திருப்புகழ் 398 இரத சுரதமுலை (திருவருணை)3

Thiruppugal 398 Iradhasuradhamulai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த – தனதனத் தனதான

இரத சுரதமுலை களுமார்பு குத்த நுதல்வேர் வரும்ப
அமுத நிலையில்விர லுகிரேகை தைக்க மணிபோல் விளங்க
இசலி யிசலியுப ரிதலீலை யுற்று இடைநூல் நுடங்க – வுளமகிழ்ச் சியினோடே

இருவ ருடலுமொரு வுருவாய்ந யக்க முகமே லழுந்த
அளக மவிழவளை களுமேக லிக்க நயனா ரவிந்த
லகரி பெருகஅத ரமுமேய ருத்தி முறையே யருந்த – உரையெழப் பரிவாலே

புருவ நிமிரஇரு கணவாள்நி மைக்க வுபசா ரமிஞ்ச
அவச கவசமள வியலேத ரிக்க அதிலே யநந்த
புதுமை விளையஅது பரமாப ரிக்க இணைதோ ளுமொன்றி – அதிசுகக் கலையாலே


புளக முதிரவிர கமென்வாரி தத்த வரைநாண் மழுங்க
மனமு மனமுமுரு கியெயாத ரிக்க வுயிர்போ லுகந்து
பொருள தளவுமரு வுறுமாய வித்தை விலைமா தர்சிங்கி – விடஅருட் புரிவாயே

பரவு மகரமுக ரமுமேவ லுற்ற சகரால் விளைந்த
தமர திமிரபிர பலமோக ரத்ந சலரா சிகொண்ட
படியை முழுதுமொரு நொடியேம தித்து வலமா கவந்து – சிவனிடத் தமர்சேயே

பழநி மிசையிலிசை யிசையேர கத்தில் திருவா வினன்கு
டியினில் பிரமபுர மதில்வாழ்தி ருத்த ணிகையூ டுமண்டர்
பதிய முதியகதி யதுநாயெ னுக்கு முறவா கிநின்று – கவிதையைப் புனைவோனே


அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபா லனன்ப
ரடையு மிடரைமுடு கியெநூற துட்ட கொலைகா ரரென்ற
அசுரர் படையையடை யவும்வேர றுத்த அபிரா மசெந்தி – லுரகவெற் புடையோனே

அருண கிரணகரு ணையபூர ணச்ச ரணமே லெழுந்த
இரண கரணமுர ணுறுஞ்ர னுட்க மயிலே றுகந்த
அருணை யிறையவர்பெ ரியகோபு ரத்தில் வடபா லமர்ந்த – அறுமுகப் பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த
தனன தனதனன தனதான தத்த தனனா தனந்த – தனதனத் தனதான

இரத சுரத முலைகளு(ம்) மார்பு குத்த நுதல் வேர்வு அரும்ப
அமுத நிலையில் விரல் உகி ரேகை தைக்க மணி போல்
விளங்க
இசலி இசலி உபரித லீலை உற்று இடை நூல் நுடங்க உ(ள்)ள – மகிழ்ச்சியினோடே

இருவர் உடலும் ஒரு உருவாய் நயக்க முக(ம்) மேல் அழுந்த
அளகம் அவிழ வளைகளுமே கலிக்க நயன அரவிந்த
லகரி பெருக அதரமுமே அருத்தி முறையே அருந்த – உரை எழப் பரிவாலே

புருவம் நிமிர இரு கண் அ(வ்)வாள் நிமைக்க உபசார(ம்) மிஞ்ச
அவசம் கவசம் அளவு இயலே தரிக்க அதிலே அநந்த
புதுமை விளைய அது பரமாபரிக்க இணை தோளும் ஒன்றி – அதி சுகக் கலையாலே

புளக(ம்) முதிர இத கம் என் வாரி தத்த வரை நாண் மழுங்க
மனமும் மனமும் உருகியெ ஆதரிக்க உயிர் போல் உகந்து
பொருளது அளவு மருவு உறு மாய வித்தை விலை மாதர்
சிங்கி விட – அருள் புரிவாயே

பரவு மகர முகரமு(ம்) மேவல் உற்ற சக(ர)ரால் விளைந்த
தமர(ம்) திமிர(ம்) பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து – சிவனிடத்து அமர் சேயே

பழநி மிசையில் இசை இசை ஏரகத்தில் திருவாவினன்
குடியினில் பிரமபுரம் அதில் வாழ் திருத்தணிகை ஊடும்
அண்டர்
பதிய முதிய கதியது நாயேனுக்கும் உறவாகி நின்று கவிதையைப் – புனைவோனே

அரியும் அயனும் அமரரும் ஆய சிட்ட பரிபாலன் அன்பர்
அடையும் இடரை முடுகியெ நூற துட்ட கொலைகாரர் என்ற அசுரர் படையை அடையவும் வேர் அறுத்த அபிராம செந்தில் உரக வெற்பு – உடையோனே

அருண கிரண கருணைய பூரணச் சரணம் மேல் எழுந்த இரண கரணம் முரண் உறு சூரன் உட்க மயில் ஏறு கந்த
அருணை இறையவர் பெரிய கோபுரத்தில் வடபால் அமர்ந்த அறுமுகப் – பெருமாளே.

