திருப்புகழ் 405 உலையிலனல் (திருவருணை)

Thiruppugal 405 Ulaiyilanal

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தத்த தனதனன தத்த
தனதனன தத்த – தனதான

உலையிலன லொத்த வுடலினனல் பற்றி
யுடுபதியை முட்டி – யமுதூற

லுருகிவர விட்ட பரமசுக முற்று
வுனதடியை நத்தி – நினையாமற்

சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
திகழ்முகவர் முத்து – நகையாலே

சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
திருடனென வெட்கி – யலைவேனோ

கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
கனகமயில் விட்ட – கதிர்வேலா

கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
கதவமண ருற்ற – குலகாலா

அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
அருணைவளர் வெற்பி – லுறைவோனே

அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
அரசுநிலை யிட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தத்த தனதனன தத்த
தனதனன தத்த – தனதான

உலையில் அனல் ஒத்த உடலின் அனல் பற்றி
உடு பதியை முட்டி – அமுது ஊறல்

உருகி வர விட்ட பரம சுகம் உற்று
உனது அடியை நத்தி – நினையாமல்

சிலை நுதலில் இட்ட திலதம் அவிர் பொட்டு
திகழ்முகவர் முத்து – நகையாலே

\சிலுகு வலை இட்ட மயல் கவலை பட்டுத்
திருடன் என வெட்கி – அலைவேனோ

கலை கனக வட்ட திமிலை பறை கொட்ட
கனக மயில் விட்ட – கதிர் வேலா

கருதலரின் முட்டிக் கருகி வரு துட்ட
கத(ம்) அமணர் உற்ற – குலகாலா

அலை கடல் உடுத்த தலம் அதனில் வெற்றி
அருணை வளர் வெற்பில் – உறைவோனே

அசுரர்களை வெட்டி அமரர் சிறை விட்டு
அரசு நிலை இட்ட – பெருமாளே.

English

ulaiyilana loththa vudalinanal patRi
yudupathiyai mutti – yamuthURa

lurukivara vitta paramasuka mutRu
vunathadiyai naththi – ninaiyAmaR

silainuthali litta thilathamavir pottu
thikazhmukavar muththu – nakaiyAlE

silukuvalai yitta mayalkavalai pattuth
thirudanena vetki – yalaivEnO

kalaikanaka vatta thimilaipaRai kotta
kanakamayil vitta – kathirvElA

karuthalarin muttik karukivaru thutta
kathavamaNa rutRa – kulakAlA

alaikadalu duththa thalamathanil vetRi
aruNaivaLar veRpi – luRaivOnE

asurarkaLai vetti yamararsiRai vittu
arasunilai yitta – perumALE.

English Easy Version

ulaiyil anal oththa udalin anal patRi
udu pathiyai mutti – amuthu URal

uruki vara vitta parama sukam utRu
unathu adiyai naththi – ninaiyAmal

silai nuthalil itta thilatham avir pottu
thikazh mukavar muththu – nakaiyAlE

siluku valai itta mayal kavalai pattuth
thirudan ena vedki – alaivEnO

kalai kanaka vatta thimilai paRai kotta
kanaka mayil vitta – kathir vElA

karuthalarin muttik karuki varu thutta
katha(m) amaNar utRa – kulakAlA

alai kadal uduththa thalam athanil vetRi
aruNai vaLar veRpil – uRaivOnE

asurarkaLai vetti amarar siRai vittu
arasu nilai itta – perumALE.