Thiruppugal 393 Arumamadhanai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனனா தனனத் தனனா தனனத்
தனனதா தனனத் – தனதான
அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக் – கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தணையா வலிகெட் – டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
றிளையா வுளமுக் – குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் – கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
டுரமோ டெறிபொற் – கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற் – புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக் – கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவீ தியினிற் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனனா தனனத் தனனா தனனத்
தனனதா தனனத் – தனதான
அருமா மதனைப் பிரியாத சரம்
கயல் ஆர் நயனக் – கொடியார் தம்
அழகு ஆர் புளக புழுகு ஆர் சயிலத்து
அணையா வலி கெட்டு – உடல் தாழ
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று
இளையா உளம் உக்கு – உயிர் சோர
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு
இரு பாதம் எனக்கு – அருள்வாயே
ஒரு மால் வரையைச் சிறு தூள் படவிட்டு
உரமோடு எறி பொன் – கதிர் வேலா
உறை மான் அடவிக் குற மா மகளுக்கு
உருகா ஆறிரு பொன் – புய வீரா
திருமால் கமலப் பிரமா விழியில்
தெரியா அரனுக்கு – அரியோனே
செழு நீர் வயல் சுற்று அருணா புரியில்
திரு வீதியினில் – பெருமாளே.
English
arumA mathanaip piriyA thasarak
kayalAr nayanak – kodiyArtham
azhakAr puLakap puzhukAr sayilath
thaNaiyA valiket – tudalthAzha
irumA nadaipuk kuraipO yuNArvaR
RiLaiyA vuLamuk – kuyirsOra
erivAy narakiR pukuthA thapadik
kirupA thamenak – karuLvAyE
orumAl varaiyaic ciRuthUL padavit
turamO deRipoR – kathirvElA
uRaimA nadavik kuRamA makaLuk
kurukA RirupoR – puyaveerA
thirumAl kamalap piramA vizhiyiR
ReriyA varanuk – kariyOnE
sezhuneer vayalcut RaruNA puriyiR
Riruvee thiyiniR – perumALE.
English Easy Version
arumA mathanaip piriyAtha saram
kayal Ar nayanak – kodiyAr tham
azhaku Ar puLaka puzhuku Ar sayilaththu
aNaiyA vali kettu – udal thAzA
irumA nadai pukku urai pOy uNarvu atRu
iLaiyA uLam ukku – uyir sOra
eri vAy narakil pukuthAthapadikku
iru pAtham enakku – aruLvAyE
oru mAl varaiyaic ciRu thUL padavittu
uramOdu eRi pon – kathir vElA
uRai mAn adavik kuRa mA makaLukku
urukA ARiru pon – puya veerA
thirumAl kamalap piramA vizhiyil
theriyA aranukku – ariyOnE
sezhu neer vayal cutRu aruNA puriyil
thiru veethiyinil – perumALE.