Thiruppugal 381 Vadavaianaludu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த – தனதான
வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு
மதுரமொழி யாழி சைக்கு – மிருநாலு
வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு
மடியருவ வேள்க ணைக்கு – மறவாடி
நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு
நிறையுமிகு காத லுற்ற – மயல்தீர
நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர
நிலவுமயி லேறி யுற்று – வரவேணும்
மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து
மவுலியற வாளி தொட்ட – அரிராமன்
மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க
மவுனமறை யோது வித்த – குருநாதா
இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு
ளினியகுண கோபு ரத்தி – லுறைவோனே
எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு
மிடையுருவ வேலை விட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த – தனதான
வடவை அனல் ஊடு புக்கு முழுகி எழு மா மதிக்கும்
மதுர மொழி யாழ் இசைக்கும் – இரு நாலு
வரை திசை விடாது சுற்றி அலறு திரை வாரிதிக்கும்
மடி அருவ வேள் கணைக்கும் – அற வாடி
நெடு கனக மேரு ஒத்த புளக முலை மாது அருக்கு நிறையும் மிகு காதல் உற்ற – மயல் தீர
நினைவினோடு பீலி வெற்றி மரகத கலாப சித்ர
நிலவு மயில் ஏறி உற்று – வரவேணும்
மடல் அவிழ மாலை சுற்று புயம் இருபதோடு பத்து
மவுலி அற வாளி தொட்ட – அரி ராமன்
மருக பல வானவர்க்கும் அரிய சிவனார் படிக்க
மவுன மறை ஓதுவித்த – குருநாதா
இடை அரி உலாவும் உக்ர அருண கிரி மா நகர்க்குள்
இனிய குண கோபுரத்தில் – உறைவோனே
எழு புவி அளாவு வெற்பும் முடலி நெடு நாகம் எட்டும் இடை உருவ வேலை விட்ட – பெருமாளே.
English
vadavaiyana lUdu pukku muzhukiyezhu mAma thikku
mathuramozhi yAzhi saikku – mirunAlu
varaithisaivi dAthu sutRi yalaRuthirai vAri thikku
madiyaruva vELka Naikku – maRavAdi
nedukanaka mEru voththa puLakamulai mAtha rukku
niRaiyumiku kAtha lutRa – mayaltheera
ninaivinodu peeli vetRi marakathaka lApa sithra
nilavumayi lERi yutRu – varavENum
madalavizhu mAlai sutRu puyamirupa thOdu paththu
mavuliyaRa vALi thotta – arirAman
marukapala vAna varkku mariyasiva nArpa dikka
mavunamaRai yOthu viththa – kurunAthA
idaiyariyu lAvu mukra aruNakiri mAna karkku
LiniyakuNa kOpu raththi – luRaivOnE
ezhupuviya LAvu veRpu mudalinedu nAka mettu
midaiyuruva vElai vitta – perumALE.
English Easy Version
vadavai anal Udu pukku muzhuki ezhu mA mathikkum
mathura mozhi yAzh isaikkum – iru nAlu
varai thisai vidAthu sutRi alaRu thirai vArithikkum
madi aruva vEL kaNaikkum – aRa vAdi
nedu kanaka mEru oththa puLaka mulai mAthu arukku
niRaiyum miku kAthal utRa – mayal theera
ninaivinOdu peeli vetRi marakatha kalApa sithra
nilavu mayil ERi utRu – varavENum
madal avizha mAlai sutRu puyam irupathOdu paththu
mavuli aRa vALi thotta – ari rAman
maruka pala vAnavarkkum ariya sivanAr padikka
mavuna maRai Othuviththa – kurunAthA
idai ari ulAvum ukra aruNa kiri mA nakarkkuL
iniya kuNa kOpuraththil – uRaivOnE
ezhu puvi aLAvu veRpum mudali nedu nAkam ettum
idai uruva vElai vitta – perumALE.