திருப்புகழ் 395 ஆனை வரிக் கோடு (திருவருணை)

Thiruppugal 395 Anaivarikkodu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் – தனதானா

ஆனைவரிக் கோடிளநிர்ப் பாரமுலைச் சாரசைபட்
டாடைமறைத் தாடுமலர்க் – குழலார்கள்

ஆரவடத் தோடலையப் பேசிநகைத் தாசைபொருட்
டாரையுமெத் தாகமயக் – கிடுமோகர்

சோனைமழைப் பாரவிழித் தோகைமயிற் சாதியர்கைத்
தூதுவிடுத் தேபொருளைப் – பறிமாதர்

தோதகமுற் றேழ்நரகிற் சேருமழற் காயனையுட்
சோதியொளிப் பாதமளித் – தருள்வாயே

தானதனத் தீதிமிலைப் பேரிகைகொட் டாசமலைச்
சாயகடற் சூரைவதைத் – திடுவோனே

தாளவியற் சோதிநிறக் காலினெழக் கோலியெடுத்
தாபரம்வைத் தாடுபவர்க் – கொருசேயே

தேனிரசக் கோவையிதழ்ப் பூவைகுறப் பாவைதனத்
தேயுருகிச் சேருமணிக் – கதிர்வேலா


சீரருணைக் கோபுரமுற் றானபுனத் தோகையுமெய்த்
தேவமகட் கோர்கருணைப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் – தனதானா

ஆனை வரிக் கோடு இள நீரப் பார முலைச் சார் அசை பட்டு
ஆடை மறைத்து ஆடும் மலர்க் – குழலார்கள்

ஆர வடத் தோடு அலையப் பேசி நகைத்து ஆசை பொருட்டு
யாரையும் மெத்தாக மயக்கிடும் – மோகர்

சோனை மழைப் பார விழித் தோகை மயில் சாதியர் கைத்
தூது விடுத்தே பொருளைப் – பறி மாதர்

தோதகம் உற்று ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட்
சோதி ஒளிப் பாதம் அளித்து – அருள்வாயே

தானதனத்தீ திமிலை பேரிகை கொட்ட சம் மலைச்
சாய கடல் சூரை வதைத் – திடுவோனே

தாள இயல் சோதி நிறக் காலின் எழக் கோலி எடுத்(து)
தாபரம் வைத்து ஆடுபவர்க்கு – ஒரு சேயே

தேனின் இரசக் கோவை இதழ்ப் பூவை குறப் பாவை தனத்தே
உருகிச் சேரும் அணிக் – கதிர் வேலா

சீர் அருணைக் கோபுரம் உற்று ஆன புனத் தோகையும் மெய்
தேவ மகட்கு ஓர் கருணைப் – பெருமாளே.

English

Anaivarik kOdiLanirp pAramulaic chArasaipat
tAdaimaRaith thAdumalark – kuzhalArkaL

Aravadath thOdalaiyap pEsinakaith thAsaiporut
tAraiyumeth thAkamayak – kidumOkar

sOnaimazhaip pAravizhith thOkaimayiR chAthiyarkaith
thUthuviduth thEporuLaip – paRimAthar

thOthakamut REzhnarakiR chErumazhaR kAyanaiyut
chOthiyoLip pAthamaLith – tharuLvAyE

thAnathanath theethimilaip pErikaikot tAsamalaic
chAyakadaR cUraivathaith – thiduvOnE

thALaviyaR chOthiniRak kAlinezhak kOliyeduth
thAparamvaith thAdupavark – korusEyE

thEnirasak kOvaiyithazhp pUvaikuRap pAvaithanath
thEyurukic chErumaNik – kathirvElA

seeraruNaik kOpuramut RAnapunath thOkaiyumeyth
thEvamakat kOrkaruNaip – perumALE.

English Easy Version

Anai varik kOdu iLa neerap pAra mulaic chAr asai pattu
Adai maRaiththu Adum malark – kuzhalArkaL

Ara vadath thOdu alaiyap pEsi nakaiththu Asai poruttu
yAraiyum meththAka mayakkidum – mOkar

sOnai mazhaip pAra vizhith thOkai mayil sAthiyar kaith
thUthu viduththE poruLaip – paRi mAthar

thOthakam utRu Ezh narakil sErum azhaR kAyanai ut
chOthi oLip pAtham aLiththu – aruLvAyE

thAnathanaththee thimilai pErikai kotta sam malaic
chAya kadal cUrai vathaith – thiduvOnE

thALa iyal chOthi niRak kAlin ezhak kOli eduth(thu)
thAparam vaiththu Adupavarkku – oru sEyE

thEnin irasak kOvai ithazhp pUvai kuRap pAvai thanaththE
urukic chErum aNik – kathir vElA

seer aruNaik kOpuram utRu Ana punath thOkaiyum mey
thEva makatku Or karuNaip – perumALE.