திருப்புகழ் 453 வண்டையொத்து (சிதம்பரம்)

Thiruppugal 453 Vandaiyoththu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன – தந்ததான

வண்டையொத் துக்கயல் கண்சுழற் றுப்புரு
வஞ்சிலைக் குத்தொடு அம்பையொத் துத்தொடை
வண்டுசுற் றுக்குழல் கொண்டலொத் துக்கமு – கென்பக்ரீவம்

மந்தரத் தைக்கட பொங்கிபத் துப்பணை
கொம்பையொத் துத்தன முந்துகுப் பத்தெரு
வந்துஎத் திப்பொரு மங்கையர்க் கைப்பொரு – ளன்பினாலே


கொண்டழைத் துத்தழு வுங்கைதட் டிற்பொருள்
கொண்டுதெட் டிச்சர சம்புகழ்க் குக்குன
குங்குழற் கிப்படி நொந்துகெட் டுக்குடில் – மங்குறாமல்

கொண்டுசத் திக்கட லுண்டுகுப் பத்துனி
னன்பருக் குச்செயல் தொண்டுபட் டுக்கமழ்
குங்குமத் திற்சர ணம்பிடித் துக்கரை – யென்றுசேர்வேன்

அண்டமிட் டிக்குட டிண்டிமிட் டிக்குகு
டந்தகொட் டத்தகு டிங்குதொக் கத்தம
டஞ்சகட் டைக்குண கொம்புடக் கைக்கிட – லென்பதாளம்

அண்டமெட் டுத்திசை யும்பல்சர்ப் பத்திரள்
கொண்டல்பட் டுக்கிரி யும்பொடித் துப்புல
னஞ்சவித் துத்திர ளண்டமுட் டத்துகள் – வந்தசூரர்

கண்டமற் றுக்குட லென்புநெக் குத்தச
னங்கடித் துக்குடி லஞ்சிவப் பச்செநிர்
கண்தெறிக் கத்தலை பந்தடித் துக்கையி – லங்குவேலால்


கண்களிக் கக்கக னந்துளுக் கப்புக
ழிந்திரற் குப்பதம் வந்தளித் துக்கன
கம்பலத் திற்குற மங்கைபக் கத்துறை – தம்பிரானே.

பதம் பிரித்தது

தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன
தந்தனத் தத்தன தந்தனத் தத்தன – தந்ததான

வண்டை ஒத்துக் கயல் கண் சுழற்றுப் புருவம்
சிலைக்குத் தொடு அம்பை ஒத்துத் தொடை
வண்டு சுற்றுக் குழல் கொண்டல் ஒத்து கமுகு – என்ப க்ரீவம்


மந்தரத்தைக் கட(ம்) பொங்கு இபத்துப் பணை
கொம்பை ஒத்துத் தனம் முந்து கு(கூ)ப்ப தெரு
வந்து எத்திப் பொரு மங்கையர்க் கைப் பொருள் – அன்பினாலே

கொண்டு அழைத்துத் தழுவும் கை தட்டில் பொருள்
கொண்டு தெட்டிச் சரசம் புகழ்க்குக் குனகும்
குழற்கு இப்படி நொந்து கெட்டுக் குடில் – மங்கு உறாமல்

கொண்டு சத்திக் கடல் உண்டு உகப்பத் துன் நின் அன்பருக்குச் செயல் தொண்டு பட்டுக் கமழ்
குங்குமத்தில் சரணம் பிடித்துக் கரை என்று – சேர்வேன்

அண்டம் மிட்டிக் குட டிண்டிமிட்டிக்கு
குடந்த கொட்டத் தகு டிங்கு தொக்கத் தமடம்
சகட்டைக் குண கொம்பு (இ)டக்கைக்கு இடல் – என்ப தாளம்

அண்டம் எட்டுத் திசை உ(ம்)பல் சர்ப்பத் திரள்
கொண்டல் பட்டுக் கிரியும் பொடித்து புலன்
அஞ்சு அவித்துத் திரள் அண்டம் முட்டத் துகள் – வந்த சூரர்

கண்டம் அற்றுக் குடல் என்பு நெக்குத் தசனம்
கடித்துக் குடிலம் சிவப்பச் செ(ந்)நீர்
கண் தெறிக்கத் தலை பந்து அடித்துக் கையில் – இலங்கு வேலால்

கண் களிக்கக் ககனம் துளுக்கப் புகழ்
இந்திரற்குப் பதம் வந்து அளித்துக் கனக
அம்பலத்தில் குற மங்கை பக்கத்து உறை – தம்பிரானே.

English

vaNdaiyoth thukkayal kaNsuzhat Ruppuru
vanjilaik kuththodu ampaiyoth thuththodai
vaNdusut Rukkuzhal koNdaloth thukkamu – kenpakreevam

mantharath thaikkada pongipath thuppaNai
kompaiyoth thuththana munthukup paththeru
vanthueth thipporu mangaiyark kaipporu – LanpinAlE

koNdazhaith thuththazhu vungaithat tiRporuL
koNduthet ticchara sampukazhk kukkuna
kunguzhaR kippadi nonthuket tukkudil – manguRAmal

koNdusath thikkada luNdukup paththuni
nanparuk kuccheyal thoNdupat tukkamazh
kungumath thiRchara Nampidith thukkarai – yenRusErvEn

aNdamit tikkuda diNdimit tikkuku
danthakot taththaku dinguthok kaththama
danjakat taikkuNa kompudak kaikkida – lenpathALam

aNdamet tuththisai yumpalsarp paththiraL
koNdalpat tukkiri yumpodith thuppula
nanjavith thuththira LaNdamut taththukaL – vanthacUrar

kaNdamat Rukkuda lenpunek kuththasa
nangadith thukkudi lanjivap pacchenir
kaNtheRik kaththalai panthadith thukkaiyi – languvElAl

kaNkaLik kakkaka nanthuLuk kappuka
zhinthiraR kuppatham vanthaLith thukkana
kampalath thiRkuRa mangaipak kaththuRai – thambirAnE.

English Easy Version

vaNdai oththuk kayal kaN suzhatrup
puruvam silaikkuth thodu ampai oththuth thodai
vaNdu sutruk kuzhal koNdal oththu kamuku – enpa kreevam

mantharaththaik kada(m) pongu ipaththup paNai
kompai oththuth thanam munthu ku(kU)ppa theru
vanthu eththip poru mangaiyark kaip poruL – anpinAlE

koNdu azhaiththuth thazhuvum kai thattil poruL
koNdu thettic charasam pukazhkkuk kunakum
kuzhaRku ippadi nonthu kettuk kudil – mangu uRAmal

koNdu saththik kadal uNdu ukappath thun nin
anparukkuc cheyal thoNdu pattuk kamazh
kungumaththil charaNam pidiththuk karai – enRu sErvEn

aNdam mittik kuda diNdimittikku
kudantha kottath thaku dingu thokkath thamadam
sakattaik kuNa kompu (i)dakkaikku idal – enpa thALam

aNdam ettuth thisai u(m)pal sarppath thiraL
koNdal pattuk kiriyum podiththu pulan
anju aviththuth thiraL aNdam muttath thukaL – vantha cUrar

kaNdam atruk kudal enpu nekkuth thasanam
kadiththuk kudilam sivappac che(n)neer
kaN theRikkath thalai panthu adiththuk kaiyil – ilangu vElAl

kaN kaLikkak kakanam thuLukkap pukazh
inthiraRkup patham vanthu aLiththuk kanaka
ampalaththil kuRa mangai pakkaththu uRai – thambirAnE.