Thiruppugal 389 Viragoduvalai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் – தனதான
விரகொடு வளைசங் கடமது தருவெம்
பிணிகொடு விழிவெங் – கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின்
றெனவிதி வழிவந் – திடுபோதிற்
கரவட மதுபொங் கிடுமன மொடுமங்
கையருற வினர்கண் – புனல்பாயுங்
கலகமும் வருமுன் குலவினை களையுங்
கழல்தொழு மியல்தந் – தருள்வாயே
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும்
படவர வணைகண் – டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம்
பயமற விடமுண் – டெருதேறி
அரவொடு மதியம் பொதிசடை மிசைகங்
கையுமுற அனலங் – கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங்
கருணையில் மருவும் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தனனம் தனதன தனனம்
தனதன தனனம் – தனதான
விரகொடு வளை சங்கடம் அது தரு வெம்
பிணி கொடு விழி வெம் – கனல் போல
வெறி கொடு சமன் நின்று உயிர் கொள்ளும் நெறி
இன்று என விதி வழி – வந்திடு போதில்
கரவடம் அது பொங்கிடு மனமொடு மங்கையர்
உறவினர் கண் – புனல் பாயும்
கலகமும் வரு முன் குலவினை களையும்
கழல் தொழும் இயல் தந்து – அருள்வாயே
பரவிடும் அவர் சிந்தையர் விடம் உமிழும்
பட அரவு அணை கண் – துயில் மால் அம்
பழ மறை மொழி பங்கயன் இமையவர் தம்
பயம் அற விடம் உண்டு – எருது ஏறி
அரவொடு மதியம் பொதி சடை மிசை
கங்கையும் உற அனல் அம் – கையில் மேவ
அரிவையும் ஒரு பங்கு இடம் உடையார் தங்கு
அருணையில் மருவும் – பெருமாளே.
English
virakodu vaLaisang kadamathu tharuvem
piNikodu vizhiveng – kanalpOla
veRikodu samanin RuyirkoLu neRiyin
Renavithi vazhivan – thidupOthiR
karavada mathupon gidumana moduman
gaiyaruRa vinarkaN – punalpAyum
kalakamum varumun kulavinai kaLaiyung
kazhalthozhu miyalthan – tharuLvAyE
paravidu mavarsin thaiyarvida mumizhum
padavara vaNaikaN – thuyilmAlam
pazhamaRai mozhipan gayanimai yavartham
payamaRa vidamuN – deruthERi
aravodu mathiyam pothisadai misaigan
gaiyumuRa analang – kaiyilmEva
Aivaiyu morupan gidamudai yavarthang
karuNaiyil maruvum – perumALE.
English Easy Version
virakodu vaLai sangkadam athu tharu vem
piNi kodu vizhi vem – kanal pOla
veRi kodu saman ninRu uyir koLLum neRi
inRu ena vithi vazhi – vanthidu pOthil
karavadam athu pongidu manamodu
mangaiyar uRavinar kaN – punal pAyum
kalakamum varu mun kulavinai kaLaiyum
kazhal thozhum iyal thanthu – aruLvAyE
paravidum avar sinthaiyar vidam umizhum
pada aravu aNai kaN – thuyil mAl am
pazha maRai mozhi pangayan imaiyavar tham
payam aRa vidam uNdu – eruthu Eri
aravodu mathiyam pothi sadai misai
gangaiyum uRa anal am – kaiyil mEva
arivaiyum oru pangu idam udaiyAr thangu
aruNaiyil maruvum – perumALE.