திருப்புகழ் 437 மானை விடத்தை (திருவருணை)

Thiruppugal 437 Manaividaththai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தனத்தத் தனத்த தத்தன
தான தனத்தத் தனத்த தத்தன
தான தனத்தத் தனத்த தத்தன – தனதான

மானை விடத்தைத் தடத்தி னிற்கயல்
மீனை நிரப்பிக் குனித்து விட்டணை
வாளி யைவட்டச் சமுத்தி ரத்தினை – வடிவேலை

வாளை வனத்துற் பலத்தி னைச்செல
மீனை விழிக்கொப் பெனப்பி டித்தவர்
மாய வலைப்பட் டிலைத்து டக்குழல் – மணநாறும்

ஊன விடத்தைச் சடக்கெ னக்கொழு
வூறு முபத்தக் கருத்த டத்தினை
யூது பிணத்தைக் குணத்ர யத்தொடு – தடுமாறும்

ஊச லைநித்தத் த்வமற்ற செத்தையு
பாதி யையொப்பித் துனிப்ப வத்தற
வோகை செலுத்திப் ப்ரமிக்கு மிப்ரமை – தெளியாதோ

சான கிகற்புத் தனைச்சு டத்தன
சோக வனத்திற் சிறைப்ப டுத்திய
தானை யரக்கற் குலத்த ரத்தனை – வருமாளச்

சாலை மரத்துப் புறத்தொ ளித்தடல்
வாலி யுரத்திற் சரத்தை விட்டொரு
தாரை தனைச்சுக் ரிவற்க ளித்தவன் – மருகோனே

சோனை மிகுத்துத் திரட்பு னத்தினி
லானை மதத்துக் கிடக்கு மற்புத
சோண கிரிச்சுத் தர்பெற்ற கொற்றவ – மணிநீபத்

தோள்கொ டுசக்ரப் பொருப்பி னைப்பொடி
யாக நெருக்கிச் செருக்க ளத்தெதிர்
சூர னைவெட்டித் துணித்த டக்கிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தான தனத்தத் தனத்த தத்தன
தான தனத்தத் தனத்த தத்தன
தான தனத்தத் தனத்த தத்தன – தனதான

மானை விடத்தைத் தடத்தினில் கயல்
மீனை நிரப்பிக் குனித்து விட்டு அணை
வாளியை வட்டச் சமுத்திரத்தினை – வடி வேலை

வாளை வனத்து உற்பலத்தினைச் செல
மீனை விழிக்கு ஒப்பெனப் பிடித்து அவர்
மாய வலைப் பட்டு இலைத் துடக்கு உழல் – மண(ம்) நாறும்

ஊன இடத்தைச் சடக்கு எனக் கொழு
ஊறும் உபத்தக் கருத் தடத்தினை
ஊது பிணத்தை குண த்ரயத்தொடு – தடுமாறும்

ஊசலை நித்தத்வம் அற்ற செத்தை
உபாதியை ஒப்பித்து உ(ன்)னி பவத்து அற
ஓகை செலுத்தி ப்ரமிக்கும் இப் ப்ரமை – தெளியாதோ

சானகி கற்பத் தனைச் சுட தன்
அசோக வனத்தில் சிறைப் படுத்திய
தானை அரக்கர் குலத்தர் அத்தனைவரும் – மாள

சாலை மரத்துப் புறத்து ஒளித்து அடல்
வாலி உரத்தில் சரத்தை விட்டு ஒரு
தாரை தனை சுக்ரிவற்கு அளித்தவன் – மருகோனே

சோனை மிகுத்துத் திரள் புனத்தினில்
ஆனை மதத்துக் கிடக்கும் அற்புத
சோண கிரிச் சுத்தர் பெற்ற கொற்றவ – மணி நீபத்

தோள் கொ(ண்)டு சக்ரப் பொருப்பினைப் பொடியாக
நெருக்கிச் செருக் களத்து எதிர்
சூரனை வெட்டித் துணித்து அடக்கிய – பெருமாளே.

English

mAnai vidaththaith thadaththi niRkayal
meenai nirappik kuniththu vittaNai
vALi yaivattac chamuththi raththinai – vadivElai

vALai vanaththuR palaththi naicchela
meenai vizhikkop penappi diththavar
mAya valaippat tilaiththu dakkuzhal – maNanARum

Una vidaththaic chadakke nakkozhu
vURu mupaththak karuththa daththinai
yUthu piNaththaik kuNathra yaththodu – thadumARum

Usa lainiththath thvamatRa seththaiyu
pAthi yaiyoppith thunippa vaththaRa
vOkai seluththip pramikku mipramai – theLiyAthO

sAna kikaRputh thanaicchu daththana
sOka vanaththiR chiRaippa duththiya
thAnai yarakkaR kulaththa raththanai – varumALac

chAlai maraththup puRaththo Liththadal
vAli yuraththiR charaththai vittoru
thArai thanaicchuk rivaRka Liththavan – marukOnE

sOnai mikuththuth thiratpu naththini
lAnai mathaththuk kidakku maRputha
sONa kiricchuth tharpetRa kotRava – maNineepath

thOLko duchakrap poruppi naippodi
yAka nerukkic cherukka Laththethir
cUra naivettith thuNiththa dakkiya – perumALE.

English Easy Version

mAnai vidaththaith thadaththinil kayal
meenai nirappik kuniththu vittu aNai
vALiyai vattac chamuththiraththinai – vadi vElai

vALai vanaththu uRpalaththinaic chela
meenai vizhikku oppenap pidiththu avar
mAya valaip pattu ilaith thudakku uzhal – maNa(m) nARum

Una idaththaic chadakku enak kozhu
URum upaththak karuth thadaththinai
Uthu piNaththai kuNa thrayaththodu – thadumARum

Usalai niththathvam atRa seththai
upAthiyai oppiththu u(n)ni pavaththu aRa
Okai seluththi pramikkum ip pramai – theLiyAthO

sAnaki kaRpath thanaic chuda than
asOka vanaththil chiRaip paduththiya
thAnai arakkar kulaththar aththanaivarum – mALa

chAlai maraththup puRaththu oLiththu adal
vAli uraththil charaththai vittu oru thArai
thanai sukrivaRku aLiththavan – marukOnE

sOnai mikuththuth thiraL punaththinil
Anai mathaththuk kidakkum aRputha
sONa kiric chuththar petRa kotRava – maNi neepath

thOL ko(N)du chakrap poruppinaip podiyAka
nerukkic cheruk kaLaththu ethir cUranai
vettith thuNiththu adakkiya – perumALE.