திருப்புகழ் 402 இருவினை ஊண் (திருவருணை)

Thiruppugal 402 Iruvinaiun

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
தனதன தாந்த தந்த – தனதான

இருவினை யூண்ப சும்பை கருவிளை கூன்கு டம்பை
யிடரடை பாழ்ம்பொ தும்ப – கிதவாரி

இடைதிரி சோங்கு கந்த மதுவது தேங்கு கும்ப
மிரவிடை தூங்கு கின்ற – பிணநோவுக்

குருவியல் பாண்ட மஞ்சு மருவிய கூண்டு நெஞ்சொ
டுயிர்குடி போங்கு ரம்பை – யழியாதென்

றுலகுட னேன்று கொண்ட கருமபி ராந்தொ ழிந்து
னுபயப தாம்பு யங்க – ளடைவேனோ

அருணையி லோங்கு துங்க சிகரக ராம்பு யங்க
ளமரர் குழாங்கு விந்து – தொழவாழும்

அடியவர் பாங்க பண்டு புகலகி லாண்ட முண்ட
அபிநவ சார்ங்க கண்டன் – மருகோனே

கருணைம்ரு கேந்த்ர அன்ப ருடனுர கேந்த்ரர் கண்ட
கடவுள்ந டேந்த்ரர் மைந்த – வரைசாடுங்

கலபக கேந்த்ர தந்த்ர அரசநி சேந்த்ர கந்த
கரகுலி சேந்த்ரர் தங்கள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தாந்த தந்த தனதன தாந்த தந்த
தனதன தாந்த தந்த – தனதான

இருவினை ஊண் பசும் பை, கரு விளை கூன் குடம்பை
இடர் அடை பாழ் பொதும்பு – அகித வாரி

இடை திரி சோங்கு கந்தம் மது அது தேங்கு கும்பம்
இரவு இடை தூங்குகின்ற – பிண நோவுக்கு

உருவு இயல் பாண்டம் அஞ்சும் மருவிய கூண்டு நெஞ்சொடு
உயிர் குடி போம் குரம்பை – அழியாது என்று

உலகுடன் ஏன்று கொண்ட கரும பிராந்தி ஒழிந்து
உன் உபய பதாம் புயங்கள் – அடைவேனோ

அருணையில் ஓங்கு துங்க சிகரம் கராம் புயங்கள்
அமரர் குழாம் குவிந்து – தொழ வாழும்

அடியவர் பாங்க பண்டு புகல் அகிலாண்டம் உண்ட
அபிநவ சார்ங்க கண்டன் – மருகோனே

கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் உரகேந்த்ரர் கண்ட
கடவுள் நடேந்த்ரர் மைந்த – வரை சாடும்

கலபக கேந்த்ர தந்த்ர அரச நிசேந்த்ர கந்த
குலிச கர இந்த்ரர் தங்கள் – பெருமாளே.

English

iruvinai yUNpa sumpai karuviLai kUnku dampai
yidaradai pAzhmpo thumpa – kithavAri

idaithiri sOngu kantha mathuvathu thEngu kumpa
miravidai thUngu kinRa – piNanOvuk

kuruviyal pANda manju maruviya kUNdu nenjo
duyirkudi pOnku rampai – yazhiyAthen

Rulakuda nEnRu koNda karumapi rAntho zhinthu
nupayapa thAmpu yanga – LadaivEnO

aruNaiyi lOngu thunga sikaraka rAmpu yanga
Lamarar kuzhAnku vinthu – thozhavAzhum

adiyavar pAnga paNdu pukalaki lANda muNda
abinava sArnga kaNdan – marukOnE

karuNaimru kEnthra anpa rudanura kEnthrar kaNda
kadavuLna tEnthrar maintha – varaisAdum

kalapaka kEnthra thanthra arasani sEnthra kantha
karakuli sEnthrar thangaL – perumALE.

English Easy Version

iruvinai UN pasum pai karu viLai kUn kudampai
idar adai pAzh pothumpu – akitha vAri

idai thiri sOngu kantham mathu athu thEngu kumpam
iravu idai thUngukinRa -piNa nOvukku

uruvu iyal pANdam anjum maruviya kUNdu nenjodu
uyir kudi pOm kurampai – azhiyAthu enRu

ulakudan EnRu koNda karuma pirAnthi ozhinthu
un upaya pathAm puyangaL – adaivEnO

aruNaiyil Ongu thunga sikaram karAm puyangaL
amarar kuzhAm kuvinthu – thozha vAzhum

adiyavar pAnga paNdu pukal akilANdam uNda
abinava sArnga kaNdan – marukOnE

karuNai mrukEnthra anparudan urakEnthrar kaNda
kadavuL natEnthrar maintha – varai sAdum

Kalapaka kEnthra thanthra arasa nisEnthra kantha
kulisa kara inthrar thangaL – perumALE.