திருப்புகழ் 451 இருவினையின் மதி (சிதம்பரம்)

Thiruppugal 451 Iruvinaiyinmadhi

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதனன தனன தந்தத் – தனதானா
தனதனன தனன தந்தத் – தனதானா

இருவினையின் மதிம யங்கித் – திரியாதே
எழுநரகி லுழலு நெஞ்சுற் – றலையாதே

பரமகுரு அருள்நி னைந்திட் – டுணர்வாலே
பரவுதரி சனையை யென்றெற் – கருள்வாயே

தெரிதமிழை யுதவு சங்கப் – புலவோனே
சிவனருளு முருக செம்பொற் – கழலோனே

கருணைநெறி புரியு மன்பர்க் – கெளியோனே
கனகசபை மருவு கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதனன தனன தந்தத் – தனதானா
தனதனன தனன தந்தத் – தனதானா

இருவினையின் மதிம யங்கி – திரியாதே
எழுநரகில் உழலும் நெஞ்சுற்று – அலையாதே

பரமகுரு அருள்நினைந்திட்டு – உணர்வாலே
பரவுதரி சனையை என்று எற்கு – அருள்வாயே

தெரிதமிழை உதவு சங்கப் – புலவோனே
சிவனருளு முருக செம்பொற் – கழலோனே

கருணைநெறி புரியும் அன்பர்க் – கெளியோனே
கனகசபை மருவு கந்தப் – பெருமாளே.

English

iru vinaiyin madhi mayangith – thiriyAdhE
ezhu naragil uzhalu nenjutr – alaiyAdhE

paramaguru aruL ninaindhittu – uNarvAlE
paravu dharisanaiyai endreRk – aruLvAyE

theri thamizhai udhavu sangap – pulavOnE
sivanaruLu muruga sempoR – kazhalOnE

karuNai neRi puriyum anbark – eLiyOnE
kanakasabai maruvu kandhap – perumALE.

English Easy Version

iru vinaiyin madhi mayangith – thiriyAdhE
ezhu naragil uzhalu nenjutr – alaiyAdhE

paramaguru aruL ninaindhittu – uNarvAlE
paravu dharisanaiyai endreRk – aruLvAyE

theri thamizhai udhavu sangap – pulavOnE
sivanaruLu muruga sempoR – kazhalOne

karuNai neRi puriyum anbark – eLiyOnE
kanakasabai maruvu kandhap – perumALE.