திருப்புகழ் 436 போக கற்ப (திருவருணை)

Thiruppugal 436 Pogakarpa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
தானனத் தத்ததனத் – தத்த தனதான

போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப்
பாரியைப் பொற்குவையுச் – சிப்பொ ழுதிலீயும்

போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத்
தோரைமெச் சிப்பிரியப் – பட்டு மிடிபோகத்

த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித்
தாரமுட் பட்டதிருட் – டுக்க விகள்பாடித்

தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட்
சேல்வலைப் பட்டடிமைப் – பட்டு விடலாமோ

ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற்
றாதரிக் கைக்கருணைத் – துப்பு மதில்சூழும்

ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக்
காகவெற் றிக்கலபக் – கற்கி யமர்வோனே

தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித்
தூணிமுட் டச்சுவறத் – திக்கி லெழுபாரச்

சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச்
சூரனைப் பட்டுருவத் – தொட்ட பெருமாளே.

பதம் பிரித்தது

தானனத் தத்ததனத் தானனத் தத்ததனத்
தானனத் தத்ததனத் – தத்த தனதான

போக கற்பக் கடவுள் பூருகத்தைப் புயலைப்
பாரியைப் பொன் குவை உச்சிப் – பொழுதில் ஈயும்

போது உடைப் புத்திரரைப் போல ஒப்பிட்டு உலகத்
தோரை மெச்சிப் பிரியப் – பட்டு மிடி போகத்

த்யாக மெத்தத் தருதற்கு ஆசு நல் சித்திர வித்தாரம்
உள்பட்ட திருட்டுக் – கவிகள் பாடித்

தேடி இட்டப்படு பொன் பாவையர்க்கு இட்டு
அவர்கண் சேல் வலைப் பட்டு அடிமைப்பட்டு – விடலாமோ

ஆகமப் பத்தரும் மற்று ஆரணச் சுத்தரும் உற்று
ஆதரிக்கைக்கு அருணைத் – துப்பு மதில் சூழும்

ஆடகச் சித்ர மணிக் கோபுரத்து உத்தர திக்காக
வெற்றிக் கலபக் கற்கி – அமர்வோனே

தோகையைப் பெற்ற இடப் பாகர் ஒற்றைப் பகழித்
தூணி முட்டச் சுவற – திக்கில் எழு பாரச்

சோதி வெற்பு எட்டும் உதிர்த்(து) தூளிதப் பட்டு அமிழச்
சூரனைப் பட்டு உருவத் தொட்ட – பெருமாளே.

English

bOkakaR pakkadavut pUrukath thaippuyalaip
pAriyaip poRkuvaiyuc – chippo zhuthileeyum

pOthudaip puththiraraip pOlavop pittulakath
thOraimec chippiriyap – pattu midipOkath

thyAkameth thaththaruthaR kAsunaR chiththiravith
thAramut pattathirut – tukka vikaLpAdith

thEdiyit tappadupoR pAvaiyark kittavarkat
chElvalaip pattadimaip – pattu vidalAmO

Akamap paththarumat RAraNac chuththarumut
RAtharik kaikkaruNaith – thuppu mathilcUzhum

Adakac chithramaNik kOpurath thuththarathik
kAkavet Rikkalapak – kaRki yamarvOnE

thOkaiyaip petRaidap pAkarot Raippakazhith
thUNimut tacchuvaRath – thikki lezhupArac

chOthiveR pettumuthirth thULithap pattamizhac
cUranaip patturuvath – thotta perumALE.

English Easy Version

bOka kaRpak kadavuL pUrukaththaip puyalaip
pAriyaip pon kuvai ucchip pozhuthil – eeyum

pOthu udaip puththiraraip pOla oppittu ulakaththOrai
mecchip piriyap pattu – midi pOkath

thyAka meththath tharuthaRku Asu nal siththira
viththAram uLpatta thiruttuk – kavikaL pAdith

thEdi ittappadu pon pAvaiyarkku ittu avarkaN
sEl valaip pattu adimaippattu – vidalAmO

Akamap paththarum matRu AraNac chuththarum utRu
Atharikkaikku aruNaith – thuppu mathil cUzhum

Adakac chithra maNik kOpuraththu uththara thikkAka
vetRik kalapak kaRki – amarvOnE

thOkaiyaip petRa idap pAkar otRaip pakazhith
thUNi muttac chuvaRa – thikkil ezhu pArac

chOthi veRpu ettum uthirth(thu) thULithap pattu amizhas
cUranaip pattu uruvath thotta – perumALE.