திருப்புகழ் 445 வீறு புழுகான பனி (திருவருணை)

Thiruppugal 445 Veerupuzhuganapani

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன – தனதான

வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு
மேருகிரி யானகொடு – தனபார

மீதுபுர ளாபரண சோதிவித மானநகை
மேகமனு காடுகட – லிருள்மேவி

நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள
நாணமழி வார்களுட – னுறவாடி

நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின்
ஞானசிவ மானபத – மருள்வாயே

கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய
கோலமயி லானபத – மருள்வோனே

கூடஅர னோடுநட மாடரிய காளியருள்
கூருசிவ காமியுமை – யருள்பாலா

ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன
மாரவிளை யாடிமண – மருள்வோனே

ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய
ஆதியரு ணாபுரியில் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன – தனதான

வீறு புழுகான பனிநீர்கள் மல(ம்) தோயல் விடு
மேரு கிரியான கொடு – தன பார

மீது புரள ஆபரண சோதி விதமான நகை
மேகம் அனு காடு கடல் – இருள் மேவி

நாறு மலர் வாச மயிர் நூல் இடையதே துவள
நாணம் அழிவார்கள் உடன் – உறவாடி

நாடி அதுவே கதி எனா சுழலு(ம்) மோடனை
நின் ஞான சிவமான பதம் – அருள்வாயே

கூறும் அடியார்கள் வினை நீறுபடவே அரிய
கோல மயிலான பதம் – அருள்வாயே

கூட அரனோடே நடமாடு அரிய காளி அருள்
கூரும் சிவகாமி உமை – அருள் பாலா

ஆறு முகமான நதி பால குற மாது தனம்
ஆர விளையாடி மணம் – அருள்வோனே

ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய
ஆதி அருணா புரியில் – பெருமாளே.

English

veeRupuzhu kAnapani neerkaLmala thOyalvidu
mErukiri yAnakodu – thanapAra

meethupura LAparaNa sOthivitha mAnanakai
mEkamanu kAdukada – liruLmEvi

nARumalar vAsamayir nUlidaiya thEthuvaLa
nANamazhi vArkaLuda – nuRavAdi

nAdiyathu vEkathiye nAsuzhalu mOdanainin
njAnasiva mAnapatha – maruLvAyE

kURumadi yArkaLvinai neeRupada vEariya
kOlamayi lAnapatha – maruLvOnE

kUdAra nOdunada mAdariya kALiyaruL
kUrusiva kAmiyumai – yaruLbAlA

ARumuka mAnanathi pAlakuRa mAthuthana
mAraviLai yAdimaNa – maruLvOnE

Athiraku rAmajaya mAlinmaru kAperiya
Athiyaru NApuriyil – perumALE.

English Easy Version

veeRu puzhukAna panineerkaL mala(m) thOyal vidu
mEru kiriyAna kodu – thana pAra

meethu puraLa AparaNa sOthi vithamAna nakai
mEkam anu kAdu kadal – iruL mEvi

nARu malar vAsa mayir nUl idaiyathE thuvaLa
nANam azhivArkaL udan – uRavAdi

nAdi athuvE kathi enA suzhalu(m) mOdanai nin
njAna sivamAna patham – aruLvAyE

kURum adiyArkaL vinai neeRupadavE ariya
kOla mayilAna patham – aruLvAyE

kUda aranOdE nadamAdu ariya kALi aruL
kUrum sivakAmi umai – aruL pAlA

ARu mukamAna nathi pAla kuRa mAthu thanam
Ara viLaiyAdi maNam – aruLvOnE

Athi rakurAma jaya mAlin marukA periya
Athi aruNA puriyil – perumALE.