திருப்புகழ் 430 தேதென வாச முற்ற (திருவருணை)

Thiruppugal 430 Thedhenavasamutra

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானன தான தத்த தானன தான தத்த
தானன தான தத்த – தனதான

தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
தேனளி சூழ மொய்த்த – மலராலே

சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
சீதநி லாவெ றிக்கு – மனலாலே

போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
போர்மத ராஜ னுக்கு – மழியாதே

போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த
பூவையை நீய ணைக்க – வரவேணும்

மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
மாயனு மாத ரிக்கு – மயில்வீரா

வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்
வாரண மான தத்தை – மணவாளா

மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
வீதியின் மேவி நிற்கு – முருகோனே

மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
வேலடை யாள மிட்ட – பெருமாளே.

பதம் பிரித்தது

தானன தான தத்த தானன தான தத்த
தானன தான தத்த – தனதான

தேது என வாசம் உற்ற கீத விநோத(ம்) மெச்சு
தேன் அளி சூழ மொய்த்த – மலராலே

சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட
சீத நிலா எறிக்கும் – அனலாலே

போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட
போர் மத ராஜனுக்கும் – அழியாதே

போகம் எ(ல்)லா நிறைத்து மோக விடாய் மிகுத்த
பூவையை நீ அணைக்க – வர வேணும்

மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை
மாயனும் ஆதரிக்கும் – அயில் வீரா

வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள்
வாரணமான தத்தை – மணவாளா

மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து
வீதியின் மேவி நிற்கு(ம்) – முருகோனே

மேருவை நீறு எழுப்பி நான் முகனார் பதத்தில்
வேல் அடையாளம் இட்ட – பெருமாளே.

English

thEthena vAsa mutRa keethavi nOtha mecchu
thEnaLi cUzha moyththa – malarAlE

seeRuma rAve yitRi lURiya kALam vitta
seethani lAve Rikku – manalAlE

pOthanai neethi yatRa vEthanai vALi thotta
pOrmatha rAja nukku – mazhiyAthE

pOkame lAni Raiththu mOkavi dAymi kuththa
pUvaiyai neeya Naikka – varavENum

mAthinai vENi vaiththa nAthanu mOthu pacchai
mAyanu mAtha rikku – mayilveerA

vAnavar sEnai mutRum vAzhama rApa thikkuL
vAraNa mAna thaththai – maNavALA

mEthini yOrtha zhaikka vEyaru NAsa laththu
veethiyin mEvi niRku – murukOnE

mEruvai neeRe zhuppi nAnmuka nArpa thaththil
vEladai yALa mitta – perumALE.

English Easy Version

thEthu ena vAsam utRa keetha vinOtha(m) mecchu
thEn aLi cUzha moyththa – malarAlE

seeRum arA eyitRil URiya kALam vitta
seetha nilA eRikkum – analAlE

pOthanai neethi atRa vEthanai vALi thotta
pOr matha rAjanukkum – azhiyAthE

pOkam e(l)lA niRaiththu mOka vidAy mikuththa
pUvaiyai nee aNaikka – vara vENum

mAthinai vENi vaiththa nAthanum Othu pacchai
mAyanum Atharikkum – ayil veerA

vAnavar sEnai mutRum vAzh amarApathikkuL
vAraNamAna thaththai – maNavALA

mEthiniyOr thazhaikkavE aruNAsalaththu
veethiyin mEvi niRku(m) – murukOnE

mEruvai neeRu ezhuppi nAn mukanAr pathaththil
vEl adaiyALam itta – perumALE.