திருப்புகழ் 383 பேதக விரோத (திருவருணை)

Thiruppugal 383 Pedhagavirodha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் – தந்ததான

பேதகவி ரோதத் தோதகவி நோதப்
பேதையர்கு லாவைக் – கண்டுமாலின்

பேதைமையு றாமற் றேதமக லாமற்
பேதவுடல் பேணித் – தென்படாதே

சாதகவி காரச் சாதலவை போகத்
தாழ்விலுயி ராகச் – சிந்தையாலுன்

தாரைவடி வேலைச் சேவல்தனை யேனற்
சாரல்மற மானைச் – சிந்தியேனோ

போதகம யூரப் போதகக டாமற்
போதருணை வீதிக் – கந்தவேளே

போதகக லாபக் கோதைமுது வானிற்
போனசிறை மீளச் – சென்றவேலா

பாதகப தாதிச் சூரன்முதல் வீழப்
பாருலகு வாழக் – கண்டகோவே

பாதமலர் மீதிற் போதமலர் தூவிப்
பாடுமவர் தோழத் – தம்பிரானே.

பதம் பிரித்தது

தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் – தந்ததான

பேதகவி ரோதத் தோதக விநோதப்
பேதையர் குலாவைக் – கண்டு மாலின்

பேதைமை உறா மற்று ஏதம் அகலாமல்
பேதவுடல் பேணித் – தென்படாதே

சாதக விகாரச் சாதல் அவை போக
தாழ்வில் உயி ராகச் – சிந்தையால்

உன் தாரை வடிவேலைச் சேவல்தனை
ஏனல் சாரல் மறமானைச் – சிந்தியேனோ

போதக மயூரப் போது அக அகடாமன்
போது அருணை வீதிக் – கந்தவேளே

போதக கலாபக் கோதை முது வானில்
போனசிறை மீளச் – சென்றவேலா

பாதக பதாதிச் சூரன்முதல் வீழ
பாருலகு வாழக் – கண்டகோவே

பாதமலர் மீதிற் போதமலர் தூவி
பாடுமவர் தோழத் – தம்பிரானே.

English

pEthakavi rOthath thOthakavi nOthap
pEthaiyarku lAvaik – kaNdumAlin

pEthaimaiyu RAmat REthamaka lAmaR
pEthavudal pENith – thenpadAthE

sAthakavi kArac cAthalavai pOkath
thAzhviluyi rAkac – cinthaiyAlun

thAraivadi vElaic cEvalthanai yEnaR
cAralmaRa mAnaic – cinthiyEnO

pOthakama yUrap pOthakaka dAmaR
pOtharuNai veethik – kanthavELE

pOthakaka lApak kOthaimuthu vAniR
pOnaciRai meeLas – cenRavElA

pAthakapa thAthic cUranmuthal veezhap
pArulaku vAzhak – kaNdakOvE

pAthamalar meethiR pOthamalar thUvip
pAdumavar thOzhath – thambirAnE.

English Easy Version

pEthakavi rOthath thOthakavi nOthap
pEthaiyar ku lAvaik – kaNdumAlin

pEthaimaiyu RAmat REthamaka lAmaR
pEthavudal pENith – thenpadAthE

sAthakavi kArac cAthalavai pOka
thAzhviluyi rAkac – cinthaiyAlun

thAraivadi vElaic cEvalthanai yEnaR
cAralmaRa mAnaic – cinthiyEnO

pOthakama yUrap pOthakaka dAmaR
pOthu aruNai veethik – kanthavELE

pOthakaka lApak kOthaimuthu vAniR
pOnaciRai meeLas – cenRavElA

pAthakapa thAthic cUranmuthal veezha
pArulaku vAzhak – kaNdakOvE

pAthamalar meethiR pOthamalar thUvi
pAdumavar thOzhath – thambirAnE.