திருப்புகழ் 415 குரவ நறும் அளக (திருவருணை)

Thiruppugal 415 Kuravanarumalaga

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனதனன தானத் தாத்தன
தனதனன தனதனன தானத் தாத்தன
தனதனன தனதனன தானத் தாத்தன – தனதான

குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ
குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ
குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ – குழையாத

குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ
குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ
குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ – கொடியேன்யான்


பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய
புலையனிவ னெனவுலக மேசப் போக்கென
பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் – பெருகாதே


புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ
பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாவென
புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட – நினையாதோ

அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு
மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ
அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய – அறிவோனே

அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர்
தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ
அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய – இளையோனே

சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட
துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம
சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட – முனிவோனே

துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில்
துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை
சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனதனன தானத் தாத்தன
தனதனன தனதனன தானத் தாத்தன
தனதனன தனதனன தானத் தாத்தன – தனதான

குரவ நறும் அளக குழல் கோதிக் காட்டியெ
குலவும் இரு கயல்கள் விழி மோதித் தாக்கியெ
குமுத மலர் ஒளி பவள வாயைக் காட்டியெ – குழையாத

குணம் உறுக இனிது பயில் கூறிக் காட்டியெ
குலைய இரு கலை நெகிழ வீசிக் காட்டியெ
குடவியிடும் அரிவையர்கள் ஆசைப் பாட்டிலெ – கொடியேன்
யான்

பொருள் இளமை கலை மனமும் ஏகப் போக்கிய
புலையன் இவன் என உலகம் ஏச போக்கு என
பொறி வழியில் அறிவு அழிய பூதச் சேட்டைகள் – பெருகாதே

புது மலர்கள் மருவும் இரு பாதத்து ஆற்றியெ
பொது வகையில் அருணை நிலை நீள் கர்த்தா என
புகழ் அடிமை தனை உனது பார்வைக் காத்திட – நினையாதோ

அரவம் உடன் அறுகு மதி ஆர் மத்த அக்கமும்
மணியும் ஒரு சடை மவுலி நாதர்க்கு ஏற்கவெ
அறிவரிய ஒரு பொருளை போதத்து ஏற்றிய – அறிவோனே

அழகு செறி குழலியர்கள் வானத் தாட்டியர்
தரும் அமுது சரவணையில் வாவித் தேக்கியெ
அறு சிறுவர் ஒரு உடலமாகித் தோற்றிய – இளையோனே

சுரர் உலவ அசுரர்கள் மாள தூள் பட
துயவும் உடல் அயிலை விடும் மா உக்ரா க்ரம
சுவறி எழு கடலும் முறையாகக் கூப்பிட – முனிவோனே

துடி முழவு மறவர் இட சேவல் காட்டினில்
துணை மலரின் அணுகி தினை காவல் காத்த (அன்) னை
சுரிய குழல் குற மகளை வேளைக் காத்து அணை – பெருமாளே.

English

kuravanaRu maLakakuzhal kOthik kAttiye
kulavumiru kayalkaLvizhi mOthith thAkkiye
kumuthamala roLipavaLa vAyaik kAttiye – kuzhaiyAtha

kuNamuRuka inithupayil kURik kAttiye
kulaiyairu kalainekizha veesik kAttiye
kudaviyidu marivaiyarka LAsaip pAttile – kodiyEnyAn

poruLiLamai kalaimanamu mEkap pOkkiya
pulaiyaniva nenavulaka mEsap pOkkena
poRivazhiyi laRivazhiya pUthac chEttaikaL – perukAthE

puthumalarkaL maruvumiru pAthath thAtRiye
pothuvakaiyi laruNainilai neeLkarth thAvena
pukazhadimai thanaiyunathu pArvaik kAththida – ninaiyAthO

aravamuda naRukumathi yArmath thAkkamu
maNiyumoru sadaimavuli nAthark kERkave
aRivariya voruporuLai pOthath thEtRiya – aRivOnE

azhakuseRi kuzhaliyarkaL vAnath thAttiyar
tharumamathu saravaNaiyil vAvith thEkkiye
aRusiRuva roruvudala mAkith thOtRiya – iLaiyOnE

surarulava asurarkaL mALath thUtpada
thuyavumuda layilaividu mAvuk rAkrama
suvaRiyezhu kadalumuRai yAkak kUppida – munivOnE

thudimuzhavu maRavarida sEvaR kAttinil
thuNaimalari naNukithinai kAvaR kAththanai
suriyakuzhal kuRamakaLai vELaik kAththaNai – perumALE.

English Easy Version

kurava naRum aLaka kuzhal kOthik kAttiye
kulavum iru kayalkaL vizhi mOthith thAkkiye
kumutha malar oLi pavaLa vAyaik kAttiye – kuzhaiyAtha

kuNam uRuka inithu payil kURik kAttiye
kulaiya iru kalai nekizha veesik kAttiye
kudaviyidum arivaiyarkaL Asaip pAttile – kodiyEn yAn

poruL iLamai kalai manamum Ekap pOkkiya
pulaiyan ivan ena ulakam Esa pOkku ena
poRi vazhiyil aRivu azhiya pUthac chEttaikaL – perukAthE

poruLiLamai kalaimanamu mEkap pOkkiya
pothu vakaiyil aruNai nilai neeL karththA ena
pukazh adimai thanai unathu pArvaik kAththida – ninaiyAthO

aravam udan aRuku mathi Ar maththa akkamum
maNiyum oru sadai mavuli nAtharkku ERkave
aRivariya oru poruLai pOthaththu EtRiya – aRivOnE

azhaku seRi kuzhaliyarkaL vAnath thAttiyar
tharum amuthu saravaNaiyil vAvith thEkkiye
aRu siRuvar oru udalamAkith thOtRiya – iLaiyOnE

surar ulava asurarkaL mALa thUL pada
thuyavum udal ayilai vidum mA ukrA krama
suvaRi ezhu kadalum muRaiyAkak kUppida – munivOnE

thudi muzhavu maRavar ida sEval kAttinil
thuNai malarin aNuki thinai kAval kAththa (an)nai
suriya kuzhal kuRa makaLai vELaik kAththu aNai – perumALE.