திருப்புகழ் 394 அழுதும் ஆவா (திருவருணை)

Thiruppugal 394 Azhudhumava

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனா தானனத் தனதனா தானனத்
தனதனா தானனத் – தனதான

அழுதுமா வாவெனத் தொழுதமூ டூடுநெக்
கவசமா யாதரக் – கடலூடுற்

றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்
கறியொணா மோனமுத் – திரைநாடிப்

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்
பெரியஆ தேசபுற் – புதமாய

பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்
பெறுவதோ நானினிப் – புகல்வாயே

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்
படியுமா றாயினத் – தனசாரம்

பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்
பரமமா யூரவித் – தகவேளே

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்
பொடிபடா வோடமுத் – தெறிமீனப்

புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்
பொருதவே லாயுதப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனா தானனத் தனதனா தானனத்
தனதனா தானனத் – தனதான

அழுதும் ஆவா எனத் தொழுதும் ஊடூடு நெக்கு
அவசமாய் ஆதரக் – கடல் ஊடுற்று

அமைவில் கோலாகலச் சமய மா பாதகர்க்கு
அறி ஒணா மோன – முத்திரை நாடி

பிழை படா ஞான மெய்ப் பொருள் பெறாதே வினைப்
பெரிய ஆதேச புற்பதம் – ஆய

பிறவி வாராகரம் சுழியிலே போய் விழப்
பெறுவதோ நான் இனிப் – புகல்வாயே

பழைய பாகீரதிப் படுகை மேல் வாழ்வு எனப்
படியும் ஆறு ஆயினத் – தன சாரம்

பருகுமாறு ஆனனச் சிறுவ சோணாசலப்
பரம மாயூர – வித்தக வேளே

பொழுது சூழ் போது வெற்பு இடிபடா பார் முதல்
பொடி படா ஓட முத்து – எறி மீனப்

புணரி கோ கோ என சுருதி கோ கோ என
பொருத வேலாயுதப் – பெருமாளே.

English

azhuthumA vAvenath thozhuthamU dUdunek
kavasamA yAtharak – kadalUdut

RamaivilkO lAkalac camayamA pAthakrk
kaRiyoNA mOnamuth – thirainAdip

pizhaipadA njAnameyp poruLpeRA thEvinaip
periyaA thEsapuR – puthamAya

piRavivA rAkarac cuzhiyilE pOyvizhap
peRuvathO nAninip – pukalvAyE

pazhaiyapA keerathip padukaimEl vAzhvenap
padiyumA RAyinath – thanasAram

parukumA RAnanac ciRuvasO NAsalap
paramamA yUravith – thakavELE

pozhuthusUzh pOthuveR pidipadA pArmuthaR
podipadA vOdamuth – theRimeenap

puNarikO kOvenac curuthikO kOvenap
poruthavE lAyuthap – perumALE.

English Easy Version

azhuthum AvA enath thozhuthum UdUdu nekku
avasamAy Atharak – kadal UduRRu

amaivil kOlAkalac camaya mA pAthakarkku
aRi oNA mOna – muththirai nAdi

pizhai padA njAna meyp poruL peRAthE vinaip
periya AthEsa – puRpatham Aya

piRavi vArAkaram suzhiyilE pOy vizhap
peRuvathO nAn inip – pukalvAyE

pazhaiya pAkeerathip padukai mEl vAzhvu enap
padiyum ARu Ayinath – thana sAram

parukumARu Ananac ciRuva sONAsalap
parama mAyUra – viththaka vELE

pozhuthu sUzh pOthu veRpu idipadA pAr muthal
podi padA Oda muththu – eRi meenap

puNari kO kO ena suruthi kO kO ena
porutha vElAyuthap – perumALE.