திருப்புகழ் 435 புலையனான (திருவருணை)

Thiruppugal 435 Pulaiyanana

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
பொறையி லாத கோபீகன் – முழுமூடன்

புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
பொறிக ளோடி போய்வீழு – மதிசூதன்

நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியி லாத வேமாளி – குலபாதன்

நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
நினையு மாறு நீமேவி – யருள்வாயே

சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
சிதையு மாறு போராடி – யொருசீதை

சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
திறமி யான மாமாயன் – மருகோனே

அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமர தாடி யேதோகை – மயிலேறி

அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
அருணை மீதி லேமேவு – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான – தனதான

புலையனான மாவீனன் வினையிலேகு மாபாதன்
பொறையிலாத கோபீகன் – முழுமூடன்

புகழி லாத தாமீகன் அறிவிலாத காபோதி
பொறிகளோடி போய்வீழும் – அதிசூதன்

நிலையிலாத கோமாளி கொடையி லாத ஊதாரி
நெறியிலாத ஏமாளி – குலபாதன்

நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல்
நினையுமாறு நீமேவி – யருள்வாயே

சிலையில் வாளி தானேவி எதிரி ராவணார்தோள்கள்
சிதையு மாறு போராடி – ஒருசீதை

சிறையிலாமலேகூடி புவனி மீதிலேவீறு
திறமியான மாமாயன் – மருகோனே

அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
அமரது ஆடியே தோகை – மயிலேறி

அதிக தேவரேசூழ உலக மீதிலேகூறும்
அருணை மீதிலேமேவு – பெருமாளே.

English

pulaiyanAna mAveenan vinaiyi lEgu mApAthan
poRaiyilAdha kOpeegan – muzhu mUdan

pugazhilAdha thAmeegan aRivilAdha kAbOdhi
poRigaL Odi pOy veezhum – athi sUdhan

nilai ilAdha kOmALi kodai ilAdha UdhAri
neRi ilAdha vEmALi – kula pAthan

ninadhu thALai nAL thORu manadhil Asai veedAmal
ninaiyu mARu nee mEvi – aruLvAyE

silaiyil vALi thAnEvi edhiri rAvaNAr thOLgaL
chidhaiyu mARu pOrAdi – oru seethai

siRai ilAmalE kUdi buvani meedhilE veeRu
thiRami Ana mAmAyan – marugOnE

alaiya mEru mAsUrar podiya dhAga vElEvi
amara dhAdiyE thOgai – mayilERi

adhika dhEvarE sUzha ulaga meedhilE kURum
aruNai meedhilE mEvu – perumALE.

English Easy Version

pulaiyanAna mAveenan vinaiyi lEgu mApAthan
poRaiyilAdha kOpeegan – muzhu mUdan

pugazhilAdha thAmeegan aRivilAdha kAbOdhi
poRigaL Odi pOy veezhum – athi sUdhan

nilai ilAdha kOmALi kodai ilAdha UdhAri
neRi ilAdha vEmALi – kula pAthan

ninadhu thALai nAL thORu manadhil Asai veedAmal
ninaiyu mARu nee mEvi – aruLvAyE

silaiyil vALi thAnEvi edhiri rAvaNAr thOLgaL
chidhaiyu mARu – pOrAdi oru seethai

siRai ilAmalE kUdi buvani meedhilE veeRu
thiRami Ana mAmAyan – marugOnE

alaiya mEru mAsUrar podiya dhAga vElEvi
amara dhAdiyE thOgai – mayilERi

adhika dhEvarE sUzha ulaga meedhilE kURum
aruNai meedhilE mEvu – perumALE.