திருப்புகழ் 446 சரக்கு ஏறி இத்த (திருக்காளத்தி)

Thiruppugal 446 Sarakkueriiththa

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத் – தனதான

சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் – செயல்மேவிச்

சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் – குடிபேணிக்

குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் – படுவேனைக்

குறித்தே முத்திக் குமறா வின்பத்
தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் – கழல்தாராய்

புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் – றருள்வோனே

புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் – தருள்வோனே

திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் – புணர்வோனே

சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத்
தனத்தா தத்தத் தனனா தந்தத் – தனதான

சரக்கு ஏறி இத்தப் பதி வாழ் தொந்தப்
பரிக் காயத்தில் பரிவோடு ஐந்து
சதி காரர் புக்கு உலை மேவு இந்தச் – செயல் மேவி

சலித்தே மெத்தச் சமுசாரம் பொன்
சுகித்தே சுற்றத்தவரோடு இன்ப(ம்)
தழைத்தே மெச்ச தயவோடு இந்தக் – குடி பேணி

குரக்கோணத்தில் கழு நாய் உண்ப
குழிக்கே வைத்துச் சவமாய் நந்து
இக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் – படுவேனை

குறித்தே முத்திக்கு ம(மா)றா இன்பத்
தடத்தே பற்றி சக மாயம் பொய்க்
குலம் கால் வற்ற சிவ ஞானம் பொன் – கழல் தாராய்

புரக் காடு அற்றுப் பொடியாய் மங்க
கழைச் சாபத்து ஐச் சடலான் உங்க
புகைத் தீ பற்ற அப்புகலோர் அன்புற்று – அருள்வோனே

புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்ச
தனிக்கோலத்துப் புகு சூர் மங்க
புகழ்ப் போர் சத்திக்கு இரையா ஆநந்தத்து – அருள்வோனே

திருக் கானத்தில் பரிவோடு அந்தக்
குறக் கோலத்துச் செயலாள் அஞ்ச
திகழ்ச்சீர் அத்திக்கு அழல் வா என்பப் – புணர்வோனே

சிவப் பேறுக்குக் கடையேன் வந்து உள்
புக சீர் வைத்துக் கொ(ள்)ளு ஞானம் பொன்
திருக் காளத்திப் பதி வாழ் கந்தப் – பெருமாளே.

English

sarak kERiththap padhivAzh thondhap
parik kAyththiR parivOd aindhu
sadhikkArarp pukkulai mEvindha – seyal mEvi

saliththE meththa samusAram poR
sukiththE sutrath thavarOd inbath
thazhaiththE mechchath thayavOd indhak – kudipENik

kurak kONaththiR kazhu nAy uNbak
kuzhikkE vaiththuch savamAy nandhik
kudiRkE naththip pazhudhAy mangap – paduvEnaik

kuRiththE muththik kumaRA inbath
thadaththE patrich jagamAyam poyk
kulakkAl vatra sivanyAnam poR – kazhal thArAy

pura kAdatrup podiyAy mangak
kazhai chApaththai sadalA nungap
pugai thee patrap pugalOr anbutr – aruLvOnE

pudaiththE ettuth dhisaiyOr anjath
thani kOlaththup pugusUr mangap
pugazhp pOr saththik irai Anadhath – tharuLvOnE

thiru kAnaththiR parivOd andhak
kuRa kOlaththuch seyalAL anjath
thigazh seeraththik kazhalvA enbap – puNarvOnE

sivap pERukkuk kadaiyEn vandhut
pugachcheer vaiththuk koLu nyAnam po
trirukkaLaththip padhi vAzh kandhap – perumALE.

English Easy Version

sarak kERiththap padhivAzh thondhap
parik kAyththil parivOd aindhu
sadhikkArarp pukku ulai mEvindha – seyal mEvi

saliththE meththa samusAram poR
sukiththE sutrath thavarOd inbath
thazhaiththE mechcha thayavOd indhak – kudipENik

kurak kONaththiR kazhu nAy uNbak
kuzhikkE vaiththu savamAy nandhik
kudiRkE naththip pazhudhAy mangap – paduvEnai

kuRiththE muththik kumaRA inbath
thadaththE patri jagamAyam poyk
kulakkAl vatra: sivanyAnam poR – kazhal thArAy

pura kAdatrup podiyAy manga
kazhai chApaththai sadalAn unga
pugai thee patrap pugalOr anbutr – aruLvOnE

pudaiththE ettuth dhisaiyOr anja
thanik kOlaththup pugusUr manga
pugazhp pOr saththik irai Anadhath – tharuLvOnE

thiruk kAnaththiR parivOdu andhak
kuRa kOlaththuch seyalAL anja
thigazh seeraththik kazhalvA enbap – puNarvOnE

sivap pERukkuk kadaiyEn vandhut
puga cheer vaiththuk koLu nyAnam po
trirukkaLaththip padhi vAzh kandhap – perumALE.