Thiruppugal 373 Muruguserikuzhalsoru
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
முலைக ளளவிடு முகபட பகடிகள்
முதலு முயிர்களு மளவிடு களவியர் – முழுநீல
முழுகு புழுககில் குழைவடி வழகியர்
முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்
முனைகொ ளயிலென விழியெறி கடைசிய – ரநுராகம்
மருவி யமளியி னலமிடு கலவியர்
மனது திரவிய மளவள வளவியர்
வசன மொருநொடி நிலைமையில் கபடியர் – வழியேநான்
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
அருணை நகர்மிசை கருணையொ டருளிய
மவுன வசனமு மிருபெரு சரணமு – மறவேனே
கருதி யிருபது கரமுடி யொருபது
கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
கடிய வியனகர் புகவரு கனபதி – கனல்மூழ்கக்
கவச அநுமனொ டெழுபது கவிவிழ
அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
களரி தனிலொரு கணைவிடு மடலரி – மருகோனே
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து
தரும னவர்பதி குடிவிடு பதனிசை – மயில்வீரா
தருண மணியவை பலபல செருகிய
தலையள் துகிலிடை யழகிய குறமகள்
தனது தனமது பரிவொடு தழுவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன – தனதான
முருகு செறி குழல் சொருகிய விரகிகள்
முலைகள் அளவிடு முக பட பகடிகள்
முதலும் உயிர்களும் அளவிடு களவியர் – முழு நீல
முழுகு புழுகு அகில் குழை வடிவு அழகியர்
முதிர வளர் கனி அது கவர் இதழியர்
முனை கொள் அயில் என விழி எறி கடைசியர் – அநுராகம்
மருவி அமளியில் நலம் இடு கலவியர்
மனது திரவியம் அளவு அளவு அளவியர்
வசனம் ஒரு நொடி நிலைமையில் கபடியர் – வழியே நான்
மருளும் அறிவினன் அடிமுடி அறிகிலன்
அருணை நகர் மிசை கருணையொடு அருளிய
மவுன வசனமும் இரு பெரு சரணமும் – மறவேனே
கருதி இருபது கர முடி ஒரு பது
கனக மவுலி கொள் புரிசை செய் பழையது
கடியவிய நகர் புக வரு கன பதி – கனல் மூழ்க
கவசம் அநுமனொடு எழுபது கவி விழ
அணையில் அலை எறி எதிர் அமர் பொருதிடு
களரி தனில் ஒரு கணை விடும் அடல் அரி – மருகோனே
சருவும் அவுணர்கள் தளமொடு பெரு வலி
அகல நிலை பெறு சயிலமும் இடி செய்து
தருமன் அவர் பதி குடி விடு பதன் இசை – மயில் வீரா
தருண மணி அவை பல பல செருகிய
தலையள் துகில் இடை அழகிய குறமகள்
தனது தனம் அது பரிவொடு தழுவிய – பெருமாளே.
English
muruku cheRikuzhal chorukiya virakikaL
mulaika LaLavidu mukapada pakadikaL
muthalu muyirkaLu maLavidu kaLaviyar – muzhuneela
muzhuku puzhukakil kuzhaivadi vazhakiyar
muthira vaLarkani yathukava rithazhiyar
munaiko Layilena vizhiyeRi kadaisiya – ranurAkam
maruvi yamaLiyi nalamidu kalaviyar
manathu thiraviya maLavaLa vaLaviyar
vasana morunodi nilaimaiyil kapadiyar – vazhiyEnAn
maruLu maRivina nadimudi yaRikilan
aruNai nakarmisai karuNaiyo daruLiya
mavuna vachanamu miruperu saraNamu – maRavEnE
karuthi yirupathu karamudi yorupathu
kanaka mavulikoL purisaisey pazhaiyathu
kadiya viyanakar pukavaru kanapathi – kanalmUzhkak
kavasa anumano dezhupathu kavivizha
aNaiyi lalaiyeRi yethiramar poruthidu
kaLari thaniloru kaNaividu madalari – marukOnE
saruvu mavuNarkaL thaLamodu peruvali
yakala nilaipeRu sayilamu midiseythu
tharuma navarpathi kudividu pathanisai – mayilveerA
tharuNa maNiyavai palapala cherukiya
thalaiyaL thukilidai yazhakiya kuRamakaL
thanathu thanamathu parivodu thazhuviya – perumALE.
English Easy Version
muruku cheRi kuzhal chorukiya virakikaL
mulaikaL aLavidu muka pada pakadikaL
muthalum uyirkaLum aLavidu kaLaviyar – muzhu neela
muzhuku puzhuku akil kuzhai vadivu azhakiyar
muthira vaLar kani athu kavar ithazhiyar
munai koL ayil ena vizhi eRi kadaisiyar – anurAkam
maruvi amaLiyil nalam idu kalaviyar
manathu thiraviyam aLavu aLavu aLaviyar
vachanam oru nodi nilaimaiyil kapadiyar – vazhiyE nAn
maruLum aRivinan adimudi aRikilan
aruNai nakar misai karuNaiyodu aruLiya
mavuna vachanamum iru peru saraNamum – maRavEnE
karuthi irupathu kara mudi oru pathu
kanaka mavuli koL purisai sey pazhaiyathu
kadiyaviya nakar puka varu kana pathi – kanal mUzhka
kavasam anumanodu ezhupathu kavi vizha
aNaiyil alai eRi ethir amar poruthidu
kaLari thanil oru kaNai vidum adal ari – marukOnE
saruvum avuNarkaL thaLamodu peru vali
akala nilai peRu sayilamum idi seythu
tharuman avar pathi kudi vidu pathan isai – mayil veerA
tharuNa maNi avai pala pala cherukiya
thalaiyaL thukil idai azhakiya kuRamakaL
thanathu thanam athu parivodu thazhuviya – perumALE.