திருப்புகழ் 426 தமரம் குரங்களும் (திருவருணை)

Thiruppugal 426 Thamaramkurangkalum

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
– தனதனத் தனதான

தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
– முளகதக் கடமாமேல்

தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து
தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க
– மரணபக் குவமாநாள்

கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு
நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு
கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க
– தமுமடற் சுடர்வேலுங்

கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த
மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை
கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து
– வரமெனக் கருள்கூர்வாய்

இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை
யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு
– மியல்நிமிர்த் திடுவோனே

இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க
முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற
ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த
– அயிலுடைக் கதிர்வேலா

அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு
கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற
அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த
– அடியவர்க் கெளியோனே

அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை
தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ
லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த
– அறுமுகப் பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
தனன தனந்தனந் தான தத்த தந்த
– தனதனத் தனதான

தமரம் குரங்களும் கார் இருள் பிழம்பு
மெழுகிய அங்கமும் பார்வையில் கொளுந்து
தழல் உமிழ் கண்களும் காளம் ஒத்த கொம்பும் – உ(ள்)ள கதம் கடமா மேல்

தனி வரும் அந்தகன் பாசம் விட்டு எறிந்து
அட வரும் என்று சிந்தாகுலத்து இருந்து
தமர் அழ மைந்தரும் சோகம் உற்று இரங்க – மரண பக்குவம்
ஆ நாள்

கமல முகங்களும் கோமளத்து இலங்கு
நகையு(ம்) நெடும் க(ண்)ணும் காதினில் துலங்கு
கனககுதம்பையும் தோடும் வஜ்ர – அங்கதமும் அடர் சுடர் வேலும்

கடிது உலகு எங்கணும் தாடி இட்டுவந்த
மயிலும் இலங்கு அலங்கார பொன் சதங்கை
கழல் ஒலி தண்டையம் காலும் ஒக்க வந்து – வரம் எனக்கு அருள் கூர்வாய்

இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி
அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை
இள முலையின் செழும் பால் குடித்து இலங்கும் – இயல்
நிமிர்த்திடுவோனே

இறைவர் இறைஞ்ச நின்று ஆகம ப்ரசங்கம்
உரை செய்திடும் ப்ரசண்டா விசித்து நின்ற
ரண முக துங்க வெம் சூர் உடல் பிளந்த – அயில் உடை கதிர்வேலா

அமணர் அடங்கலும் கூடலில் திரண்டு
கழுவில் உதைந்து உதைந்து ஏற விட்டு நின்ற
அபிநவ துங்க கங்கா நதிக்கு மைந்த – அடியவர்க்கு எளியோனே

அமரர் வணங்கு(ம்) கந்தா குறத்தி கொங்கை
தனில் முழுகும் கடம்பா மிகுத்த செம் சொல்
அருணை நெடும் தடம் கோபுரத்து அமர்ந்த அறுமுகப் – பெருமாளே.

English

thamara kurangaLum kAriruL pizhambu
mezhugiya angamum pArvaiyil koLundhu
thazhal umizh kaNgaLum kALa moththa kombum uLagatha – kadamAmEl

thani varum anthakan pAsam vitteRindhu
adavarum endru chinthA kulaththil irundhu
thamarazha maindharum sOgam utriranga maraNa – pakkuvamAnAL

kamala mugangaLum kOmaLath thilangu
nagaiyum nedunkaNum kAdhinil thulangu
kanaka kudhambaiyum thOdum vajra angadhamum adaR – sudaR vElum

kadidhulag engaNum thAdiyittu vandha
mayilum ilang alankAra poR sadhangai
kazhaloLi thaNdaiyam kAlum okka vandhu varam ennakku – aruL kUrvAy

imagiri vandha pon pAvai pachchai vanji
akila thalam peRum pUvai saththi ambai
iLamulaiyin sezhum pAl kudith thilangum iyal – nimirththiduvOnE

iRaivar iRainja nindr Agama prasanga
murai seydhidum prachaNd Avi siththu nindra
raNamuka thunga venchUr udal piLandha ayiludai
– kadhir vElA

amaNar adangalum kUdalitr RiraNdu
kazhuvil udhaindh udhaindhu Era vittu nindra
abinava thunga gangA nadhikku maindha adiyavark
– keLiyOnE

amarar vaNangu kandhA kuRaththi kongai
thanil muzhugum kadambA miguththa senchol
aruNai nedun thadam gOpurath thamarndha aRumugap
– perumALE.

English Easy Version

thamara kurangaLum kAriruL pizhambu
mezhugiya angamum pArvaiyil koLundhu
thazhal umizh kaNgaLum: kALa moththa kombum uLagatha – kadamAmEl

thani varum anthakan pAsam vitteRindhu
Adavarum endru chinthA kulaththil irundhu
thamarazha maindharum sOgam utriranga – maraNa pakkuvamAnAL

kamala mugangaLum kOmaLath thilangu
nagaiyum nedunkaNum kAdhinil thulangu
kanaka kudhambaiyum thOdum vajra angadhamum – adaR sudaR vElum

kadidhulag engaNum thAdiyittu vandha
Mayilum ilang alankAra poR sadhangai
kazhaloLi thaNdaiyam kAlum okka vandhu – varam ennakku aruL kUrvAy

imagiri vandha pon pAvai pachchai vanji
akila thalam peRum pUvai saththi ambai
iLamulaiyin sezhum pAl kuddith ilangum – iyal nimirththiduvOnE

iRaivar iRainja nindr Agama prasangam
urai seydhidum prachaNdA visiththu nindra
raNamuka thunga venchUr udal piLandha – ayiludai kadhir vElA

amaNar adangalum kUdalitr RiraNdu
kazhuvil udhaindh udhaindhu Era vittu nindra
abinava thunga gangA nadhikku maindha – adiyavark keLiyOnE

amarar vaNangu kandhA kuRaththi kongai
thanil muzhugum kadambA miguththa senchol
aruNai nedun thadam gOpurath thamarndha aRumugap – perumALE.