திருப்புகழ் 417 கேதகையபூ முடித்த (திருவருணை)

Thiruppugal 417 Kedhagaiyapumudiththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தானதத்த தானதன தானதத்த
தானதன தானதத்த – தனதான

கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
கேவலம தானஅற்ப – நினைவாலே

கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
கேடுறுக வேநினைக்கும் – வினையாலே

வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
மேதினியெ லாமுழற்று – மடியேனை

வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
வீறுமயில் மீதிலுற்று – வருவாயே

நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள் – குடியேற

நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
நீலநிற மால்தனக்கு – மருகோனே

சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபைவட கோபுரத்தி – லுறைவோனே

சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
தோளின்மிசை வாளெடுத்த – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தானதத்த தானதன தானதத்த
தானதன தானதத்த – தனதான

கேதகைய பூ முடித்த மாதர் தம் மய(யா)லில் உற்று
கேவலம் அதான அற்ப – நினைவாலே

கேள்வி அது இலாதிருக்கு(ம்) ஊழ் வினையினால் மிகுத்த
கேடு உறுகவே நினைக்கும் – வினையாலே

வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில்
மேதினி எ(ல்)லாம் உழற்றும் – அடியேனை

வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து
வீறு மயில் மீதில் உற்று – வருவாயே

நீதி நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து
நீடு புகழ் தேவர் இல்கள் – குடி ஏற

நீடு அருளினால் விடுத்த பால குமரா செழித்த
நீல நிற மால் தனக்கு – மருகோனே

சோதி அனலா(ய்) உதித்த சோணகிரி மா மலைக்குள்
சோபை வட கோபுரத்தில் – உறைவோனே

சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி
தோளின் மிசை வாள் எடுத்த – பெருமாளே.

English

kEthakaiya pUmudiththa mAtharthama yAlilutRu
kEvalama thAnARpa – ninaivAlE

kELviyathi lAthirukku mUzhvinaiyi nAlmikuththa
kEduRuka vEninaikkum – vinaiyAlE

vEthanaiyi lEmikuththa pAthakanu mAyavaththil
mEthiniye lAmuzhatRu – madiyEnai

veeduthavi yALavetRi vElkarama thEyeduththu
veeRumayil meethilutRu – varuvAyE

neethineRi yEyazhiththa thArukanai vEraRuththu
needupukazh thEvariRkaL – kudiyERa

needaruLi nAlviduththa bAlakuma rAsezhiththa
neelaniRa mAlthanakku – marukOnE

sOthiyana lAvuthiththa sONakiri mAmalaikkuL
sOpaivada kOpuraththi – luRaivOnE

sOnaimazhai pOlethirththa thAnavarkaL mALavetRi
thOLinmisai vALeduththa – perumALE.

English Easy Version

kEthakaiya pU mudiththa mAthar tham maya(a)lil utRu
kEvalam athAna aRpa – ninaivAlE

kELvi athu ilAthirukku(m) Uzh vinaiyinAl mikuththa
kEdu uRukavE ninaikkum – vinaiyAlE

vEthanaiyilE mikuththa pAthakanumAy avaththil
mEthini e(l)lAm uzhatRum – adiyEnai

veedu uthavi ALa vetRi vEl karam athE eduththu
veeRu mayil meethil utRu – varuvAyE

neethi neRiyE azhiththa thArukanai vEr aRuththu
needu pukazh thEvar ilkaL – kudi ERa

needu aruLinAl viduththa bAla kumarA sezhiththa
neela niRa mAl thanakku – marukOnE

sOthi analA(y) uthiththa sONakiri mA malaikkuL
sOpai vada kOpuraththil – uRaivOnE

sOnai mazhai pOl ethirththa thAnavarkaL mALa vetRi
thOLin misai vAL eduththa – perumALE.