திருப்புகழ் 443 விதி அதாகவே (திருவருணை)

Thiruppugal 443 Vidhiathagave

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தனன தானனா
தனன தானனம் – தனதான

விதிய தாகவெ பருவ மாதரார்
விரகி லேமனந் – தடுமாறி

விவர மானதொ ரறிவு மாறியே
வினையி லேஅலைந் – திடுமூடன்

முதிய மாதமி ழிசைய தாகவே
மொழிசெய் தேநினைந் – திடுமாறு

முறைமை யாகநி னடிகள் மேவவே
முனிவு தீரவந் – தருள்வாயே

சதிய தாகிய அசுரர் மாமுடீ
தரணி மீதுகுஞ் – சமராடிச்

சகல லோகமும் வலம தாகியே
தழைய வேவருங் – குமரேசா

அதிக வானவர் கவரி வீசவே
அரிய கோபுரந் – தனில்மேவி

அருணை மீதிலெ மயிலி லேறியே
அழக தாய்வரும் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தனன தானனா
தனன தானனம் – தனதான

விதி அதாகவே பருவ மாதரார்
விரகிலே மனம் – தடுமாறி

விவரமானது ஓர் அறிவு மாறியே
வினையிலே அலைந் – திடு மூடன்

முதிய மா தமிழ் இசை அதாகவே
மொழி செய்தே – நினைந்திடுமாறு

முறைமையாக நின் அடிகள் மேவவே
முனிவு தீர வந்து – அருள்வாயே

சதி அதாகிய அசுரர் மா முடி
தரணி மீது உகும் – சமர் ஆடி

சகல லோகமும் வலம் அதாகியே
தழையவே வரும் – குமரேசா

அதிக வானவர் கவரி வீசவே
அரிய கோபுரம் – தனில் மேவி

அருணை மீதிலெ மயிலில் ஏறியே
அழகு அதாய் வரும் – பெருமாளே.

English

vidhi adhAgave paruva mAdharAr
viragilE manam – thadumARi

vivara mAnadhor aRivu mARiyE
vinaiyilE alain – dhidu mUdan

mudhiya mAthamizh isai adhAgavE
mozhi seydhE ninaindh – idumARu

muRaimai yAga nin adigaL mEvavE
munivu theera vandh – aruLvAyE

sadhi adhAgiya asurar mAmudee
dharaNi meedh ugum – samarAdi

sakala lOkamum valama dhAgiyE
thazhaiyavE varung – kumarEsA

adhika vAnavar kavari veesavE
ariya gOpuran – thanil mEvi

aruNai meedhile mayilil EriyE
azhagadhAy varum – perumALE.

English Easy Version

vidhi adhAgave paruva mAdharAr
viragilE manam – thadumARi

vivara mAnadhor aRivu mARiyE
vinaiyilE alaindhidu – mUdan

mudhiya mAthamizh isai adhAgavE
mozhi seydhE ninaindh – idumARu

muRaimai yAga nin adigaL mEvavE
munivu theera vandh – aruLvAyE

sadhi adhAgiya asurar mAmudee
dharaNi meedh ugum – samarAdi

sakala lOkamum valama dhAgiyE
thazhaiyavE varung – kumarEsA

adhika vAnavar kavari veesavE
ariya gOpuran – thanil mEvi

aruNai meedhile mayilil EriyE
azhagadhAy varum – perumALE.