திருப்புகழ் 400 இருவர் மயலோ (திருவருணை)

Thiruppugal 400 Iruvarmayalo

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனனா தனன தனனா
தனன தனனா – தனதான

இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ – அணுகாத

இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா – னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் – மொழிவாரோ

உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா – கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா – கியபூதப்

படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா – கியவேலா

அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் – விடுவோனே

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனனா தனன தனனா
தனன தனனா – தனதான

இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ – அணுகாத

இருடி அயன்மால் அமரர் அடியார்
இசையும் ஒலிதான் – இவைகேளாது

ஒருவன் அடியேன் அலறு மொழிதான்
ஒருவர் பரிவாய் – மொழிவாரோ

உனது பததூள் புவன கிரிதான்
உனது கிருபாகரம் – ஏதோ

பரம குருவாய் அணுவில் அசைவாய்
பவன முதலாகிய – பூதப்

படையும் உடையாய் சகல வடிவாய்
பழைய வடிவாகிய – வேலா

அரியும் அயனோடு அபயம் எனவே
அயிலை யிருள்மேல் – விடுவோனே

அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் – பெருமாளே.

English

iruvar mayalO amaLi vidhamO
enana seyalO – aNugAdha

irudi ayan mAl amarar adiyAr
isaiyum olithAn – ivaikeLAdh

oruvan adiyEn alaRum mozhithAn
oruvar parivAy – mozhivArO

unadhu padhathUL buvana girithAn
unadhu kirupA – karam EdhO

parama guruvAy aNuvil asaivAy
pavana mudhal – Agiya bUtha

padaiyum udaiyAy sakala vadivAy
pazhaiya vadivA – giya vElA

ariyum ayanOd abayam enavE
ayilai iruLmEl – viduvOnE

adimai kodu nOy podigaL padavE
aruNagiri vAzh – perumALE.

English Easy Version

iruvar mayalO amaLi vidhamO
enana seyalO – aNugAdha

irudi ayan mAl amarar adiyAr
isaiyum olithAn – ivaikeLAdhu

oruvan adiyEn alaRum mozhithAn
oruvar parivAy – mozhivArO

unadhu padhathUL buvana girithAn
unadhu kirupA – karam EdhO

parama guruvAy aNuvil asaivAy
pavana mudhal – Agiya bUtha

padaiyum udaiyAy sakala vadivAy
pazhaiya vadivAgiya – vElA

ariyum ayanOd abayam enavE
ayilai iruLmEl – viduvOnE

adimai kodu nOy podigaL padavE
aruNagiri vAzh – perumALE.