திருப்புகழ் 377 கறுவு மிக்கு ஆவி (திருவருணை)

Thiruppugal 377 Karuvumikkuavi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் – தனதான

கறுவுமிக் காவியைக் கலகுமக் காலனொத்
திலகுகட் சேல்களிப் – புடனாடக்

கருதிமுற் பாடுகட் டளையுடற் பேசியுட்
களவினிற் காசினுக் – குறவாலுற்

றுறுமலர்ப் பாயலிற் றுயர்விளைத் தூடலுற்
றுயர்பொருட் கோதியுட் – படுமாதர்

ஒறுவினைக் கேயுளத் தறிவுகெட் டேனுயிர்ப்
புணையிணைத் தாள்தனைத் – தொழுவேனோ

மறையெடுத் தோதிவச் சிரமெடுத் தானுமைச்
செறிதிருக் கோலமுற் – றணைவானும்

மறைகள்புக் காரெனக் குவடுநெட் டாழிவற்
றிடஅடற் சூரனைப் – பொரும்வேலா

அறிவுடைத் தாருமற் றுடனுனைப் பாடலுற்
றருணையிற் கோபுரத் – துறைவோனே

அடவியிற் றோகைபொற் றடமுலைக் காசையுற்
றயருமச் சேவகப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் – தனதான

கறுவு மிக்கு ஆவியைக் கல(க்)கும் அக் காலன் ஒத்து
இலகு கண் சேல் களிப்புடன் – நாடக்

கருதி முற்பாடு கட்டளை உடல் பேசி உள்
களவினில் காசினுக்கு – உறவால் உற்று

உறு மலர்ப் பாயலில் துயர் விளைத்து ஊடல் உற்று
உயர் பொருட்கு ஓதி – உட்படு மாதர்

ஒறு வினைக்கே உளத்து அறிவு கெட்டேன் உயிர்ப்
புணை இணைத் தாள்தனைத் – தொழுவேனோ

மறை எடுத்து ஓதி வச்சிரம் எடுத்தானும் மைச்
செறி திருக் கோலம் உற்று – அணைவானும்

மறைகள் புக்கார் எனக் குவடு நெட்டாழி
வற்றிட அடல் சூரனைப் – பொரும் வேலா

அறிவுடைத்தாரும் மற்றுடன் உனைப் பாடல் உற்று
அருணையில் கோபுரத்து – உறைவோனே

அடவியில் தோகை பொன் தட முலைக்கு ஆசை உற்று
அயரும் அச் சேவகப் – பெருமாளே.

English

kaRuvumik kAviyaik kalakumak kAlanoth
thilakukat sElkaLip – pudanAdak

karuthimuR pAdukat taLaiyudaR pEsiyut
kaLaviniR kAsinuk – kuRavAlut

RuRumalarp pAyalit RuyarviLaith thUdalut
Ruyarporut kOthiyut – padumAthar

oRuvinaik kEyuLath thaRivuket tEnuyirp
puNaiyiNaith thALthanaith – thozhuvEnO

maRaiyeduth thOthivac chirameduth thAnumaic
cheRithiruk kOlamut – RaNaivAnum

maRaikaLpuk kArenak kuvadunet tAzhivat
RidAdaR cUranaip – porumvElA

aRivudaith thArumat Rudanunaip pAdalut
RaruNaiyiR kOpurath – thuRaivOnE

adaviyit ROkaipot Radamulaik kAsaiyut
Rayarumac chEvakap – perumALE.

English Easy Version

kaRuvu mikku Aviyaik kala(k)kum ak kAlan oththu
ilaku kaN sEl kaLippudan – nAdak

karuthi muRpAdu kaddaLai udal pEsi uL
kaLavinil kAsinukku – uRavAl utRu

uRu malarp pAyalil thuyar viLaiththu Udal utRu
uyar porutku Othi utpadu – mAthar

oRu vinaikkE uLaththu aRivu kettEn uyirp
puNai iNaith thALthanaith – thozhuvEnO

maRai eduththu Othi vacchiram eduththAnum
maic cheRi thiruk kOlam – utRu aNaivAnum

maRaikaL pukkAr enak kuvadu nettAzhi
vatRida adal cUranaip – porum vElA

aRivudaiththArum matRudan unaip pAdal
utRu aruNaiyil kOpuraththu – uRaivOnE

adaviyil thOkai pon thada mulaikku Asai utRu
ayarum ac chEvakap – perumALE.