திருப்புகழ் 382 ஆலவிழி நீல (திருவருணை)

Thiruppugal 382 Alavizhineela

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் – தந்ததான

ஆலவிழி நீலத் தாலதர பானத்
தாலளக பாரக் – கொண்டலாலே

ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித்
தாரநடை யால்நற் – கொங்கையாலே

சாலமய லாகிக் காலதிரி சூலத்
தாலிறுகு பாசத் – துன்பமூழ்கித்

தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற்
சாவதன்மு னேவற் – கொண்டிடாயோ

சோலைதரு கானிற் கோலமற மானைத்
தோளிலுற வாகக் – கொண்டவாழ்வே

சோதிமுரு காநித் தாபழய ஞானச்
சோணகிரி வீதிக் – கந்தவேளே

பாலகக லாபக் கோமளம யூரப்
பாகவுமை பாகத் – தன்குமாரா

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் – தந்ததான

ஆல விழி நீலத்தால் அதர பானத்தால்
அளக பாரக் – கொண்டலாலே

ஆர நகையால் வில் போர் நுதலினால்
வித்தார நடையால் நற் – கொங்கையாலே

சால மயலாகி கால(ன்) திரி சூலத்தால்
இறுகு பாசத் – துன்ப(ம்) மூழ்கித்

தாழ்வில் உயிர் வீழ் பட்டு ஊழ் வினை விடாமல்
சாவதன் முன் ஏவல் – கொண்டிடாயோ

சோலை தரு கானில் கோல மற மானைத்
தோளில் உறவாகக் – கொண்ட வாழ்வே

சோதி முருகா நித்தா பழய ஞானச்
சோணகிரி வீதிக் – கந்த வேளே

பாலக கலாபக் கோமள மயூரப்
பாக உமை பாகத்தன் – குமாரா

பாத மலர் மீதில் போத மலர் தூவிப்
பாடுமவர் தோழத் – தம்பிரானே.

English

Alavizhi neelath thAlathara pAnath
thAlaLaka pArak – koNdalAlE

Aranakai yAlviR pOrnuthali nAlvith
thAranadai yAlnaR – kongaiyAlE

sAlamaya lAkik kAlathiri cUlath
thAliRuku pAsath – thunpamUzhkith

thAzhviluyir veezhpat tUzhvinaivi dAmaR
chAvathanmu nEvaR – koNdidAyO

sOlaitharu kAniR kOlamaRa mAnaith
thOLiluRa vAkak – koNdavAzhvE

sOthimuru kAnith thApazhaya njAnac
chONakiri veethik – kanthavELE

pAlakaka lApak kOmaLama yUrap
pAkavumai pAkath – thankumArA

pAthamalar meethiR pOthamalar thUvip
pAdumavar thOzhath – thambirAnE.

English Easy Version

Ala vizhi neelaththAl athara pAnaththAl
aLaka pArak – koNdalAlE

Ara nakaiyAl vil pOr nuthalinAl
viththAra nadaiyAl naR – kongaiyAlE

sAla mayalAki kAla(n) thiri cUlaththAl
iRuku pAsath – thunpa(m) mUzhkith

thAzhvil uyir veezh paddu Uzh vinai vidAmal
sAvathan mun Eval – koNdidAyO

sOlai tharu kAnil kOla maRa mAnaith
thOLil uRavAkak – koNda vAzhvE

sOthi murukA niththA pazhaya njAnac
chONakiri veethik – kantha vELE

pAlaka kalApak kOmaLa mayUrap
pAka umai pAkaththan – kumArA

pAtha malar meethil pOtha malar thUvip
pAdumavar thOzhath – thambirAnE.