Thiruppugal 424 Senjorpan
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்தத் தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன தானன – தனதான
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை
கும்பத் தந்திக் குவடென வாலிய
தெந்தப் பந்தித் தரளம தாமென – விடராவி
சிந்திக் கந்தித் திடுகளை யாமுன
தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ
திண்டுப் புந்தித் திடுகனி தானுமு – னிதழாமோ
மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை
கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள
வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென – முறையேய
வந்தித் திந்தப் படிமட வாரொடு
கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு
மந்தப் புந்திக் கசடனெ நாளுன – தடிசேர்வேன்
நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு
திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர்
நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை – யுகிராலே
நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர
நந்திக் கம்பத் தெழுநர கேசரி
நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென – மிகநாடி
வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர்
பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி
விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் – புனமீதே
வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி
துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி
வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்தத் தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன தானன
தந்தத் தந்தத் தனதன தானன – தனதான
செம் சொல் பண்(பு) பெற்றிடு குட மா முலை
கும்பத் தந்திக் குவடு என வாலிய
தெந்தப் பந்தித் தரளம் அதாம் என – இடர் ஆவி
சிந்திக் கந்தித்து இடு களையாம் உனது
அங்கத்து அம் பொற்பு எது என ஓதுவ(து)
திண் துப்பும் தித்திடு கனி தானும் உன் – இதழாமோ
மஞ்சு ஒக்கும் கொத்து அளகம் எனா மிடை
கஞ்சத்து இன்புற்று இரு திருவே இள
வஞ்சிக் கொம்பு ஒப்பு எனு(ம்) மயிலே என – முறை ஏய
வந்தித்து இந்தப் படி மடவாரொடு
கொஞ்சிக் கெஞ்சித் தினம் அவர் தாள் தொழு
மந்தப் புந்திக் கசடன் எ(ந்)நாள் உனது – அடி சேர்வேன்
நஞ்சைக் கண்டத்து இடுபவர் ஆரொடு
திங்கள் பிஞ்சு அக்கு அரவு அணி வேணியர்
நம்பர் செம் பொன் பெயர் அசுரேசனை – உகிராலே
நந்தக் கொந்திச் சொரி குடல் சோர் வர
கம்பத்து நந்தி எழு நர கேசரி
நஞ்சக் குண்டைக்கு ஒரு வழி ஏது என – மிக நாடி
வெஞ்சச் சிம்புள் சொருபம் அது ஆனவர்
பங்கில் பெண் கற்புடைய பெண் நாயகி
விந்தைச் செம் கைப் பொலி சுத வேடுவர் – புன(ம்) மீதே
வெண்டித் தங்கித் திரி கிழவா அதி
துங்கத் துங்கக் கிரி அருணாபுரி
வெம் கண் சிங்கத்து அடி மயில் ஏறிய – பெருமாளே.
English
chenchoR paNpet Ridukuda mAmulai
kumpath thanthik kuvadena vAliya
thenthap panthith tharaLama thAmena – vidarAvi
sinthik kanthith thidukaLai yAmuna
thangath thampoR pethuvena vOthuva
thiNdup punthith thidukani thAnumu – nithazhAmO
manjok kungoth thaLakame nAmidai
kanjath thinput Riduthiru vEyiLa
vanjik kompop penumayi lEyena – muRaiyEya
vanthith thinthap padimada vArodu
konjik kenjith thinamavar thAdozhu
manthap punthik kasadane nALuna – thadisErvEn
nanjaik kaNdath thidupava rArodu
thingat pinjak karavaNi vENiyar
namparc chempoR peyarasu rEsanai – yukirAlE
nanthak konthic chorikudal sOrvara
nanthik kampath thezhunara kEsari
nanjak kuNdaik koruvazhi yEthena – mikanAdi
venjac chimput sorupama thAnavar
pangiR peNkaR pudaiyape NAyaki
vinthaic chengaip polisutha vEduvar – punameethE
veNdith thangith thirikizha vAvathi
thungath thungak kiriyaru NApuri
venkat singath thadimayi lERiya – perumALE.
English Easy Version
chem chol paN(pu) petRidu kuda mA mulai
kumpath thanthik kuvadu ena vAliya
thenthap panthith tharaLam athAm ena – idar Avi
sinthik kanthiththu idu kaLaiyAm unathu
angaththu am poRpu ethu ena Othuva(thu)
thiN thuppum thiththidu kani thAnum un – ithazhAmO
manju okkum koththu aLakam enA midai
kanjaththu inputRu iru thiruvE iLa
vanjik kompu oppu enu(m) mayilE ena – muRai Eya
vanthiththu inthap padi madavArodu
konjik kenjith thinam avar thAL thozhu
manthap punthik kasadan e(n)nAL unathu – adi sErvEn
nanjaik kaNdaththu idupavar Arodu
thingaL pinju akku aravu aNi vENiyar
Nampar chem pon peyar asurEsanai – ukirAlE
nanthak konthic chori kudal sOr vara
kampaththu nanthi ezhu nara kEsari
nanjak kuNdaikku oru vazhi Ethu ena – mika nAdi
venjac chimpuL sorupam athu Anavar
pangil peN kaRpudaiya peN nAyaki
vinthaic chem kaip poli sutha vEduvar – puna(m) meethE
veNdith thangith thiri kizhavA athi
thungath thungak kiri aruNApuri
vem kaN singaththu adi mayil ERiya – perumALE.