Thiruppugal 449 Kanagasabaimevum
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் – தனதானா
கனகசபை மேவு மெனதுகுரு நாத
கருணைமுரு கேசப் – பெருமாள்காண்
கனகநிற வேத னபயமிட மோது
கரகமல சோதிப் – பெருமாள்காண்
வினவுமடி யாரை மருவிவிளை யாடு
விரகுரச மோகப் – பெருமாள்காண்
விதிமுநிவர் தேவ ரருணகிரி நாதர்
விமலசர சோதிப் – பெருமாள்காண்
சனகிமண வாளன் மருகனென வேத
சதமகிழ்கு மாரப் – பெருமாள்காண்
சரணசிவ காமி யிரணகுல காரி
தருமுருக நாமப் – பெருமாள்காண்
இனிதுவன மேவு மமிர்தகுற மாதொ
டியல்பரவு காதற் – பெருமாள்காண்
இணையிலிப தோகை மதியின்மக ளோடு
மியல்புலியுர் வாழ்பொற் – பெருமாளே.
பதம் பிரித்தது
தனதனன தான தனதனன தான
தனதனன தானத் – தனதானா
கனகசபை மேவும் எனதுகுரு நாத
கருணைமுருகேசப் – பெருமாள்காண்
கனகநிற வேதன் அபயமிட மோது
கரகமல சோதிப் – பெருமாள்காண்
வினவுமடியாரை மருவிவிளையாடு
விரகு ரச மோகப் – பெருமாள்காண்
விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர்
விமல சர சோதிப் – பெருமாள்காண்
சனகிமணவாளன் மருகனென வேத
சதமகிழ்குமாரப் – பெருமாள்காண்
சரணசிவ காமி இரணகுல காரி
தருமுருக நாமப் – பெருமாள்காண்
இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு
இயல்பரவு காதற் – பெருமாள்காண்
இணையில் இப தோகை மதியின்மகளோடு
இயல்புலியுர் வாழ்பொற் – பெருமாளே.
English
kanaka sabai mEvum enadhu gurunAtha
karuNai murugEsap – perumAL kAN
kanaka niRa vEdhan abayam ida mOdhu
kara kamala jOthi – perumAL kAN
vinavum adiyArai maruvi viLaiyAdu
viragu rasa mOhap – perumAL kAN
vidhi munivar dhEvar aruNagiri nAthar
vimala sara jOthip – perumAL kAN
janaki maNavALan marugan ena vEdha
satha magizh kumArap – perumAL kAN
saraNa sivakAmi iraNa kula kAri
tharu muruga nAmap – perumAL kAN
inidhu vana mEvum amirtha kuRa mAdhodu
iyal paravu kAdhal – perumAL kAN
iNai ilipa thOgai madhiyin magaLOdum
iyal puliyur vAzh poR – perumALE.
English Easy Version
kanaka sabai mEvum enadhu gurunAtha
karuNai murugEsap – perumAL kAN
kanaka niRa vEdhan abayam ida mOdhu
kara kamala jOthi – perumAL kAN
vinavum adiyArai maruvi viLaiyAdu
viragu rasa mOhap – perumAL kAN
vidhi munivar dhEvar aruNagiri nAthar
vimala sara jOthip – perumAL kAN
janaki maNavALan marugan ena vEdhasatha
magizh kumArap – perumAL kAN
saraNa sivakAmi iraNa kula kAri
tharu muruga nAmap – perumAL kAN
inidhu vana mEvum amirtha kuRa mAdhodu
iyal paravu kAdhal – perumAL kAN
iNai ilipa thOgai madhiyin magaLOdum
iyal puliyur vAzh poR – perumALE.