Thiruppugal 419 Koduseri
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
தானதன தத்த தத்த – தனதான
கோடுசெறி மத்த கத்தை வீசுபலை தத்த வொத்தி
கூறுசெய்த ழித்து ரித்து – நடைமாணார்
கோளுலவு முப்பு ரத்தை வாளெரிகொ ளுத்தி விட்ட
கோபநுத லத்த ரத்தர் – குருநாதா
நீடுகன கத்த லத்தை யூடுருவி மற்ற வெற்பு
நீறெழமி தித்த நித்த – மனதாலே
நீபமலர் பத்தி மெத்த வோதுமவர் சித்த மெத்த
நீலமயில் தத்த விட்டு – வரவேணும்
ஆடலணி பொற்சி லைக்கை வேடுவர்பு னக்கு றத்தி
ஆரமது மெத்து சித்ர – முலைமீதே
ஆதரவு பற்றி மெத்த மாமணிநி றைத்த வெற்றி
ஆறிருதி ருப்பு யத்தில் – அணைவீரா
தேடிமையொர் புத்தி மெத்தி நீடுறநி னைத்த பத்தி
சீருறவு ளத்தெ ரித்த – சிவவேளே
தேறருணை யிற்ற ரித்த சேண்முகடி டத்த டர்த்த
தேவர்சிறை வெட்டி விட்ட – பெருமாளே.
பதம் பிரித்தது
தானதன தத்த தத்த தானதன தத்த தத்த
தானதன தத்த தத்த – தனதான
கோடு செறி மத்தகத்தை வீசு ப(ல்)லை தத்த ஒத்தி
கூறு செய்து அழித்து உரித்து – நடை மாணார்
கோள் உலவும் முப்புரத்தை வாள் எரி கொளுத்தி விட்ட
கோப நுதல் அத் தரத்தர் – குரு நாதா
நீடு கனகத் தலத்தை ஊடுருவி மற்ற வெற்பு
நீறு எழ மிதித்த நித்த – மனதாலே
நீப மலர் பத்தி மெத்த ஓதும் அவர் சித்த மெத்த
நீல மயில் தத்த விட்டு – வர வேணும்
ஆடல் அணி பொன் சிலைக் கை வேடுவர் புனக் குறத்தி
ஆரம் அது மெத்து சித்ர – முலை மீதே
ஆதரவு பற்றி மெத்த மா மணி நிறைத்த வெற்றி
ஆறிரு திருப் புயத்தில் – அணை வீரா
தேடி இமையொர் புத்தி மெத்தி நீடு உற நினைத்த பத்தி
சீர் உற உளத்(து) தெரித்த – சிவ வேளே
தேறருணையில் தரித்த சேண் முகடு இடத்து அடர்த்த
தேவர் சிறை வெட்டி விட்ட – பெருமாளே.
English
kOduseRi maththa kaththai veesupalai thaththa voththi
kURuseytha zhiththu riththu – nadaimANAr
kOLulavu muppu raththai vALeriko Luththi vitta
kOpanutha laththa raththar – gurunAthA
needukana kaththa laththai yUduruvi matRa veRpu
neeRezhami thiththa niththa – manathAlE
neepamalar paththi meththa vOthumavar siththa meththa
neelamayil thaththa vittu – varavENum
AdalaNi poRsi laikkai vEduvarpu nakku Raththi
Aramathu meththu sithra – mulaimeethE
Atharavu patRi meththa mAmaNini Raiththa vetRi
ARiruthi ruppu yaththil – aNaiveerA
thEdimaiyor puththi meththi needuRani naiththa paththi
seeruRavu Laththe riththa – sivavELE
thERaruNai yitRa riththa sENmukadi daththa darththa
thEvarsiRai vetti vitta – perumALE.
English Easy Version
kOdu seRi maththakaththai veesu pa(l)lai thaththa oththi
kURu seythu azhiththu uriththu – nadai mANAr
kOL ulavum muppuraththai vAL eri koLuththi vitta
kOpa nuthal ath tharaththar – kuru nAthA
needu kanakath thalaththai Uduruvi matRa veRpu
neeRu ezha mithiththa niththa – manathAlE
neepa malar paththi meththa Othum avar siththa meththa
neela mayil thaththa vittu – vara vENum
Adal aNi pon silaik kai vEduvar punak kuRaththi
Aram athu meththu sithra – mulai meethE
Atharavu patRi meththa mA maNi niRaiththa vetRi
ARiru thirup puyaththil – aNai veerA
thEdi imaiyor puththi meththi needu uRa ninaiththa paththi
seer uRa uLath(thu) theriththa – siva vELE
thERaruNaiyil thariththa sEN mukadu idaththu adarththa
thEvar siRai vetti vitta – perumALE.