Thiruppugal 431 Thodhagapperum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தான தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த – தனதான
தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு
தோகை யர்க்கு நெஞ்ச – மழியாதே
சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று
சூழ்பி ணிக்க ணங்க – ளணுகாதே
பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து
பாசம் விட்டெ றிந்து – பிடியாதே
பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த
பாடல் மிக்க செஞ்சொல் – தரவேணும்
வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப
வீர பத்ர கந்த – முருகோனே
மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து
வேலை யிற்றொ ளைந்த – கதிர்வேலா
கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த
கோம ளக்கு ரும்பை – புணர்வோனே
கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த
கோபு ரத்த மர்ந்த – பெருமாளே.
பதம் பிரித்தது
தான தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த – தனதான
தோதகப் பெரும் பயோதரத்து இயங்கும்
தோகையர்க்கு நெஞ்சம் – அழியாதே
சூலை வெப்பு அடர்ந்த வாதம் பித்தம் என்று
சூழ் பிணி கணங்கள் – அணுகாதே
பாதகச் சமன் தன் மேதியில் புகுந்து
பாசம் விட்டு எறிந்து – பிடியாதே
பாவலற்கு இரங்கி நாவலர்க்கு இசைந்த
பாடல் மிக்க செம் சொல் – தர வேணும்
வேதம் மிக்க விந்து நாதம் மெய்க் கடம்ப
வீரபத்ர கந்த – முருகோனே
மேருவைப் பிளந்து சூரனைக் கடிந்து
வேலையில் தொளைந்த – கதிர் வேலா
கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த
கோமளக் குரும்பை – புணர்வோனே
கோலம் உற்று இலங்கு சோண வெற்பு உயர்ந்த
கோபுரத்து அமர்ந்த – பெருமாளே.
English
thOtha kappe rumpa yOtha raththi yangu
thOkai yArkku nenja – mazhiyAthE
cUlai veppa darntha vAtha piththa menRu
sUzhpi Nikka Nanga – LaNukAthE
pAtha kaccha manthan mEthi yiRpu kunthu
pAsam vitte Rinthu – pidiyAthE
pAva laRki rangi nAva larkki saintha
pAdal mikka senchol – tharavENum
vEtha mikka vinthu nAtha meykka dampa
veera pathra kantha – murukOnE
mEru vaippi Lanthu cUra naikka dinthu
vElai yitRo Laintha – kathirvElA
kOthai poRku Rinji mAthu kaccha Nintha
kOma Lakku rumpai – puNarvOnE
kOla mutRi langu sONa veRpu yarntha
kOpu raththa marntha – perumALE.
English Easy Version
thOthakap perum payOtharaththu iyangum
thOkaiyarkku nenjam – azhiyAthE
cUlai veppu adarntha vAtham piththam enRu
sUzh piNi kaNangaL – aNukAthE
pAthakac chaman than mEthiyil pukunthu
pAsam vittu eRinthu – pidiyAthE
pAvalaRku irangi nAvalarkku isaintha
pAdal mikka senchol – thara vENum
vEtham mikka vinthu nAtham meyk kadampa
veerapathra kantha – murukOnE
mEruvaip piLanthu cUranaik kadinthu
vElaiyil thoLaintha – kathir vElA
kOthai pon kuRinji mAthu kacchu aNintha
kOmaLak kurumpai – puNarvOnE
kOlam utRu ilangku sONa veRpu uyarntha
kOpuraththu amarntha – perumALE.