Thiruppugal 380 Muzhugivada
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த – தனதான
முழுகிவட வாமு கத்தி னெழுகனலி லேபி றக்கு
முழுமதிநி லாவி னுக்கும் – வசையாலும்
மொழியுமட மாத ருக்கு மினியதனி வேயி சைக்கு
முதியமத ராஜ னுக்கு – மழியாதே
புழுகுதிகழ் நீப மத்தி லழகியகு ராநி ரைத்த
புதுமையினி லாறி ரட்டி – புயமீதே
புணரும்வகை தானி னைத்த துணரும்வகை நீல சித்ர
பொருமயிலி லேறி நித்தம் – வரவேணும்
எழுமகர வாவி சுற்று பொழிலருணை மாந கர்க்கு
ளெழுதரிய கோபு ரத்தி – லுறைவோனே
இடைதுவள வேடு வச்சி படமசைய வேக னத்த
இளமுலைவி டாத சித்ர – மணிமார்பா
செழுமகுட நாக மொய்த்த ஒழுகுபுனல் வேணி வைத்த
சிவனைமுத லோது வித்த – குருநாதா
திசைமுகன்மு ராரி மற்று மரியபல தேவ ருற்ற
சிறையடைய மீள விட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த – தனதான
முழுகி வடவா முகத்தின் எழு கனலிலே பிறக்கு(ம்)
முழு மதி நிலாவினுக்கும் – வசையாலும்
மொழியு(ம்) மட மாதருக்கும் இனிய தனி வேய் இசைக்கும்
முதிய மத ராஜனுக்கும் – அழியாதே
புழுகு திகழ் நீபம் அ(த்)தில் அழகிய குரா நிரைத்த
புதுமையினில் ஆறு இரட்டி – புய(ம்) மீதே
புணரும் வகை தான் நினைத்தது உணரும் வகை நீல சித்ர
பொரு(ம்) மயிலில் ஏறி நித்தம் – வரவேணும்
எழு(ம்) மகர வாவி சுற்று(ம்) பொழில் அருணை மா நகர்க்குள்
எழுத அரிய கோபுரத்தில் – உறைவோனே
இடை துவள வேடுவச்சி படம் அசையவே கனத்த
இளமுலை விடாத சித்ர – மணிமார்பா
செழு மகுட நாக(ம்) மொய்த்த ஒழுகு புனல் வேணி வைத்த
சிவனை முதல் ஓதுவித்த – குரு நாதா
திசை முகன் முராரி மற்றும் அரிய பல தேவர் உற்ற
சிறை அடைய மீள விட்ட – பெருமாளே.
English
muzhukivada vAmu kaththi nezhukanali lEpi Rakku
muzhumathini lAvi nukkum – vasaiyAlum
mozhiyumada mAtha rukku miniyathani vEyi saikku
muthiyamatha rAja nukku – mazhiyAthE
puzhukuthikazh neepa maththi lazhakiyaku rAni raiththa
puthumaiyini lARi ratti – puyameethE
puNarumvakai thAni naiththa thuNarumvakai neela sithra
porumayili lERi niththam – varavENum
ezhumakara vAvi sutRu pozhilaruNai mAna karkku
Lezhuthariya kOpu raththi – luRaivOnE
idaithuvaLa vEdu vacchi padamasaiya vEka naththa
iLamulaivi dAtha sithra – maNimArpA
sezhumakuda nAka moyththa ozhukupunal vENi vaiththa
sivanaimutha lOthu viththa – gurunAthA
thisaimukanmu rAri matRu mariyapala thEva rutRa
siRaiyadaiya meeLa vitta – perumALE.
English Easy Version
muzhuki vadavA mukaththin ezhu kanalilE piRakku(m)
muzhu mathi nilAvinukkum – vasaiyAlum
mozhiyu(m) mada mAtharukkum iniya thani vEy isaikkum
muthiya matha rAjanukkum – azhiyAthE
puzhuku thikazh neepam a(th)thil azhakiya kurA niraiththa
puthumaiyinil ARu iratti – puya(m) meethE
puNarum vakai thAn ninaiththathu uNarum vakai neela sithra
poru(m) mayilil ERi niththam – varavENum
ezhu(m) makara vAvi sutRu(m) pozhil aruNai mA nakarkkuL
ezhutha ariya kOpuraththil – uRaivOnE
idai thuvaLa vEduvacchi padam asaiyavE kanaththa
iLamulai vidAtha sithra – maNimArpA
sezhu makuda nAka(m) moyththa ozhuku punal vENi vaiththa
sivanai muthal Othuviththa – kuru nAthA
thisai mukan murAri matRum ariya pala thEvar utRa
siRai adaiya meeLa vitta – perumALE.