Thiruppugal 442 Vidumadhavel
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதன தானாதன தனதன தானாதன
தனதன தானாதன – தனதான
விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
விழிகொடு வாபோவென – வுரையாடும்
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
ம்ருகமத கோலாகல – முலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
அவனியு மாகாசமும் – வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
அடியவ ரோடாள்வது – மொருநாளே
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
வனிதையர் தோள்தோய்தரு – மபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
மகிபச தாகாலமு – மிளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
உலகுய வாரார்கலி – வறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
ஒருதனி வேலேவிய – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதன தானாதன தனதன தானாதன
தனதன தானாதன – தனதான
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல
விழி கொ(ண்)டு வா போ என – உரை ஆடும்
விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள்
ம்ருகமத கோலாகல – முலை தோய
அடையவும் ஆசா பரவசம் உறு கோமாளியை
அவனியும் ஆகாசமும் – வசை பேசும்
அசட அநாசாரனை அவலனை ஆபாசனை
அடியவரோடு ஆள்வதும் – ஒரு நாளே
வட குல கோபாலர் தம் ஒரு பதி நூறாயிரம்
வனிதையர் தோள் தோய் தரும் – அபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
மகிப சதா காலமும் – இளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற
உலகு உய்ய வார் ஆர்கலி – வறிது ஆக
உயரிய மா நாகமும் நிருதரும் நீறாய் விழ
ஒரு தனி வேல் ஏவிய – பெருமாளே.
English
vidumatha vELvALiyin visaipeRu mAlAkala
vizhikodu vApOvena – vuraiyAdum
virakuda nURAyira manamudai mApAvikaL
mrukamatha kOlAkala – mulaithOya
adaiyavu mAsApara vasamuRu kOmALiyai
avaniyu mAkAsamum – vasaipEsum
asadA nAsAranai avalanai ApAsanai
adiyava rOdALvathu – morunALE
vadakula kOpAlartha morupathi nARAyiram
vanithaiyar thOLthOytharu – mapirAma
marakatha nArAyaNan marumaka sONAsala
makipasa thAkAlamu – miLaiyOnE
udupathi sAyApathi surapathi mAyAthuRa
ulakuya vArArkali – vaRithAka
uyariya mAnAkamu nirutharu neeRAyvizha
oruthani vElEviya – perumALE.
English Easy Version
vidu mathavEL vALiyin visai peRum AlAkala
vizhi ko(N)du vA pO ena – urai Adum
virakudan nURAyiram manam udai mA pAvikaL
mrukamatha kOlAkala – mulai thOya
adaiyavum AsA paravasam uRu kOmALiyai
avaniyum AkAsamum – vasai pEsum
asada anAsAranai avalanai ApAsanai
adiyavarOdu ALvathum – oru nALE
vada kula kOpAlar tham oru pathi nURAyiram
vanithaiyar thOL thOy tharum – apirAma
marakatha nArAyaNan marumaka sONAsala
makipa sathA kAlamum – iLaiyOnE
udupathi sAyApathi surapathi mAyAthu uRa
ulaku uyya vAr Arkali – vaRithu Aka
uyariya mA nAkamum nirutharum neeRAy vizha
oru thani vEl Eviya – perumALE.