திருப்புகழ் 407 கமலமுகப் பிறை (திருவருணை)

Thiruppugal 407 Kamalamugappirai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் – தனதான

கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற்
கயலெனபொற் சுழலும்விழிக் – குழல்கார்போல்

கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற்
கரகமலத் துகிர்விரலிற் – கிளிசேருங்

குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக்
குவிமுலைசற் றசையமணிக் – கலனாடக்

கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக்
குனகிபொருட் பறிபவருக் – குறவாமோ


திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட்
டிமிடிமிடிட் டிகுர்திமிதித் – தொலிதாளம்

செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட்
டிகைசிலைபட் டுவரிபடச் – சிலைகோடித்

துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத்
தொகுதசைதொட் டலகையுணத் – தொடும்வேலா

துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற்
சுகமொடணைத் தருணகிரிப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
தனதனனத் தனதனனத் – தனதான

கமல முகப் பிறை நுதல் பொன் சிலை என வச்சிர கணை நல்
கயல் என பொன் சுழலும் விழிக் – குழல் கார் போல்

கதிர் தரள் ஒப்பிய தசனம் கமுகு களம் புய கழை பொன்
கர கமலத்து உகிர் விரலின் – கிளி சேரும்

குமரி தனத் திதலை மலைக்கு இசலி இணைக் கலசம் எனக்
குவி முலை சற்று அசைய மணிக் – கலன் ஆட

கொடி இடை பட்டு உடை நடை பொன் சரண மயில் கமனம் எனக்
குனகி பொருள் பறி (ப்) பவருக்கு – உறவாமோ

திமிலை உடுக்கு உடன் முரசு பறை திமிதித் திமிதிம் எனட்
டிமி டிமி டிட் டிகுர் திமிதித் – ஒலி தாளம்

செககண செக் கண கதறத் திடுதிடு எனக் கொடு முடி எண்
திகை சிலை பட்டு உவரி பட – சிலை கோடித்

துமிலம் உடற்று அசுரர் முடி பொடி பட ரத்தம் உள் பெருக
தொகு தசை தொட்டு அலகை உ(ண்)ணத் – தொடும் வேலா

துவனி தினைப் புனம் மருவி குற மகளைக் களவு மயல்
சுகமொடு அணைத்த அருண கிரிப் – பெருமாளே.

English

kamalamukap piRainuthalpoR chilaiyenavac chirakaNainaR
kayalenapoR chuzhalumvizhik – kuzhalkArpOl

kathirtharaLop piyathasanak kamukukaLap puyakazhaipoR
karakamalath thukirviraliR – kiLisErum

kumarithanath thithalaimalaik kisaliyiNaik kalasamenak
kuvimulaisat RasaiyamaNik – kalanAdak

kodiyidaipat tudainadaipoR charaNamayiR kemanamenak
kunakiporut paRipavaruk – kuRavAmO

thimilaiyuduk kudanmurasup paRaithimithith thimithimena
dimidimidid dikurthimithith – tholithALam

sekakaNasek kaNakathaRath thiduthidenak kodumudiyet
tikaisilaipat tuvaripadac – chilaikOdith

thumilavudat Rasurarmudip podipadarath thamuLperukath
thokuthasaithot talakaiyuNath – thodumvElA

thuvanithinaip punamaruvik kuRamakaLaik kaLavumayaR
sukamodaNaith tharuNakirip – perumALE.

English Easy Version

kamala mukap piRai nuthal pon silai ena vacchira kaNai nal
kayal ena pon suzhalum vizhik – kuzhal kAr pOl

kathir tharaL oppiya thasanam kamuku kaLam puya kazhai pon
kara kamalaththu ukir viralin – kiLi sErum

kumari thanath thithalai malaikku isali iNaik kalasam enak
kuvi mulai satRu asaiya maNik – kalan Ada

kodi idai pattu udai nadai pon saraNa mayil kamanam enak
kunaki poruL paRi (p)pavarukku – uRavAmO

thimilai udukku udan murasu paRai thimithith thimithim ena
dtimi dimi dit tikur thimithith – oli thALam

sekakaNa sek kaNa kathaRath thiduthidu enak kodu mudi
eN thikai silai pattu uvari pada – silai kOdith

thumilam udatRu asurar mudi podi pada raththam uL peruka
thoku thasai thottu alakai u(N)Nath – thodum vElA

thuvani thinaip punam maruvi kuRa makaLaik kaLavu mayal sukamodu aNaiththa aruNa kirip – perumALE.