திருப்புகழ் 396 இடருக்கு இடர் (திருவருணை)

Thiruppugal 396 Idarukkuidar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனனத் தனதானன தனனத் தனதானன
தனனத் தனதானன – தனதான

இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு
மிறுதிச் சிறுகால்வரு – மதனாலே

இயலைத் தருகானக முயலைத் தருமேனியி
லெரியைத் தருமாமதி – நிலவாலே

தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை
தொலையத் தனிவீசிய – கடலாலே

துணையற் றணிபூமல ரணையிற் றனியேனுயிர்
துவளத் தகுமோதுயர் – தொலையாதோ

வடபொற் குலமேருவின் முடுகிப் பொருசூரனை
மடியச் சுடஏவிய – வடிவேலா

மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள்
மகிழப் புனமேவிய – மயில்வீரா

அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய
லருணைத் திருவீதியி – லுறைவோனே

அவனித் திருமாதொடு சிவனுக் கிமையாவிழி
அமரர்க் கரசாகிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனனத் தனதானன தனனத் தனதானன
தனனத் தனதானன – தனதான

இடருக்கு இடர் ஆகிய கொடுமைக் கணை மேல் வரும்
இறுதிச் சிறு கால் வரும் – அதனாலே

இயலைத் தரு கானகம் முயலைத் தரு மேனியில்
எரியைத் தரு மா மதி – நிலவாலே

தொடரக் கொடு வாதையில் அடையக் கரை மேல் அலை
தொலையத் தனி வீசிய – கடலாலே

துணை அற்ற பூ மலர் அணையில் தனியேன் உயிர்
துவளத் தகுமோ துயர் – தொலையாதோ

வட பொற் குல மேருவின் முடுகின் பொரு சூரனை
மடியச் சுட ஏவிய – வடிவேலா

மறவக் குலமாம் ஒரு குற மெய்த் திரு மா மகள்
மகிழப் புன மேவிய – மயில் வீரா

அடரப் படர் கேதகம் மடலின் தழை சேர் வயல்
அருணைத் திரு வீதியில் – உறைவோனே

அவனித் திரு மாதொடு சிவனுக்கு இமையா விழி
அமரர்க்கு அரசாகிய – பெருமாளே.

English

idaruk kidarAkiya kodumaik kaNaimElvarum
iRuthic ciRukAlvaru – mathanAlE

iyalaith tharukAnaka muyalaith tharumEniyil
eriyaith tharumAmathi – nilavAlE

thodarak koduvAthaiyi ladaiyak karaimElalai
tholaiyath thaniveesiya – kadalAlE

thuNaiyat RaNipUmala raNaiyit RaniyEnuyir
thuvaLath thakumOthuyar – tholaiyAthO

vadapoR kulamEruvin mudukip porucUranai
madiyac cudaEviya – vadivElA

maRavak kulamAmoru kuRameyth thirumAmakaL
makizhap punamEviya – mayilveerA

adarap padarkEthakai madalit RazhaisErvayal
aruNaith thiruveethiyi – luRaivOnE

avanith thirumAthodu sivanuk kimaiyAvizhi
amarark karasAkiya – perumALE.

English Easy Version

idarukku idar Akiya kodumaik kaNai mEl varum
iRuthic ciRu kAl varum – athanAlE

iyalaith tharu kAnakam muyalaith tharu mEniyil
eriyaith tharu mA mathi – nilavAlE

thodarak kodu vAthaiyil adaiyak karai mEl alai
tholaiyath thani veesiya – kadalAlE

thuNai atRa pU malar aNaiyil thaniyEn uyir
thuvaLath thakumO thuyar – tholaiyAthO

vada poR kula mEruvin mudukin poru cUranai
madiyac cuda Eviya – vadivElA

maRavak kulamAm oru kuRa meyth thiru mA makaL
makizhap puna mEviya – mayil veerA

adarap padar kEthakam madalin thazhai sEr vayal
aruNaith thiru veethiyil – uRaivOnE

avanith thiru mAthodu sivanukku imaiyA vizhi
amararkku arasAkiya – perumALE.