திருப்புகழ் 452 குகனே குருபரனே (சிதம்பரம்)

Thiruppugal 452 Guganegurubarane

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத் – தனதான

குகனெ குருபர னேயென நெஞ்சிற்
புகழ அருள்கொடு நாவினி லின்பக்
குமுளி சிவவமு தூறுக வுந்திப் – பசியாறிக்

கொடிய இருவினை மூலமும் வஞ்சக்
கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக்
குலைய நமசிவ யோமென கொஞ்சிக் – களிகூரப்

பகலு மிரவுமி லாவெளி யின்புக்
குறுகி யிணையிலி நாடக செம்பொற்
பரம கதியிது வாமென சிந்தித் – தழகாகப்

பவள மனதிரு மேனியு டன்பொற்
சரண அடியவ ரார்மன வம்பொற்
றருண சரண்மயி லேறியு னம்பொற் – கழல்தாராய்

தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட் – டியல்தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச் – சமரேறிக்

ககன மறைபட ஆடிய செம்புட்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக்
கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் – தொடும்வேலா

கயிலை மலைதனி லாடிய தந்தைக்
குருக மனமுன நாடியெ கொஞ்சிக்
கனக சபைதனில் மேவிய கந்தப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத்
தனன தனதன தானன தந்தத் – தனதான

குகனே குருபரனே என நெஞ்சில்
புகழ அருள் கொடு நாவினில் இன்ப
குமுளி சிவ அமுது ஊறுக உந்திப் – பசி ஆறி

கொடிய இரு வினை மூலமும் வஞ்ச
கலிகள் பிணி இவை வேரொடு சிந்திக்
குலைய நம சிவ ஓம் என கொஞ்சி – களி கூர

பகலும் இரவும் இலா வெளி இன்பு
குறுகி இணை இலி நாடக செம் பொன்
பரம கதி இதுவாம் என சிந்தித்து – அழகாக

பவளம் அன திரு மேனியுடன் பொன்
சரண அடியவரார் ம(ன்)ன அம் பொன்
தருண சரண் மயில் ஏறி உன் அம் பொன் – கழல் தாராய்

தகுட தகுதகு தாதக தந்தத்
திகுட திகுதிகு தீதக தொந்தத்
தடுடு டுடுடுடு டாடக டிங்குட்டு – இயல்தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பை
கரடி தமருகம் வீணைகள் பொங்க
தடி அழனம் உக மாருதம் சண்ட – சமர் ஏறி

ககனம் மறை பட ஆடிய செம் புள்
பசிகள் தணிவுற சூரர்கள் மங்க
கடல்கள் எறி பட நாகமும் அஞ்ச – தொடும் வேலா

கயிலை மலை தனில் ஆடிய தந்தைக்கு
உருக மனம் முனம் நாடியே கொஞ்சி
கனக சபைதனில் மேவிய கந்தப் – பெருமாளே.

English

gukane gurupara nEyena nenjiR
pukazha aruLkodu nAvini linpak
kumuLi sivavamu thURuka vunthip – pasiyARi

kodiya iruvinai mUlamum vanjak
kalikaL piNiyivai vErodu sinthik
kulaiya namasiva yOmena konjik – kaLikUrap

pakalu miravumi lAveLi yinpuk
kuRuki yiNaiyili nAtaka sempoR
parama kathiyithu vAmena sinthith – thazhakAkap

pavaLa manathiru mEniyu danpoR
caraNa adiyava rArmana vampot
RaruNa saraNmayi lERiyu nampoR – kazhalthArAy

thakuda thakuthaku thAthaka thanthath
thikuda thikuthiku theethaka thonthath
thadudu dudududu dAdaka dingut – tiyalthALam

thapalai thimilaikaL pUrikai pampaik
karadi thamarukam veeNaikaL pongkath
thadiya zhanavuka mArutha caNdac – camarERik

kakana maRaipada Adiya cemput
pasikaL thaNivuRa cUrarkaL mangkak
kadalka LeRipada nAkamu manjath – thodumvElA

kayilai malaithani lAdiya thanthaik
kuruka manamuna nAdiye konjik
kanaka sapaithanil mEviya kanthap – perumALE.

English Easy Version

gukanE guruparanE ena nenjil
pukazha aruL kodu nAvinil inpa
kumuLi siva amuthu URuka unthip – pasi Ari

kodiya iru vinai mUlamum vanja
kalikaL piNi ivai vErodu sinthik
kulaiya nama siva Om ena konji – kaLi kUra

pakalum iravum ilA veLi inpu
kuRuki iNai ili nAdaka sem pon
parama kathi ithuvAm ena sinthiththu – azhakAka

pavaLam ana thiru mEniyudan pon
saraNa adiyavarAr ma(n)na am pon
tharuNa saraN mayil Eri un am pon – kazhal thArAy

thakuda thakuthaku thAthaka than-thath
thikuda thikuthiku theethaka thon-thath
thadudu dudududu dAdaka dingkuddu – iyalthALam

thapalai thimilaikaL pUrikai pampai
karadi thamarukam veeNaikaL ponga
thadi azhanam uka mArutham saNda – samar Eri

kakanam maRai pada Adiya sem puL
pasikaL thaNivuRa cUrarkaL manga
kadalkaL eRi pada nAkamum anja – thodum vElA

kayilai malai thanil Adiya thanthaikku
uruka manam munam nAdiyE konji
kanaka sapaithanil mEviya kanthap – perumALE.