திருப்புகழ் 448 பங்கயனார் (திருக்காளத்தி)

Thiruppugal 448 Pangkayanar

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த தானன தனதான

பங்கய னார்பெற் றிடுஞ்ச ராசர
அண்டம தாயுற் றிருந்த பார்மிசை
பஞ்சவர் கூடித் திரண்ட தோர்நர – உருவாயே

பந்தம தாகப் பிணிந்த ஆசையில்
இங்கித மாகத் திரிந்து மாதர்கள்
பண்பொழி சூதைக் கடந்தி டாதுழல் – படிறாயே

சங்கட னாகித் தளர்ந்து நோய்வினை
வந்துடல் மூடக் கலங்கி டாமதி
தந்தடி யேனைப் புரந்தி டாயுன – தருளாலே

சங்கரர் வாமத் திருந்த நூபுர
சுந்தரி யாதித் தருஞ்சு தாபத
தண்டைய னேகுக் குடம்ப தாகையின் – முருகோனே

திங்களு லாவப் பணிந்த வேணியர்
பொங்கர வாடப் புனைந்த மார்பினர்
திண்சிலை சூலத் தழுந்து பாணியர் – நெடிதாழ்வார்

சிந்துவி லேயுற் றெழுந்த காளவி
டங்கள மீதிற் சிறந்த சோதியர்
திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய – குருநாதா

சிங்கம தாகத் திரிந்த மால்கெரு
வம்பொடி யாகப் பறந்து சீறிய
சிம்புள தாகச் சிறந்த காவென – வருகோமுன்

செங்கதி ரோனைக் கடிந்த தீவினை
துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய
தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த தானன
தந்தன தானத் தனந்த தானன தனதான

பங்கயனார் பெற்றிடும் சர(ம்) அசர(ம்)
அண்டமதாய் உற்றிருந்த பார் மிசை
பஞ்சவர் கூடித் திரண்டது ஓர் நர – உருவாயே

பந்தமது ஆகப் பிணிந்த ஆசையில்
இங்கிதமாகத் திரிந்து மாதர்கள்
பண்பு ஒழி சூதைக் கடந்திடாது – உழல் படிறு ஆயே

சங்கடன் ஆகித் தளர்ந்து நோய் வினை
வந்து உடல் மூட கலங்கிடா மதி
தந்து அடியேனைப் புரந்திடாய் உனது – அருளாலே

சங்கரர் வாமத்து இருந்த நூபுர
சுந்தரி ஆதி தரும் சுதா பத
தண்டையனே குக்குடம் பதாகையின் – முருகோனே

திங்கள் உலாவப் பணிந்த வேணியர்
பொங்கு அரவு ஆடப் புனைந்த மார்பினர்
திண் சிலை சூலத்து அழுந்து பாணியர் – நெடிது ஆழ்வார்

சிந்துவிலே உற்று எழுந்த காள விடம்
கள(ம்) மீதில் சிறந்த சோதியர்
திண் புய(ம்) மீதில் தவழ்ந்து வீறிய – குருநாதா

சிங்கமதாகத் திரிந்த மால் கெருவம்
பொடியாக பறந்து சீறிய
சிம்புளதாகச் சிறந்து அகா என – வரு கோ முன்

செம் கதிரோனைக் கடிந்த தீ வினை
துஞ்சிடவே நல் தவம் செய்து ஏறிய
தென்கயிலாயத்து அமர்ந்து வாழ்வருள் – பெருமாளே.

English

pangaya nArpet Ridunca rAcara
aNdama thAyut Riruntha pArmisai
panjavar kUdith thiraNda thOrnara – uruvAyE

panthama thAkap piNintha Asaiyil
ingitha mAkath thirinthu mAtharkaL
paNpozhi cUthaik kadanthi dAthuzhal – padiRAyE

sankada nAkith thaLArnthu nOyvinai
vanthudal mUdak kalangi dAmathi
thanthadi yEnaip puranthi dAyuna – tharuLAlE

sankarar vAmath thiruntha nUpura
sunthari yAthith tharuncu thApatha
thaNdaiya nEkuk kudampa thAkaiyin – murukOnE

thingaLu lAvap paNintha vENiyar
pongara vAdap punaintha mArpinar
thiNsilai cUlath thazhunthu pANiyar – nedithAzhvAr

sinthuvi lEyut Rezhuntha kALavi
dankaLa meethiR ciRantha sOthiyar
thiNpuya meethiR Ravazhnthu veeRiya – gurunAthA

singama thAkath thirintha mAlkeru
vampodi yAkap paRanthu seeRiya
simpuLa thAkac ciRantha kAvena – varukOmun

senkathi rOnaik kadintha theevinai
thunjida vEnat Ravancey thERiya
thenkayi lAyath thamarnthu vAzhvaruL – perumALE.

English Easy Version

pangaya nArpet Ridunca rAcara
aNdama thAyut Riruntha pArmisai
panjavar kUdith thiraNda thOrnara – uruvAyE

panthama thAkap piNintha Asaiyil
ingitha mAkath thirinthu mAtharkaL
paNpozhi cUthaik kadanthi dAthuzhal – padiRAyE

sankada nAkith thaLArnthu nOyvinai
vanthudal mUda kalangi dAmathi
thanthadi yEnaip puranthi dAyuna – tharuLAlE

sankarar vAmath thiruntha nUpura
sunthari yAthith tharum cuthA
patha thaNdaiya nEkuk kudampa thAkaiyin – murukOnE

thingaLu lAvap paNintha vENiyar
pongara vAdap punaintha mArpinar
thiNsilai cUlath thazhunthu pANiyar – nedithAzhvAr

sinthuvi lEyut Rezhuntha kALavidan
kaLa meethiR ciRantha sOthiyar
thiNpuya meethiR Ravazhnthu veeRiya – gurunAthA

singama thAkath thirintha mAlkeru
vampodi yAka paRanthu seeRiya
simpuLa thAkac ciRantha kAvena – varukO mun

senkathi rOnaik kadintha theevinai
thunjidavE nat Ravancey thERiya
thenkayi lAyath thamarnthu vAzhvaruL – perumALE.