திருப்புகழ் 420 சிலைநுதல் வைத்து (திருவருணை)

Thiruppugal 420 Silainudhalvaiththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன – தனதான

சிலைநுதல் வைத்துச் சிறந்த குங்கும
தலதமு மிட்டுக் குளிர்ந்த பங்கய
திருமுக வட்டத் தமர்ந்த மென்குமிழ் – தனிலேறிச்

செழுமணி ரத்நத் திலங்கு பைங்குழை
தனைமுனி வுற்றுச் சிவந்து நஞ்சணி
செயலினை யொத்துத் தயங்கு வஞ்சக – விழிசீறிப்

புலவிமி குத்திட் டிருந்த வஞ்சியர்
பதமல ருக்குட் பணிந்த ணிந்தணி
புரிவளை கைக்குட் கலின்க லென்றிட – அநுராகம்

புகழ்நல மெத்தப் புரிந்து கொங்கையி
லுருகிய ணைத்துப் பெரும்ப்ரி யங்கொடு
புணரினும் நிற்பொற் பதங்கள் நெஞ்சினுள் – மறவேனே

கலைமதி வைத்துப் புனைந்து செஞ்சடை
மலைமகள் பக்கத் தமர்ந்தி ருந்திட
கணகண கட்கட் கணின்க ணென்றிட – நடமாடுங்

கருணைய னுற்றத் த்ரியம்ப கன்தரு
முருகபு னத்திற் றிரிந்த மென்கொடி
கனதன வெற்பிற் கலந்த ணைந்தருள் – புயவீரா

அலைகடல் புக்குப் பொரும்பெ ரும்படை
யவுணரை வெட்டிக் களைந்து வென்றுயர்
அமரர்தொ ழப்பொற் சதங்கை கொஞ்சிட – வருவோனே

அடியவ ரச்சத் தழுங்கி டுந்துயர்
தனையொழி வித்துப் ப்ரியங்கள் தந்திடும்
அருணகி ரிக்குட் சிறந்த மர்ந்தருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன – தனதான

சிலை நுதல் வைத்துச் சிறந்த குங்கும
திலதமும் இட்டுக் குளிர்ந்த பங்கய
திருமுக வட்டத்து அமர்ந்த மென் குமிழ் – தனில் ஏறி

செழு மணி ரத்நத்து இலங்கு பைங்குழை
தனை முனிவுற்றுச் சிவந்து நஞ்சு அணி
செயலினை ஒத்துத் தயங்கு வஞ்சக – விழி சீறி

புலவி மிகுத்திட்டு இருந்த வஞ்சியர்
பத மலருக்குள் பணிந்து அணிந்த அணி
புரி வளை கைக்குள் கலின் கல் என்றிட – அநுராகம்

புகழ் நல(ம்) மெத்தப் புரிந்து கொங்கையில்
உருகி அணைத்துப் பெரும் ப்ரியம் கொ(ண்)டு
புணரினும் நின் பொன் பதங்கள் நெஞ்சினுள் – மறவேனே

கலை மதி வைத்துப் புனைந்து செம் சடை
மலை மகள் பக்கத்து அமர்ந்து இருந்திட
கணகண கட்கட் கணின்கண் என்றிட – நடம் ஆடும்

கருணையன் உற்றத் த்ரியம்பகன் தரு
முருக புனத்தில் திரிந்த மென் கொடி
கன தன வெற்பில் கலந்து அணைந்து அருள் – புய வீரா

அலை கடல் புக்குப் பொரும் பெரும் படை
அவுணரை வெட்டிக் களைந்து வென்று உயர்
அமரர் தொழப் பொன் சதங்கை கொஞ்சிட – வருவோனே

அடியவர் அச்சத்து அழுங்கிடும் துயர்
தனை ஒழிவித்துப் ப்ரியங்கள் தந்திடும்
அருண கிரிக்குள் சிறந்து அமர்ந்து அருள் – பெருமாளே.

English

chilainuthal vaiththuc chiRantha kunguma
thalathamu mittuk kuLirntha pangaya
thirumuka vattath thamarntha menkumizh – thanilERi

sezhumaNi rathnath thilangu painguzhai
thanaimuni vutRuc chivanthu nanjaNi
seyalinai yoththuth thayangu vanjaka – vizhiseeRip

pulavimi kuththit tiruntha vanjiyar
pathamala rukkut paNintha NinthaNi
purivaLai kaikkut kalinka lenRida – anurAkam

pukazhnala meththap purinthu kongaiyi
lurukiya Naiththup perumpri yangodu
puNarinum niRpoR pathangaL nenjinuL – maRavEnE

kalaimathi vaiththup punainthu senjadai
malaimakaL pakkath thamarnthi runthida
kaNakaNa katkat kaNinka NenRida – nadamAdum

karuNaiya nutRath thriyampa kantharu
murukapu naththit Ririntha menkodi
kanathana veRpiR kalantha NaintharuL – puyaveerA

alaikadal pukkup porumpe rumpadai
yavuNarai vettik kaLainthu venRuyar
amarartho zhappoR chathangai konjida – varuvOnE

adiyava racchath thazhungi dunthuyar
thanaiyozhi viththup priyangaL thanthidum
aruNaki rikkut siRantha marntharuL – perumALE.

English Easy Version

chilai nuthal vaiththuc chiRantha kunguma
thilathamum ittuk kuLirntha pangaya
thirumuka vattaththu amarntha men kumizh – thanil ERi

sezhu maNi rathnaththu ilangu painguzhai
thanai munivutRuc chivanthu nanju aNi
seyalinai oththuth thayangu vanjaka – vizhi seeRi

pulavi mikuththittu iruntha vanjiyar
patha malarukkuL paNinthu aNintha aNi
puri vaLai kaikkuL kalin kal enRida – anurAkam

pukazh nala(m) meththap purinthu kongaiyil
uruki aNaiththup perum priyam ko(N)du
puNarinum nin pon pathangaL nenjinuL – maRavEnE

kalai mathi vaiththup punainthu sem chadai
malai makaL pakkaththu amarnthu irunthida
kaNakaNa katkat kaNinkaN enRida – nadam Adum

karuNaiyan utRath thriyampakan tharu
Muruka punaththil thirintha men kodi
kana thana veRpil kalanthu aNainthu aruL – puya veerA

alai kadal pukkup porum perum padai
avuNarai vettik kaLainthu venRu uyar
amarar thozhap pon sathangai konjida – varuvOnE

adiyavar acchaththu azhungidum thuyar
thanai ozhiviththup priyangaL thanthidum
aruNa kirikkuL siRanthu amarnthu aruL – perumALE.