Thiruppugal 379 Tharunamani
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த – தனதான
தருணமணி வானி லத்தி லருணமணி யால விட்ட
தழலமளி மீதெ றிக்கு – நிலவாலே
தலைமைதவி ராம னத்தி னிலைமையறி யாதெ திர்த்த
தறுகண்மத வேள்தொ டுத்த – கணையாலே
வருணமட மாதர் கற்ற வசையின்மிகை பேச முற்று
மருவுமென தாவி சற்று – மழியாதே
மகுடமணி வாரி சைக்கும் விகடமது லாவு சித்ர
மயிலின்மிசை யேறி நித்தம் – வரவேணும்
கருணையக லாவி ழிச்சி களபமழி யாமு லைச்சி
கலவிதொலை யாம றத்தி – மணவாளா
கடுவுடைய ராநி ரைத்த சடிலமுடி மீது வைத்த
கடியமல ராத ரித்த – கழல்வீரா
அருணமணி யால மைத்த கிரணமணி சூழும் வெற்றி
அருணைநகர் கோபு ரத்தி – லுறைவோனே
அசுரர்குலம் வேர றுத்து வடவனலை மீதெ ழுப்பி
அமரர்சிறை மீள விட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த – தனதான
தருண மணி வான் நிலத்தில் அருண மணி ஆல விட்ட
தழல் அமளி மீது எறிக்கு(ம்) – நிலவாலே
தலைமை தவிரா மனத்தின் நிலை அறியாது எதிர்த்த
தறு கண் மத வேள் தொடுத்த – கணையாலே
வருண மட மாதர் கற்ற வசையின் மிகை பேச முற்றும்
மருவும் எனது ஆவி சற்றும் – அழியாதே
மகுட மணி வார் இசைக்கும் விகடம் அது உலாவு(ம்) சித்ர
மயிலின் மிசை ஏறி நித்தம் – வரவேணும்
கருணை அகலா விழிச்சி களபம் அழியா முலைச்சி
கலவி தொலையா மறத்தி – மணவாளா
கடு உடைய அரா நிரைத்த சடில முடி மீது வைத்த
கடி அமலர் ஆதரித்த – கழல் வீரா
அருண மணியால் அமைத்த கிரண மணி சூழும் வெற்றி
அருணை நகர் கோபுரத்தில் – உறைவோனே
அசுரர் குலம் வேர் அறுத்து வட அனலை மீது எழுப்பி
அமரர் சிறை மீள விட்ட – பெருமாளே.
English
tharuNamaNi vAni laththi laruNamaNi yAla vitta
thazhalamaLi meethe Rikku – nilavAlE
thalaimaithavi rAma naththi nilaimaiyaRi yAthe thirththa
thaRukaNmatha vELtho duththa – kaNaiyAlE
varuNamada mAthar katRa vasaiyinmikai pEsa mutRu
maruvumena thAvi satRu – mazhiyAthE
makudamaNi vAri saikkum vikadamathu lAvu cithra
mayilinmisai yERi niththam – varavENum
karuNaiyaka lAvi zhicci kaLapamazhi yAmu laicci
kalavitholai yAma Raththi – maNavALA
kaduvudaiya rAni raiththa sadilamudi meethu vaiththa
kadiyamala rAtha riththa – kazhalveerA
aruNamaNi yAla maiththa kiraNamaNi sUzhum vetRi
aruNainakar kOpu raththi – luRaivOnE
asurarkulam vEra Ruththu vadavanalai meethe zhuppi
amararsiRai meeLa vitta – perumALE.
English Easy Version
tharuNa maNi vAn nilaththil aruNa maNi Ala vitta
thazhal amaLi meethu eRikku(m) – nilavAlE
thalaimai thavirA manaththin nilai aRiyAthu ethirththa
thaRu kaN matha vEL thoduththa – kaNaiyAlE
varuNa mada mAthar katRa vasaiyin mikai pEsa mutRum
maruvum enathu Avi satRum – azhiyAthE
makuda maNi vAr isaikkum vikadam athu ulAvu(m) sithra
mayilin misai ERi niththam – varavENum
karuNai akalA vizhicci kaLapam azhiyA mulaicci
kalavi tholaiyA maRaththi – maNavALA
kadu udaiya arA niraiththa sadila mudi meethu vaiththa
kadi amalar Athariththa – kazhal veerA
aruNa maNiyAl amaiththa kiraNa maNi sUzhum vetRi
aruNai nakar kOpuraththil – uRaivOnE
asurar kulam vEr aRuththu vada analai meethu ezhuppi
amarar siRai meeLa vitta – perumALE.