Thiruppugal 438 Mugaththulakkigal
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனத்த தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா தனதன – தந்ததான
முகத்து லக்கிக ளாசா ரவினிகள்
விலைச்சி றுக்கிகள் நேரா வசடிகள்
முழுச்ச மர்த்திகள் காமா விரகிகள் – முந்துசூது
மொழிப்ப ரத்தைகள் காசா சையில்முலை
பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ
முயற்று பொட்டிகள் மோகா வலமுறு – கின்றமூடர்
செகத்தி லெத்திகள் சார்வாய் மயகிகள்
திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள்
சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை – சிந்தைமாயத்
திரட்பொ றிச்சிகள் மாபா விகளப
கடத்த சட்டைகள் மூதே விகளொடு
திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி – யென்றுசேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு – தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
திகுத்தி குத்திகு தீதோ எனவொரு
துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் – தொணடர்பேணும்
அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்
வளர்த்த கற்பக மாஞா லியுமகி
ழவுற்ற நித்தபி ரானே அருணையில் – நின்றகோவே
அமர்க்க ளத்தொரு சூரே சனைவிழ
முறித்து ழக்கிய வானோர் குடிபுக
அமர்த்தி விட்டசு வாமீ அடியவர் – தம்பிரானே.
பதம் பிரித்தது
தனத்த தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா தனதன
தனத்த தத்தன தானா தனதன – தந்ததான
முக(ம்) துலக்கிகள் ஆசார இ(ஈ)னிகள்
விலைச் சிறுக்கிகள் நேரா அசடிகள்
முழுச் சமர்த்திகள் காமா விரகிகள் – முந்து சூது
மொழிப் பரத்தைகள் காசு ஆசையில் முலை
பலர்க்கும் விற்பவர் நானா அநுபவ(ம்)
முயற்று பொட்டிகள் மோக அவலம் உறு – கின்ற மூடர்
செகத்தில் எத்திகள் சார்வாய் மயக்கிகள்
திருட்டு மட்டைகள் மாயா சொரூபிகள்
சிரித்து உருக்கிகள் ஆகா என நகை – சிந்தை மாயத்
திரள் பொறிச்சிகள் மா பாவிகள்
அபகடத்த சட்டைகள் மூதேவிகளோடு
திளைத்தல் அற்று இரு சீர் பாதமும் இனி – என்று சேர்வேன்
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு
செகுச்செ குச்செகு சேசே செககண
தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு – தொந்ததீதோ
துடுட்டு டுட்டுடு டூடூ டுடுடுடு
திகுத்து குத்திகு தீதோ எனவொரு
துவக்க நிர்த்தனம் ஆடா உறைபவர் – தொண்டர் பேணும்
அகத்தியப்பனும் மால் வேதனும் அறம்
வளர்த்த கற்பக மா ஞாலியும் மகிழ்
உற்ற நித்த பிரானே அருணையில் – நின்ற கோவே
அமர்க் களத்து ஒரு சூர ஈசனை விழ
முறித்து உழக்கி அ(வ்) வானேர் குடி புக
அமர்த்தி விட்ட சுவாமீ அடியவர் – தம்பிரானே.
English
mukaththu lakkika LAsA ravinikaL
vilaicchi RukkikaL nErA vasadikaL
muzhuccha marththikaL kAmA virakikaL – munthucUthu
mozhippa raththaikaL kAsA saiyilmulai
palarkkum viRpavar nAnA vanupava
muyatRu pottikaL mOkA valamuRu – kinRamUdar
sekaththi leththikaL sArvAy mayakikaL
thiruttu mattaikaL mAyA sorupikaL
siriththu rukkikaL AkA venanakai – sinthaimAyath
thiratpo RicchikaL mApA vikaLapa
kadaththa sattaikaL mUthE vikaLodu
thiLaiththa latRiru seerpA thamumini – yenRusErvEn
thokuththo kuththoku thOthO thokuthoku
sekucche kuccheku sEsE sekakaNa
thokuththo kuththoku thOthO thokuthoku – thonthatheethO
thuduttu duttudu dUdU dudududu
thikuththi kuththiku theethO enavoru
thuvakka nirththana mAdA vuRaipavar – thoNadarpENum
akaththi yappanu mAlvE thanumaRam
vaLarththa kaRpaka mAnjA liyumaki
zhavutRa niththapi rAnE aruNaiyil – ninRakOvE
amarkka Laththoru cUrE sanaivizha
muRiththu zhakkiya vAnOr kudipuka
amarththi vittasu vAmee adiyavar – thambirAnE.
English Easy Version
muka(m) thulakkikaL AsAra i(ee)nikaL
vilais siRukkikaL nErA asadikaL
muzhus samarththikaL kAmA virakikaL – munthu cUthu
mozhip paraththaikaL kAsu Asaiyil mulai
palarkkum viRpavar nAnA anupava(m)
muyatRu pottikaL mOka avalam uRu – kinRa mUdar
sekaththil eththikaL sArvAy mayakkikaL
thiruttu mattaikaL mAyA sorUpikaL
siriththu urukkikaL AkA ena nakai – sinthai mAyath
thiraL poRicchikaL mA pAvikaL
apakadaththa sattaikaL mUthEvikaLOdu
thiLaiththal atRu iru seer pAthamum ini – enRu sErvEn
thokuththo kuththoku thOthO thokuthoku
sekucche kuccheku sEsE sekakaNa
thokuththo kuththoku thOthO thokuthoku – thonthatheethO
thuduttu duttudu dUdU dudududu
thikuththu kuththiku theethO enavoru
thuvakka nirththanam AdA uRaipava – thoNdar pENum
akaththiyappanum mAl vEthanum aRam
vaLarththa kaRpaka mA njAliyum makizh
utRa niththa pirAnE aruNaiyil – ninRa kOvE
amark kaLaththu oru cUra eesanai vizha
muRiththu uzhakki a(v) vAnEr kudi puka
amarththi vitta suvAmee adiyavar – thambirAnE.