English

iratha surathamulai kaLumArpu kuththa nuthalvEr varumpa
amutha nilaiyilvira lukirEkai thaikka maNipOl viLanga
isali yisaliyupa rithaleelai yutRu idainUl nudanga – vuLamakizhc chiyinOdE


iruva rudalumoru vuruvAyna yakka mukamE lazhuntha
aLaka mavizhavaLai kaLumEka likka nayanA ravintha
lakari perukaatha ramumEya ruththi muRaiyE yaruntha – uraiyezhap parivAlE

puruva nimirairu kaNavALni maikka vupachA raminja
avasa kavasamaLa viyalEtha rikka athilE yanantha
puthumai viLaiyaathu paramApa rikka iNaithO LumonRi – athisukak kalaiyAlE

puLaka muthiravira kamenvAri thaththa varainAN mazhunga
manamu manamumuru kiyeyAtha rikka vuyirpO lukanthu
poruLa thaLavumaru vuRumAya viththai vilaimA tharsingi – vidaarut purivAyE


paravu makaramuka ramumEva lutRa sakarAl viLaintha
thamara thimirapira palamOka rathna salarA sikoNda
padiyai muzhuthumoru nodiyEma thiththu valamA kavanthu – sivanidath thamarsEyE


pazhani misaiyilisai yisaiyEra kaththil thiruvA vinanku
diyinil piramapura mathilvAzhthi ruththa NikaiyU dumaNdar
pathiya muthiyakathi yathunAye nukku muRavA kininRu – kavithaiyaip punaivOnE

ariyu mayanumama rarumAya sitta paripA lananpa
radaiyu midaraimudu kiyenURa thutta kolaikA rarenRa
asurar padaiyaiyadai yavumvEra Ruththa apirA masenthi – lurakaveR pudaiyOnE

aruNa kiraNakaru NaiyapUra Naccha raNamE lezhuntha
iraNa karaNamura NuRusUra nutka mayilE Rukantha
aruNai yiRaiyavarpe riyakOpu raththil vadapA lamarntha – aRumukap perumALE.

English Easy Version

iratha suratha mulaikaLu(m) mArpu kuththa nuthal vErvu arumpa
amutha nilaiyil viral uki rEkai thaikka maNi pOl viLanga
isali isali uparitha leelai utRu idai nUl nudanga – u(L)La makizh cchiyinOdE

iruvar udalum oru uruvAy nayakka muka(m) mEl azhuntha
aLakam avizha vaLaikaLumE kalikka nayana aravintha
lakari peruka atharamumE aruththi muRaiyE aruntha – urai ezhap parivAlE

puruvam nimira iru kaN a(v)vAL nimaikka upachAra(m) minja
avasam kavasam aLavu iyalE tharikka athilE anantha
puthumai viLaiya athu paramAparikka iNai thOLum onRi – athi sukak kalaiyAlE

puLaka(m) muthira itha kam en vAri thaththa varai nAN mazhunga
manamum manamum urukiye Atharikka uyir pOl ukanthu
poruLathu aLavu maruvu uRu mAya viththai vilai mAthar singi vida – aruL purivAyE

paravum akara mukaramu(m) mEval utRa saka(ra)rAl viLaintha
thamara(m) thimira(m) pirapala mOka rathna sala rAsi koNda
padiyai muzhuthum oru nodiyE mathiththu valamAka vanthu sivanidaththu – amar sEyE

pazhani misaiyil isai isai Erakaththil thiruvAvinankudiyinil
piramapuram athil vAzh thiruththaNigai Udum aNdar
pathiya muthiya kathiyathu nAyEnukkum uRavAki ninRu – kavithaiyaip punaivOnE

ariyum ayanum amararum Aya sitta paripAlan anpar
adaiyum idarai mudukiye nURa thutta kolaikArar enRa
asurar padaiyai adaiyavum vEr aRuththa apirAma senthil – uraka veRpu udaiyOnE

aruNa kiraNa karuNaiya pUraNac charaNam mEl ezhuntha
iraNa karaNam muraN uRu cUran udka mayil ERu kantha
aruNai iRaiyavar periya kOpuraththil vadapAl amarntha – aRumukap perumALE.