர் புடவி வழிபட புதை பொருள் விரகோடு – புகல்வோனே

அகில கலைகளும் அற நெறி முறைமையும்
அகில மொழி தரு புலவரும் உலகு இனி
அறிஞர் தவ(ம்) முயல்பவர்களும் இயல் இசை – அதனாலே

அறுவர் முலை உ(ண்)ணும் அறுமுகன் இவன் என
அரிய நடம் இடும் அடியவர் அடி தொழ
அருணை நகர் தனில் அழகுடன் மருவிய – பெருமாளே.

English

mukilai yikalporu muzhuviruL kuzhalena
muthiya mathiyathu mukamena nuthaliNai
muraNar varisilai mudukidu kaNaivizhi – yenamUvA

muLari thaninmuku Lithamalar mulaiyena
muRuval thanaiyiru kuzhaithanai mozhithanai
mozhiya vAiyathor therivaiyar vinaiyena – mozhikURip

pakalu miravinu mikamana maruLkodu
pathiyi lavarvadi vuLathazha kenavoru
pazhuthu maRaavar parivuRa ithamathu – pakarAthE

pakaiko dethirporu masurarkaL thukaipada
vikada mudanadai payilmayil misaivaru
pavani thanaiyanu thinaninai yenaaruL – pakarvAyE

pukala variyathu poruLithu enavoru
puthumai yidaari yathumutha lenumoru
pothuvai yithuvena thavamudai munivarkaL – pudaicUzhap

puramu meriyezha nakaiyathu puripavar
punalum vaLarmathi punaisadai yinaravar
pudavi vazhipada puthai poruL virakodu – pukalvOnE

akila kalaikaLu maRaneRi muRaimaiyu
makila mozhitharu pulavaru mulakini
laRinjar thavamuyal pavarkaLu miyalisai – yathanAlE

aRuvar mulaiyuNu maRumuka nivanena
ariya nadamidu madiyava radithozha
aruNai nakarthani lazhakudan maruviya – perumALE.

English Easy Version

mukilai ikal poru muzhu iruL kuzhal ena
muthiya mathi athu mukam ena nuthal iNai
muraNar vari silai mudukidu kaNai vizhi – ena mUvA

muLari thanin mukuLitha malar mulai ena
muRuval thanai iru kuzhaithanai mozhi thanai
mozhiya ariyathu or therivaiyar vinai ena – mozhi kURi

pakalum iravinum mika manam maruL kodu
pathi ilar avar vadivuLathu azhaku ena oru
pazhuthum aRa avar parivu uRa itham athu – pakarAthE

pakai kodu ethir porum asurarkaL thukai pada
vikadam udan adai payil mayil misai varu
pavani thanai anuthina(m) ninai ena aruL – pakarvAyE

pukala ariyathu poruL ithu ena oru
puthumai ida ariyathu muthal enum oru
pothuvai ithu ena thavam udai munivarkaL – pudaicUzhap

puramum eri ezhu nakai athu puripavar
punalum vaLar mathi punai sadaiyinar
avar pudavi vazhipada puthai poruL virakOdu – pukalvOnE

akila kalaikaLum aRa neRi muRaimaiyum
akila mozhi tharu pulavarum ulaku ini
aRinjar thava(m) muyalpavarkaLum iyal – isai athanAlE

aRuvar mulai u(N)Num aRumukan ivan ena
ariya nadam idum adiyavar adi thozha aruNai
nakar thanil azhakudan maruviya – perumALE.