Thiruppugal 408 Kamalamottai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
தனன தத்தத் தத்த தத்தத் தனதன – தனதான
கமல மொட்டைக் கட்ட ழித்துக் குமிழியை
நிலைகு லைத்துப் பொற்கு டத்தைத் தமனிய
கலச வர்க்கத் தைத்த கர்த்துக் குலையற – இளநீரைக்
கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப
சயம்வி ளைத்துச் செப்ப டித்துக் குலவிய
கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத – னபிஷேகம்
அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து
அதிக சக்ரப் புட்ப றக்கக் கொடுமையி
னடல்ப டைத்தச் சப்ப டுத்திச் சபதமொ – டிருதாளம்
அறைதல் கற்பித் துப்பொ ருப்பைப் பரவிய
சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு
மபிந வச்சித் ரத்த னத்துத் திருடிக – ளுறவாமோ
தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை
தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு
தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட – எனவோதிச்
சவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ
விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள்
தசைகள் பட்சித் துக்க ளித்துக் கழுதொடு – கழுகாட
அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள
அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென
அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிடு – மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியி
னுலவு மெய்ப்ரத் யக்ஷ நற்சற் குருபர
அருணை யிற்சித் தித்தெ னக்குத் தெளிவருள் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
தனன தத்தத் தத்த தத்தத் தனதன
தனன தத்தத் தத்த தத்தத் தனதன – தனதான
கமல மொட்டைக் கட்டு அழித்துக் குமிழியை
நிலை குலைத்துப் பொன் குடத்தைத் தமனிய
கலச வர்க்கத்தைத் தகர்த்து குலை அற – இளநீரைக்
கறுவி வட்டைப் பின் துரத்திப் பொருது
அபசயம் விளைத்துச் செப்பு அடித்துக் குலவிய
கரி மருப்பைப் புக்கு ஒடித்து திறல் மதன் – அபிஷேகம்
அமலர் நெற்றிக் கண் தழற்குள் பொடி செய்து
அதிக சக்ரப் புள் பறக்கக் கொடுமையில்
அடல் படைத்து அச்சப்படுத்தி சபதமொடு – இரு தாளம்
அறைதல் கற்பித்துப் பொருப்பைப் பரவிய
சிறகு அறுப்பித்துக் கதிர்த்துப் புடைபடும்
அபிநவ சித்ரத் தனத்துத் திருடிகள் – உறவு ஆமோ
தமரம் மிக்குத் திக்கு அதிர்க்கப் பல பறை
தொகுதொகுக் குத்தொத் தொகுக்குத் தொகுதொகு
தரிகிடத் தத்தத் தரிக்கத் தரிகிட – என ஓதி
சவடு உறப் பக்கப் பழு ஒத்திப் புகை எழ
விழிகள் உள் செக்கச் சிவத்துக் குறளிகள்
தசைகள் பட்சித்துக் களித்துக் கழுதொடு – கழுகு ஆட
அமலை உற்றுக் கொக்கரித்துப் படுகள
அசுர ரத்தத்தில் குளித்துத் திமி என
அடி நடித்திட்டு இட்டு இடித்துப் பொருதிடு – மயிலோனே
அழகு மிக்கச் சித்ர பச்சைப் புரவியில்
உலவு மெய் ப்ரத்யக்ஷ நல் சற் குருபர
அருணையில் சித்தித்து எனக்குத் தெளிவு அருள் – பெருமாளே.
English
kamala mottaik katta zhiththuk kumizhiyai
nilaiku laiththup poRku daththaith thamaniya
kalasa varkkath thaiththa karththuk kulaiyaRa – iLaneeraik
kaRuvi vattaip pitRu raththip poruthapa
sayamvi Laiththuc cheppa diththuk kulaviya
karima ruppaip pukko diththuth thiRalmatha – napishEkam
amalar netRik katta zhaRkut podiseythu
athika chakrap putpa Rakkak kodumaiyi
nadalpa daiththac chappa duththic chapathamo – diruthALam
aRaithal kaRpith thuppo ruppaip paraviya
siRaka Ruppith thukka thirththup pudaipadu
mapina vacchith raththa naththuth thirudika – LuRavAmO
thamara mikkuth thikka thirkkap palapaRai
thokutho kukkuth thoththo kukkuth thokuthoku
thariki daththath thaththa rikkath tharikida – enavOthic
chavadu Rappak kappa zhoththip pukaiyezha
vizhika Lutchek kacchi vaththuk kuRaLikaL
thasaikaL patchith thukka Liththuk kazhuthodu – kazhukAda
amalai yutRuk kokka riththup padukaLa
asura raththath thiRku Liththuth thimiyena
adina diththit titti diththup poruthidu – mayilOnE
azhaku mikkac chithra pacchaip puraviyi
nulavu meyprath yaksha naRchaR gurupara
aruNai yiRchith thiththe nakkuth theLivaruL – perumALE.
English Easy Version
kamala mottaik kattu azhiththuk kumizhiyai
nilai kulaiththup pon kudaththaith thamaniya
kalasa varkkaththaith thakarththu kulai aRa – iLaneeraik
kaRuvi vattaip pin thuraththip poruthu
apasayam viLaiththuc cheppu adiththuk kulaviya
kari maruppaip pukku odiththu thiRal mathan – apishEkam
amalar netRik kaN thazhaRkuL podi seythu
athika chakrap puL paRakkak kodumaiyil
adal padaiththu acchappaduththi sapathamodu – iru thALam
aRaithal kaRpiththup poruppaip paraviya
siRaku aRuppiththuk kathirththup pudaipadum
apinava chithrath thanaththuth thirudikaL – uRavu AmO
thamaram mikkuth thikku athirkkap pala paRai
thokuthokuk kuththoth thokukkuth thokuthoku
tharikidath thaththath tharikkath tharikida – ena Othi
chavadu uRap pakkap pazhu oththip pukai ezha
vizhikaL uL chekkac chivaththuk kuRaLikaL
thasaikaL patchiththuk kaLiththuk kazhuthodu – kazhuku Ada
amalai utRuk kokkariththup padukaLa
asura raththaththil kuLiththuth thimi ena
adi nadiththittu ittu idiththup poruthidu – mayilOnE
azhaku mikkac chithra pacchaip puraviyil
ulavu mey prathyaksha nal chaR gurupara
aruNaiyil siththiththu enakkuth theLivu aruL – perumALE.